Tuesday, December 1, 2020

".சாவோ வாழ்வோ,இறை அன்பிலிருந்த நம்மைப் பிரிக்க முடியாது."

http://lrdselvam.blogspot.com/2020/12/blog-post.html


".சாவோ வாழ்வோ,
இறை அன்பிலிருந்த நம்மைப் பிரிக்க முடியாது."



ஒரு ஊரில் ஒரு குளம் இருந்தது.

அந்தக் குளத்தில் ஒரு நண்டு வசித்து வந்தது

அக்குளத்திற்கு மீன் பிடிப்பதற்காக தினமும் பல பறவைகள் வரும்.

அவற்றுள் இரண்டு கொக்குகள் நண்டுடன் மிக நட்பாக இருந்தன.

இம்மூன்றும் மணிக்கணக்காய் பேசிக் கொண்டிருப்பது வழக்கம்.

சில சமயங்களில் கொக்குகள் மீன் பிடிக்க வந்ததையே மறந்து நண்டுடன் பேசிக் கொண்டிருக்கும்.

அப்படி என்னதான் பேசிக் கொள்ளுமோ!

ஒரு ஆண்டு மழை பொய்த்து விட்டது.

குளம் வற்றிவிட்டது.

கொக்குகளுக்கு மீன் கிடைக்கவில்லை.

ஆகவே தண்ணீர் உள்ள வேறு குளத்திற்குப் போகத் தீர்மானித்தன.

நண்டை விட்டுப் பிரியவும் அவற்றுக்கு மனதில்லை.

விபரத்தை நண்டிடம் சொன்னன.

"தயவு செய்து எங்கே சென்றாலும் என்னையும் அழைத்துச் சென்று விடுங்கள்."

"எங்களுக்கும் அதுதான் ஆசை.
ஆனால் உன்னால் பறக்க முடியாதே!

அப்போ ஒண்ணு செய்வோம்.
ஒரு குச்சியைக் கொண்டு வருகிறோம். அதன் மத்தியை நீ வாயால் கௌவிக்கொள். நாங்கள் குச்சியின் இரு புறங்களையும் ஆளுக்கொரு புறமாகக் கௌவிக்கொண்டு பறக்கிறோம். மூவரும் சேர்ந்தே வேறு ஒரு குளத்திற்குச் சென்று விடலாம். சரியா?"

"நல்ல idea. சரி"

"ஆனால் ஒரு condition. நாம் அடுத்த குளத்தில் இறங்கு மட்டும் நீ வாயைத் திறந்துவிடக் கூடாது.

வாயைத் திறந்தால் பொத்தென்று கீழே விழுவாய்.
அப்புறம் உன் கதி அதோகதிதான்.

புரிகிறதா?"

"புரிகிறது. வாயைத் திறக்க மாட்டேன்."

plan படி பறந்தன. தரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கு அவை பறந்து பறந்து கொண்டிருந்த காட்சி வேடிக்கையாய் இருந்தது.


மேலே கைகாட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள்.

நண்டு தன்னைப் பார்த்து சிறுவர்கள் இரசிப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தது.

தன் மகிழ்ச்சியை கொக்குகளோடு பகிர்ந்து கொள்ள ஆசைப் பட்டு,

நிபந்தனையை மறந்து பேசுவதற்காக வாயை திறந்தது.

அவ்வளவுதான்.

பொத்தென்று கீழே விழுந்தது.

அதை பார்த்த காகம் ஒன்று அதைக் கவ்விக்கொண்டு பறந்து சென்றது.

மனிதர்களில் அநேகர் இந்த நண்டை போன்றுதான் நடந்து கொள்கிறார்கள்.

நண்டு எதை பற்றிக் கொண்டு இருக்க வேண்டுமோ அதைப் பற்றாததால் காகத்திற்கு இரையானது.

மனிதர்களும் யாரை விடாமல் பற்றிக் கொண்டு வாழ வேண்டுமோ

அவரை பற்றிக் கொள்ளாததால் பரலோகத்தை இழக்க நேரிடுகிறது.

நாம் இவ்வுலகில் செய்து கொண்டிருப்பது விண் நோக்கிய பயணம்.

நமது பயணம் வெற்றிகரமாக முடிய வேண்டுமென்றால் நாம் இறை இயேசுவை விடாமல் பற்றிக் கொள்ள வேண்டும்.

பயணத்தின்போது உலகத்தை ரசிப்பதற்காக இயேசுவைக் கை விட்டால்

நமது விண்நோக்கிய பயணம் மண் நோக்கிய பயணமாக மாறிவிடும். 

புனித சின்னப்பர் கூறுகிறார்:

  "சாவோ வாழ்வோ,

 வானதூதரோ தலைமை ஏற்பவரோ, 

நிகழ்வனவோ வருவனவோ,

 வலிமை மிக்கவரோ,


வானத்தில் உள்ளவையோ ஆழத்தில் உள்ளவையோ,

 வேறெந்தப் படைப்புப் பொருளோ, 

நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவில் வெளிப்பட்ட 

இறை அன்பிலிருந்த நம்மைப் பிரிக்க முடியாது."


நம் விண்ணகப் பயணத்தின்போது நாம் கீழே விழுந்து விழாதபடி பற்றிப் பிடித்திருக்க வேண்டியது இயேசுவின் அன்பு ஒன்றுதான்.

நம்மை இயேசுவின் அன்பிலிருந்து பிரிப்பதிலேயே எதிர்ச் சக்திகள் குறியாக இருக்கும்.

இயேசுவின் அன்பு நமது ஆன்மீக சக்தி.

உலகத்திப்பால் உள்ள ஈர்ப்பு எதிர்ச் சக்தி.

காலை எட்டு மணி திருப்பலிக்கு எல்லோரும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

பையன் TVயை on பண்ணி வைத்துக் கொண்டே புறப்படுகிறான்.

"TVயை off பண்ணு." அம்மாவின் குரல்.

"TV உங்கள என்ன பண்ணுது?"
மகனின் குரல்"

TVயிலிருந்து ஒரு அறிவிப்பு,

"காலை ஒன்பது மணிக்கு சாலமோன் பாப்பையாவின் பட்டிமன்றம்."

"அம்மா, நான் சாயங்கால பூசைக்குப் போகிறேன்."

"ஏன்டா?"

"காலையில online Class இருக்கு."

"ஏல, இன்று ஞாயிற்றுக் கிழமை. எப்படி Class இருக்கும்?"

"இருக்குன்னா இருக்கு. அவ்வளவுதான். class attend பண்ணாட்டா internal mark அ குறைச்சிடுவாங்க."

பட்டிமன்றம்தான் அவனுக்கு online Class!

சர்வ வல்லவரிடமிருந்து பிரிப்பதற்கு ஒரு சாதாரண பட்டிமன்றம் போதும்!


திருவிழாவை எப்படிச் சிறப்பாய்க் கொண்டாடுவது என்று சுவாமியார் சபையார் கூட்டத்தில் ஆலோசனைகள் கேட்கிறார்.

"சுவாமி, கோவில் decoration super ஆ இருக்கணும்."

"ஒன்பதாம் திருநாளிலும், பத்தாம் திருநாளிலும் சப்பர பவனி இருக்கணும்."

" பத்து நாட்களிலும் பூசை முடிஞ்சி சாப்பாடு போடணும்.

பத்தாம் திருநாளன்று mutton பிரியாணி போடணும்."

"அதெல்லாம் இருக்கட்டும், பூசை,
தியானம் பற்றி ஆலோசனை?" சுவாமியார்.

"அதுதான் உங்களுக்குத் தெரியுமே!"
எங்களுக்கு அதுவா முக்கியம், மக்கள் மனதுக்குள்.

வீண் ஆடம்பரங்களால் இயேசுவின் அன்பிலிருந்து பிரிக்கவே முடியும்.

நாம் எதைச் செய்தாலும் இயேசுவின் அன்பினால் உந்தப்பட்டும், அவரது அன்பினில் வளர்வதற்காக மட்டுமே இருக்க வேண்டும்.

அதாவது நமது செயல்களின் காரணமும், நோக்கமும் இயேசுவின் அன்பாகத்தான் இருக்க வேண்டும்.

"ஏழைகளுக்கு உதவ தூண்ட தூண்டியது எது?.

 இயேசுவின் அன்பு.

எதற்காக ஏழைகளுக்கு உதவுகிறாய்?

இயேசுவிடமிருந்து அன்பை நிறைய பெறுவதற்காக.

நமது தாராள குணத்தை எல்லோரும் அறிந்து, நம்மைப் பாராட்ட வேண்டுமென்பதற்காக பிறருக்கு உதவியினால்

நாம் இயேசுவின் அன்பிலிருந்து பிரிந்து செல்கிறோம்.

பிறர் நம்மை வெறுக்கும் போது நாம் பதிலுக்கு அவர்களை நேசித்தால் நாம் இயேசுவின் அன்பில் வளர்கிறோம்.

வெறுப்பவர்களை நாமும் வெறுத்தால் இயேசுவின் அன்பில் தேய்கிறோம்.

நமக்கு தீமை செய்பவர்களுக்கு நாம் நன்மை செய்தால் நாம் இயேசுவின் அன்பில் வளர்கிறோம்.

தீமைக்குப் பதில் தீமை செய்தால் இயேசுவின் அன்பில் தேய்கிறோம்.

இயேசுவின் மேல் நாம் வைத்திருக்கும் அன்பு நிபந்தனை அற்றதாக இருக்க வேண்டும்.

நாம் வளமாக வாழும்போது இயேசுவை அன்பு செய்து,

 கஷ்டங்கள் வந்து நீங்காத போது அவரை அன்பு செய்யாமலும் இருந்தால்

நாம் இயேசுவின் அன்பை விட நமக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

அதற்குப் பெயர் அன்பு அல்ல, வியாபாரம்.

"கையில் காசு, வாயில் தோசை.

வாழ்வில் வளம்,
இதயத்தில் அன்பு.

கடவுள் நம்மை நிபந்தனை இன்றி அன்பு செய்கிறார்.

அளவற்ற விதமாய் அன்பு செய்தார்.

நாம் பாவம் செய்தாலும், நம்மீது அவர் கொண்டுள்ள அன்பு குறையாது.

நாம் நித்திய காலமும் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டாலும்
நம்மீது அவர் கொண்டுள்ள அன்பு குறையாது. 

நமது நோக்கத்தை அடிப்படையாக கொண்டு நம்முடைய செயலின் தன்மை மாறும்.

"உமக்கு சித்தம் இருந்தால் எனது விண்ணப்பத்தை நிறைவேற்றும்." என்ற அடிப்படையில்,

என்ன உதவி கேட்டும் இறைவனிடம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் நிறைவேறினாலும் நன்றி சொல்லவேண்டும்.

 நிறைவேறாவிட்டாலும் நன்றி சொல்லவேண்டும்.

"ஆண்டவரே உமக்கு சித்தம் இருந்தால், நான் விண்ணப்பித்திருக்கும் வேலையை எனக்குப் பெற்றுத் தாரும்."

என்ற அடிப்படையில் விண்ணப்பித்தால் நாம் இறைவனின் அன்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

நமது விண்ணப்பம் நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும்

 நாம் இறைவனுக்கு நன்றி சொன்னால்தான் 

நாம் இறைவனின் அன்பை விட்டு எக்காரணத்தை முன்னிட்டும் பிரிய மாட்டோம் என்று அர்த்தம்.

நேர்ச்சையை முன் வைத்து விண்ணப்பித்தால், விண்ணப்பம் நிறைவேறாத போது மனம் தளர வாய்ப்பு இருக்கிறது. 

இறைவனின் சித்தத்தை முன்வைத்து விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிறைவேறாவிட்டாலும் நமது அன்பு குறையாது.

இறைவனின் அன்பை விட்டு நாம் பிரியக் கூடாது என்பதுதான் முக்கியம்.

"வாழ்வோ, சாவோ
இறை அன்பிலிருந்த நம்மைப் பிரிக்க முடியாது."

என்று புனித சின்னப்பர் கூறுகிறார்.

சிலர் வாழ்வில் வளமாக இருக்கும் போது கடவுளை மறந்துவிடுகின்றனர் கஷ்டங்கள் வரும்போது கடவுளை தேடி வருகின்றனர்.

நாம் இறைவனை நேசிக்க வேண்டியது அவர் நமது இறைவன் என்பதற்காக மட்டும்தான்

 வாழும் வாழ்விற்காக அல்ல.

 இதை புரிந்து கொண்டால் வாழ்வின் தன்மையால் இயேசுவை நம்மை விட்டு பிரிக்க முடியாது. 

நாம் இயேசுவில் அன்பு செய்கிற ஒரே காரணத்திற்காக மட்டும் நமக்கு சாவு வருகிறது என்றால் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்

நமது வாழ்வையும், சாவையும் விட முக்கியத்துவம் வாய்ந்தது இறை அன்பு ஒன்றுதான்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment