Monday, December 7, 2020

"பாவம் பெருகிய இடத்தில் அருள் அணை கடந்து பெருக்கெடுத்தது."(உரோமை. 5:20)

 

"பாவம் பெருகிய இடத்தில் அருள் அணை கடந்து பெருக்கெடுத்தது."
(உரோமை. 5:20)


பாவநிலைக்கு எதிர் நிலை பரிசுத்த நிலை.

எப்படி ஒளியும், இருளும் இணைந்து இருக்க முடியாதோ,

அதே போல் பாவமும், பரிசுத்தமும் இணைந்து இருக்க முடியாது

இறைவன் நமது முதல் பெற்றோரை பரிசுத்த நிலையில் படைத்தார்.

ஆனால் அவர்கள் அவரது கட்டளையை மீறி பாவநிலையில் விழுந்தனர்.

இறைவன் பரிசுத்தர். அவரால் பாவம் செய்ய முடியாது.

ஏன்?

பாவத்திற்கான வரையறையே (Definition) அதை விளக்கும்.

"தேவ கட்டளையை மீறுவது பாவம்."

இறைவனுடைய விருப்பத்திற்கு எதிர்மாறாக செயல்படுவதுதான் பாவம்.

இறைவனே தன்னுடைய விருப்பத்திற்கு எதிர்மாறாகச் செயல்பட முடியாது.

ஆகவே இறைவனால் பாவம் செய்ய முடியாது.

இறைவழி நிற்பது பரிசுத்தம்.
இறைவனுக்கு எதிர் வழி நிற்பது பாவம்.

இறைவன் அன்பு மயமானவர். மாறாதவர்.

இறைவன் மனுக்குலத்தை தனது அன்பின் காரணமாகவே படைத்தார்.

மனிதன் மீது கொண்டுள்ள அவரது அன்பு ஒருபோதும் மாறாது.

மனிதன் இறைவழி நடந்தாலும்,

 இறைவனுக்கு எதிர் வழி நடந்தாலும்

அவன் மீது அவர் கொண்டுள்ள அன்பு ஒருபோதும் மாறாது.

அதாவது பாவத்தை கடவுள் விரும்புவதில்லை, ஏனெனில் அது அவருக்கு எதிராது.

 ஆனால் பாவியை அவர் வெறுப்பதே இல்லை. ஏனெனில் அவன் அவரது பிள்ளை.

பாவியை அளவு கடந்த விதமாய் நேசிக்கிறார்.

பாவியின் மேல் அவர் கொண்டிருக்கும் அன்பு தான் அவரை அவனைத்தேடி மனிதனாகப் பிறக்கச் செய்தது.

இயேசு பாவிகளைத் தேடித்தான் உலகிற்கு வந்தார். 

நாம் வெளியூரில் இருக்கும் போது நல்ல சுகத்தோடு இருந்தால்
..
 அம்மா நம்மைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

 சுகமில்லை என்று தெரிந்தவுடன் நம்மை பார்க்க ஓடோடி வருவார்கள்.

அதே போல்தான் இறைவனும் பாவியைத் தேடி உலகிற்கு வந்தார்.


நமது இல்லங்களில் நோய்ஞ்சான் பிள்ளைக்குதான்

அம்மாவின் கவனிப்பு அதிகம் கிடைக்கும்.

ஆன்மீகத்திலும் அப்படித்தான்.

பாவம் என்னும் நோயால் அவதிப்படுகிறவர்களுக்கு 

அவர்களது பாவ நோய் நீங்க இறைவன் அபரிமிதகமாக அருள் வரங்களை மருந்தாக அள்ளி கொடுத்துக் கொண்டிருப்பார்.

பாவிகள் அம்மருந்தைப் பயன்படுத்தினால் பாவம் நீங்கி பரிசுத்தம் அடைவார்கள்.

பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுத்தால் அதை அவர்கள் உண்டால் தானே பசி நீங்கும்.

மாணவர்களது அறியாமை நீங்க ஆசிரியர் பிரம்பை பயன்படுத்துவதில்லை?

அதேபோல், நாம் பாவிகள் என்பதை நினைவூட்ட இறைவனின் அருள் மருந்து துன்பங்கள் வடிவில் நமக்கு வரலாம்.

நமக்கு துன்பங்கள் வரும்போது நம்மை நாமே சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

நமக்குள் இருக்கும் பாவக் கறை நீங்க முதலில் பாவ மன்னிப்பு பெற வேண்டும்.

மன்னிப்பு பெற்றபின் வரும் துன்பங்களை பாவப் பரிகாரமாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.

பாவப் பரிகாரமாக ஒப்புக்கொடுக்கப்படும் துன்பங்கள் நம்மைப் பரிசுத்தர்களாக மாற்றும்.


நம்மை மனம் திருப்பவும்,

 பரிசுத்தர்களாக மாற்றவும் இறைவன் நமக்கு அனுப்பும் துன்பங்கள்

 அவர் நமக்கு அருளும் ஆசீர்வாதங்கள்.

கிறிஸ்து பிறந்த விழாவைக் கொண்டாடுவதற்காக நம்மை நாமே தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.

எப்படிக் கொண்டாட?

ஆடம்பரமாகவா அல்லது 

 கிறிஸ்தவ பக்தியுடனா?

கிறிஸ்தவ பக்தியுடன் என்றால் கிறிஸ்துவின் உணர்வுகளோடு.

 அரண்மனையில் அரச குமாரன் பிறந்தால் நாடெங்கிலும் எவ்வளவு கோலாகலமாக கொண்டாடுவார்களோ

அவ்வளவு கோலாகலமாக கிறிஸ்து பிறந்த விழாவை கொண்டாட வேண்டுமா?

அல்லது,

அன்றாடம் உழைத்தால்தான் உணவு என்ற நிலையில் உள்ள ஏழை தொழிலாளியின் வீட்டில் குழந்தை பிறந்தால் 

அவர்கள் எத்தகைய உணர்வுகளுடன் இருப்பார்களோ 

அத்தகைய உணர்வுகளுடன் கொண்டாட வேண்டுமா?

கிறிஸ்து உலகின் அரசர்தான்.

ஆனால் அவர் பிறந்தது ஒரு மாடடைத் தொளுவத்தில்,
 ஒரு ஏழை தாயின் பிள்ளையாக.

மாடடைத் தொளுவில் மாட்டுச் சாண வாசனையில்,

கடுங் குளிரில்,

கவனிக்க மருத்துவச்சியின்றி 
பிறந்து,

மாட்டுத் தீவனத்தொட்டியில் கிடத்தப்படுவது இன்பகரமான அனுபவம் அல்ல.

மூவுலக அரசர் அனுபவித்த துன்பகரமான அனுபவம்.

இயேசு பிறக்கும்போதே துன்பங்களை ஏற்றுப் பிறந்தது 

பாவிகளாகிய நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக.

 நாமும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக துன்பப்பட வேண்டும் என்ற பாடத்தை நமக்கு கற்பிப்பதற்காக.

நமக்கு துன்பங்கள் வந்தால் நாம் நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று எண்ண வேண்டும்.

 துன்பங்கள் நாம் பாவம் நீங்கி பரிசுத்தம் அடைய இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் மகிழ்ச்சிகரமான வாய்ப்பு.

பாவிகளுக்கு வரும் துன்பங்கள் 
இறைவனிடமிருந்து வரும் அருள் வெள்ளம்.

கிறிஸ்து பிறந்தது நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்ய.

ஆகவே அவர் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்.

 ஆனால் ஆடம்பரமாக அல்ல.

புதிய dress முக்கியம் அல்ல.

புதுப்புது உணவு வகைகள் முக்கியம் அல்ல.

வாண வேடிக்கைகள் முக்கியம் அல்ல.

ஆன்மா பரிசுத்தம் அடையும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே முக்கியம்.

அவர் பிறந்தபோது ஏற்பட்ட துன்பங்களுக்கு மத்தியில் அன்னை மரியாள் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள்.  

 பாவிகள் மனம் திரும்புவதற்காக நாம் கிறிஸ்து பிறந்த நாளை, எளிமையாக மகிழ்ச்சியாக கொண்டாட நம்மை நாமே தயாரிப்போம் 

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment