Sunday, October 15, 2023

மருத்துவ மனைக்குச் செல்லலாமா?

மருத்துவ மனைக்குச் செல்லலாமா?

"தாத்தா, நலமாக இருக்கிறீர்களா?"

"கடவுள் அருளால் நலமாக இருக்கிறேன்.''

"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்சொல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது.

 என்று ஆண்டவர் கூறியிருக்கிறார்.

சிலுவை என்றால் நமக்கு வரும் துன்பங்கள் தானே.

உதாரணத்துக்கு, நமக்கு வரும் நோய் ஒரு சிலுவை தானே?''

"'என் கையில் இருப்பது என்ன?"

"பத்து ரூபாய் நோட்டு.''

"இல்லை, இது என் பென்சன்.

இதை கோவில் உண்டியலில் போட்டால் அது என்ன?"

''காணிக்கை."

"இதையே ஒரு உதவி பெறுவதற்காக அரசியல்வாதியிடம் கொடுத்தால்?"

"அப்போது இது லஞ்சம்."

" நமக்கு கஷ்டம் தரக்கூடிய ஒரு நிகழ்வைத் துன்பம் என்கிறோம்.

அந்த வகையில் நோயும் ஒரு துன்பம் தான். 

நீ என்னைப் பற்றி மற்றவர்களிடம் கெடுத்துப் பேசுகிறாய் என்று வைத்துக்கொள்வோம்.

அந்தச் செய்தி எனது காதில் விழுந்தால் அது எனது மனதுக்கு கஷ்டத்தைக் கொடுக்கும்.

அதுவும் துன்பம் தான்.

இந்த துன்பங்களை நமது பாவங்களுக்கும், உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக நாம் இயேசுவிடம் ஒப்புக்கொடுத்தால் அது சிலுவை.

இயேசு இவ்வுலகில் பட்ட ஒவ்வொரு துன்பமும் சிலுவை தான், ஏனென்றால் அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஏற்றுக் கொண்டு தனது விண்ணகத் தந்தையிடம் ஒப்புக்கொடுத்தார்."

"ஒருவருக்கு நோய் வருகிறது. அவர் உடனே ஒரு மருத்துவரைச் சந்தித்து அந்த நோய் குணமாவதற்கான மருந்தை வாங்கிச் சாப்பிடுகிறார். நோய் குணமாகிறது. 

நோயாகிய துன்பத்தை சிலுவையாக ஏற்றுக் கொள்ளாமல் மருத்துவர்களிடம் செல்வது சரியா தவறா?"

"'உனது கேள்விக்கு ஒரு உள்நோக்கம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

ஏனெனில் நான் இப்போதுதான்_" மருத்துவ மனையிலிருந்து திரும்பியிருக்கிறேன்."

''உங்களது பதில் உங்களை நியாயப்படுத்துவதாக இருக்கக் கூடாது. உண்மையாக இருக்க வேண்டும்"

'''நமது ஆண்டவர் தனது மூன்று ஆண்டு பொது வாழ்வின் போது பாடுகள் படுவதற்கு முன்னால் என்ன செய்தார்?"

''நற்செய்தி அறிவித்தார், நோயாளிகளைக் குணமாக்கினார்."

"'இயேசு நோயாளிகளை குணமாக்கியது சரியா, தவறா?"

''தாத்தா உங்கள் கேள்விதான் தவறு. இயேசு செய்தது சரியா, தவறா என்று எப்படி கேட்கலாம்?

இயேசு கடவுள். அவரால் தவறு செய்ய முடியாது."

"'கரெக்ட். இயேசுவால் தவறு செய்ய முடியாது.

தங்களைக் குணமாக்கும் படி நோயாளிகள் இயேசுவிடம் கேட்டபோது 

அவர்களது விசுவாசத்தை பாராட்டி அவர்களை குணமாக்கினார்.

இயேசுவின் மேல் விசுவாசமும், நோய்கள் குணமானதும் நேரடி தொடர்பு உடையவை.

ஒவ்வொரு முறை நோயைக் குணமாக்கிய போதும் குணமான நோயாளியைப் பார்த்து இயேசு உனது விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று என்பார்.

நோயாளிகளிடம் விசுவாசம் இல்லாதிருந்திருந்தால் அவர்களால் குணமாகியிருக்க முடியாது.

நாம் இயேசுவை நோக்கி வேண்டும் போது அவர் முதலில் பார்ப்பது நம்மிடம் விசுவாசம் இருக்கிறதா? இல்லையா? என்பதைத் தான்.

இயேசுவை முழுமையாக நமது கடவுளாக ஏற்றுக் கொள்வதும், அவர் மீது முழுமையாக நம்பிக்கை வைத்திருப்பதும் விசுவாசத்தில் அடங்கும்.

இயேசுவின் மீது விசுவாசம் இல்லாதவர்கள் அவரை அணுகியிருக்க மாட்டார்கள்.''

"ஆனால், தாத்தா, நீங்கள் இயேசுவை நம்பி மருத்துவமனைக்குச் சென்றீர்களா, மருத்துவரை நம்பி சென்றீர்களா?"

"நீ சாப்பிட Dining table ல் அமரும்போது சாப்பாட்டுக்கு அம்மாவை நம்பி உட்காருகிறாயா அல்லது Dining table ஐ நம்பி  உட்காருகிறாயா?"

'அம்மாவை நம்பி தான்."

""நாம் சுகமில்லாது இருக்கும்போதும் சுகம் தரும் படி கடவுளை வேண்ட வேண்டும்.

அவர் நேரடியாகவும் நம்மை குணமாக்கலாம்

 அல்லது 

ஒரு கருவியைப் பயன்படுத்தியும் நம்மை குணமாக்கலாம்.

கடவுள் ஒரு மருத்துவரைக் கருவியாக பயன்படுத்த விரும்பினால் 

எந்த மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பதை நமது உள்ளத்தில் உணர்த்தி நம்மை வழி நடத்துவார்.

அவரது வழி நடத்துதலின்படி செல்ல வேண்டும்.

மருத்துவர் ஒரு கருவிதான். உண்மையில் குணமாக்குபவர் கடவுளே."

"திரும்பவும் கேட்கிறேன் நாம் ஏன் குணம் பெற விரும்ப வேண்டும்?"

""சுகமில்லாத நிலையில் நமது அந்தஸ்தின் கடமைகளை எப்படி நிறைவேற்ற முடியும்? அதற்காக 
குணம் பெற விரும்பலாமே?"

"நோயுள்ள நிலையில் அந்தஸ்தின் கடமைகளை நிறைவேற்ற முடியாது என்று கடவுளுக்குத் தெரியுமே. தெரிந்தும் ஏன் நோயை வர விடுகிறார்?"

"'பேரப்பிள்ளை, நீ உன் பார்வையிலேயே ஒவ்வொன்றையும் பார்க்கிறாய்.

ரோஜா செடி வளர்க்கும் விவசாயி செடிகளை அடிகடி கத்தரித்து விடுவதைப் பார்த்திருத்துகிறாயா?"

"பார்த்திருக்கிறேன்.''

""உன் பார்வையில் அது எப்படித் தோன்றும்?"

"நன்கு வளர்ந்த ரோஜா செடியை அவன் ஒடித்து பாதியாக்கி விடுவதாகத் தோன்றும்."

"'ஆனால் ரோஜா செடி கத்தரித்து விட்டால்தான் நன்கு தளிர்த்து நிறையப் பூக்கும் என்று விவசாயிக்கு தெரியும்.

ஒரு துணியை என்ன செய்தால் ஒரு சட்டையாக மாறும் என்று
Tailor க்குத் தெரியும்.

புதுத் துணியை கத்தரிக்கோல் கொண்டு துண்டு துண்டாக வெட்டுவதை மட்டும் பார்க்கக் கூடாது. பக்கத்தில் தையல் மெஷின் இருப்பதையும் பார்க்க வேண்டும்.

நகை செய்யும் ஆசாரியிடம் நகை செய்வதற்காக தங்கத்தைக் கொடுத்தால் முதலில் அவன் அதை உருக்குவான்.

உருக்குவதைப் பார்த்துவிட்டு,

"ஐயோ, என் தங்கம் போய்விட்டதே" என்று கத்தக் கூடாது.

தங்கத்தை உருக்கி அவன் நகை செய்வதைப் பார்க்க வேண்டும்.

கிணற்றைத் தோண்டினால் தான் தண்ணீர் வரும்.

உலகை ஒன்றுமில்லாமையிலிருந்து படைத்த கடவுளுக்கு அதில் உள்ள ஒவ்வொரு பொருளையும் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்.

அவருடைய வழிமுறைகளை நம்மால் கண்டுபிடிக்க முடியாது.

அளவில்லாத நன்மைத் தனம் நிறைந்தவர் கடவுள்.

அவர் என்ன செய்தாலும் அது நன்மைக்காகவே இருக்கும் என்பதை நாம் ஏற்றுக் கொண்டால் 

அவர் ஏன் செய்கிறார் என்று கேட்க மாட்டோம்.

நம்மை விழத் தாட்டுகிறவரும் அவர்தான், தூக்கி விடுகிறவரும் அவர்தான். அவர் விழத் தாட்டுவது நமது நன்மைக்காகவே இருக்கும்.

நமக்கு மரணமே வந்தாலும் அதுவும் நமது நன்மைக்கே.

ஏனெனில் மரணம் தான் மோட்சத்துக்குள் நுழையும் வாசல்."

'நீங்கள் சுகம் இல்லாமல் ஆனது உங்களது நன்மைக்கு என்கிறீர்களா?"

""உறுதியாக. என்ன நன்மை என்று கடவுளுக்குத் தெரியும்.

நிலத்தை கலப்பையைக் கொண்டு உழுவது எதற்கு என்று உனக்குத் தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் விவசாயிக்கு தெரியும்."

''இப்போது எனது சந்தேகம் தீர்ந்தது.. என்ன நடந்தாலும் நமது கடமையை நாம் செய்வோம்.''

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment