கிறிஸ்து பிறந்தது கி.மு. விலா? கி.பி.யிலா?
நண்பர் ஒருவர் ஒரு விசித்திரமான கேள்வி கேட்டார்.
கிறிஸ்து பிறந்தது கி.மு. விலா? கி.பி.யிலா?
நாம் வரலாற்று நிகழ்ச்சிகளை கிறிஸ்துவை மையமாக வைத்துதான் எழுதுகிறோம்.
வரலாற்றின் மையமான கிறிஸ்துவே பிறந்தது
கி.மு விலா, கி.பியிலா என்று கேட்பது உண்மையிலேயே விசித்திரமானதுதான்.
ஆனால் அவர் கேள்வியில் பொருள் இருக்கிறது.
டிசம்பர் 25 ஐ கிறிஸ்து பிறந்த நாளாகக் கொண்டாடுகிறோம்.
டிசம்பர் 25 ஆண்டுக் கடைசியில் வருகிறது.
ஜனவரி முதல் தேதிதான் ஆண்டின் துவக்கம்.
டிசம்பர் 25ல் கிறிஸ்து பிறந்திருந்தால் அன்றுதானே கிறிஸ்துவின் ஆண்டு ஆரம்பிக்க வேண்டும்?
இப்படி பல நமக்கே புரியாத பல எண்ணங்கள் தோன்றும்.
உண்மையிலேயே கிறிஸ்து பிறந்த நாள் எது?
உண்மையில் கிறிஸ்து பிறந்த நாள் எது என்று அன்னை மரியாளிடம் கேட்டால்கூட "தெரியாது" என்றுதான் சொல்லுவார்.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்த சாதாரண மக்கள்
பிறப்பு, திருமணம், இறப்பு போன்ற முக்கியமான நாள் கணக்குகளை வைத்திருப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை.
நற்செய்தியாளர்களில் மாற்குவும், அருளப்பரும் இயேசுவின் பிறப்பை ஒட்டிய நிகழ்ச்சிகளைப் பற்றி எதுவுமே எழுதவில்லை.
மத்தேயுவும், லூக்காசும் பிறப்பை ஒட்டிய நிகழ்ச்சிகளை
எழுதியிருந்தாலும் காலக் கணக்கு எதையும் குறிப்பிடவில்லை.
நற்செய்தியை அறிவிப்பது மட்டுமே அவர்கள் நோக்கமாக இருந்தது.
ஆதி திருச்சபையின் காலத்தில்கூட கிறிஸ்தவர்கள் பிறந்த தேதியை விட இறந்த தேதியை குறித்து வைப்பதில் ஆர்வம் காட்டினர்.
இவ்வுலகில் இறக்கும்போதுதான் விண்ணுலகில் பிறக்கிறோம்.
அத்தான் கிறிஸ்தவர்களுடைய உண்மையான பிறந்த நாள்.
அதனால்தான் புனிதர்களைய விண்ணுலகப் பிறப்பு நாளில்தான் அவர்களுடைய திருநாளைக் கொண்டாடுகிறோம்.
நம் ஆண்டவருக்கும்,
அவரது அன்னைக்கும்,
ஸ்நாபக அருளப்பருக்கும் மட்டும்தான் பிறந்த நாளையும் கொண்டாடுகிறோம்.
ஆண்டவருக்கு டிசம்பர் 25.
அன்னைக்கு செப்டம்பர் 8.
அருளப்பருக்கு ஜூன் 24
காரணத்தோடுதான் திருச்சபை இவர்களது பிறந்த நாளையும் கொண்டாடுகிறது.
இயேசுவும், மாதாவும் சென்மப் பாவம் இன்றி உற்பவித்தார்கள்.
அருளப்பர் சென்மப் பாவம் இன்றி பிறந்தார்.
ஏன் டிசம்பர் 25ல் கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிறது?
திருச்சபையின் ஆரம்ப காலத்தில் அதாவது வேத கலாபனை களில் காலத்தில்
கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கே போராடிக் கொண்டிருந்தார்கள்.
ரோமை மன்னர்கள் அகப்பட்ட கிறிஸ்தவர்களை எல்லாம் கொன்று குவித்துக் கொண்டிருந்த காலம்.
குகைகளில் ஒழிந்து மறைந்து கிறிஸ்தவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
கான்ஸ்டன்டைன் மன்னன்
(AD 306–337) காலத்தில்தான் கிறிஸ்தவர்களால் சுதந்திரமாக மூச்சு விட முடிந்தது.
அம்மன்னன் கிறிஸ்தவ சமயத்தை அரசாங்க சமயமாக அறிவித்தான்.
அவன் காலத்தில் அவனது அரசில் வாழ்ந்துவந்த அஞ்ஞானிகள் அவனோடு கிறிஸ்தவர்களாக மாறினார்கள்.
அஞ்ஞானிகளாக இருந்தபோது அவர்கள் சூரியனை கடவுளாக வணங்கி வந்தார்கள்.
'
சூரியனுக்கு டிசம்பர் 25 ல் விழா எடுத்தார்கள்,
கிறிஸ்தவர்களாக மாறிய பின்னர் சூரிய கடவுளை கைவிட்டுவிட்டு,
கிறிஸ்துவை இறைவனாக ஏற்றுக் கொண்டார்கள்.
அவர்கள் தாங்கள் சூரியனுக்கு விழா எடுத்த நாளாகிய டிசம்பர் 25 ஐ கிறிஸ்து பிறந்த நாளாக கொண்டாட ஆரம்பித்தார்கள்.
கிறிஸ்தவம் ரோமையின் அரசாங்க சமையமாக ஆகிவிட்டதால் ரோமை இராச்சியத்தில் கிறிஸ்மஸ் டிசம்பர் 25ல் கொண்டாடப்பட ஆரம்பித்தது.
. கிழக்கு நாடுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜனவரி ஆறாம் தேதியை கிறிஸ்மஸாகக் கொண்டாடினார்கள்.
காலப்போக்கில் ரோமர்களைப் பின்பற்றி உலகெங்கும் டிசம்பர் 25 கிறிஸ்மஸ் தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கிறிஸ்துவின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் இயற்கையின் பருவகால மாற்ற நிகழ்வுகளோடு ஒத்துப்போவதாக அக்கால தேவ சாஸ்திர அறிஞர்கள் கருதினார்கள்.
Some ancient theologians believed that the events of Christ’s life were mysteriously synchronized with the movements of nature.
சூரியன் தென் கோளார்த்தத்தில் மகர ரேகையில் உச்சக்கட்ட குளிர்காலம் ஆகிய டிசம்பரில் பிரகாசிக்கிறான்.
மகர ரேகையில் பிரகாசிக்கும் போது பகலின் அளவு மிகவும் குறைவு. இரவின் அளவு மிகவும் அதிகம்.
டிசம்பர் மாதத்தின் உச்சக்கட்ட குளிரில் தான் ஆண்டவர் பிறக்கிறார்.
பின் சூரியன் தன் வடக்கு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கிறான்.
வடக்கு நோக்கிய பயணத்தில் பகல் நேரத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே வரும். இரவின் அளவு குறைந்து கொண்டே வரும்.
கிறிஸ்துவின் போதனையால் உலகில் ஆன்மீக ஒளி அதிகரித்துக் கொண்டே வருவதையும்,
ஆன்மீக இருள் குறைந்து கொண்டு போவதையும் இது குறிக்கிறது.
மார்ச் மாதத்தில் சூரியன் நிலநடு கோட்டில் பிரகாசிக்கிறது.
சூரியன் நிலநடுக்கோட்டைக் கடந்ததற்கு அடுத்து வரும் பவுர்ணமிக்கு அடுத்த ஞாயிறு ஈஸ்டர் ஞாயிறு.
Easter Sunday follows the first full moon after the spring equinox.
பெளர்ணமி ஞாயிற்றுக் கிழமை வந்தால் உயிர்ப்பு ஞாயிறு ஒரு வாரம் பிந்தும்.
மார்ச் 22க்கும் ஏப்ரல் 25க்கும்
இடையில் எந்த ஞாயிறும் வரலாம்.
The earliest Easter can be is March 22, and the latest is April 25.
If the full moon is on a Sunday, Easter will be a week later.
உயிர்ப்பு ஞாயிறு யூதருடைய பாஸ்கா விழாவை ( Jewish festival Passover.) ஒட்டி இருக்கும்.
Easter celebrations are around the Jewish festival Passover.
நம்மை பொறுத்தமட்டில்
கிறிஸ்து எப்போது பிறந்தார் என்பது முக்கியமல்ல
எப்படி பிறந்தார், எதற்காக பிறந்தார் என்பதுதான் முக்கியம்.
கிறிஸ்மஸை எப்போது கொண்டாடுகிறோம் என்பதை விட எப்படிக் கொண்டாடுகிறோம் என்பதுதான் முக்கியம்.
கிறிஸ்து ஏழையாகப் பிறந்தார்,
நமது பாவங்களிலிருந்து நம்மை மீட்பதற்காகப் பிறந்தார்.
நாம் கிறிஸ்மஸை எளிமையாக கொண்டாட வேண்டும்.
நமது பாவ கரைகள் நீங்கும் விதமாக கொண்டாட வேண்டும்.
நாமும் கூட எப்போது பிறந்தோம் என்பது முக்கியமல்ல,
எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.
'நமது பிறப்பு வழியே உலகிற்குள் நுழைந்த நாம் இறப்பின் வழியே விண்ணகத்திற்குள் நுழைய வேண்டும்.
ஓட்டப்பந்தயத்தை ஆரம்பிப்பதை விட முடிப்பது தான் முக்கியம்.
நாமும் விண்ணகத்திற்குள் நுழைந்தால்தான் நாம் பிறந்ததற்கு அர்த்தம் இருக்கும்.
மண்ணில் வாழ்வோம் விண்ணை நோக்கி.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment