Sunday, October 22, 2023

மனிதர்முன் என்னை வெளிப்படையாக ஏற்றுக்கொள்பவன் எவனோ, அவனை மனுமகனும் கடவுளின் தூதர்கள்முன் வெளிப்படையாக ஏற்றுக்கொள்வார்.(லூக்.12:8)

மனிதர்முன் என்னை வெளிப்படையாக ஏற்றுக்கொள்பவன் எவனோ, அவனை மனுமகனும் கடவுளின் தூதர்கள்முன் வெளிப்படையாக ஏற்றுக்கொள்வார்.(லூக்.12:8)

"நம்முடைய நாடு மத சார்பற்ற நாடு தானே!"

"'ஆமா, அதில் என்ன சந்தேகம்?"

'நீங்கள் மதசார்பு உள்ளவர்களா, மதசார்பு அற்றவர்களா?"

'''நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன்?"

" அதாவது மத சார்பு உள்ளவர்."

"'கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவன். ஆகவே மதசார்பு உள்ளவன்"

''மதசார்பு உள்ள நீங்கள் எப்படி ஒரு மத சார்பற்ற நாட்டில் வசிக்கலாம்?"

"'நமது நாடு ஒரு மதசார்பற்ற நாடு. அதாவது நமது நாட்டின் அரசியல் சட்டம் இங்கு வாழும் மக்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்திருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

நமது நாட்டில் யார் வேண்டுமானாலும் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்பதுதான் அரசியல் சட்டத்தின் நோக்கம்.

இங்கு வாழும் மக்களின் சமய நம்பிக்கையில் அரசியல் சட்டம் குறுக்கிடாது.

நமக்கு இஷ்டப்பட்ட சமயத்தைப் பின்பற்றவும் அதை மற்றவர்களுக்கு அறிவிக்கவும் நமது அரசியல் சட்டம் அனுமதி அளிக்கிறது.

Article 25 guarantees the freedom of conscience, the freedom to profess, practice, and propagate religion to all citizens."

"மதசார்பற்ற நாட்டின் வாழும் மக்களை எப்படி நீங்கள் உங்கள் மதத்தைச் சார்ந்தவர்களாக வாழும்படி செய்யலாம்?"

"'எங்கள் சமயக் கொள்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் பேச எங்களுக்கு முழு உரிமை இருக்கிறது.

நாங்கள் சொல்வதை நம்பவோ நம்பாதிருக்கவோ மற்றவர்களுக்கு உரிமை இருக்கிறது.


உலக மக்களின் பாவங்களிலிருந்து அவர்களை மீட்டு அவர்களுக்கு நித்திய வாழ்வை அளிக்க இறை மகன் இயேசு மனிதனாய்ப் பிறந்து பாடுகள் பட்டு மரித்தார் என்பது எங்களது நம்பிக்கை.

எங்கள் நம்பிக்கையை உலக மக்கள் அனைவருக்கும் அறிவிக்க வேண்டும் என்பது இயேசு எங்களுக்குக் கொடுத்திருக்கும் கட்டளை.

இயேசுவின் கட்டளைக்கு கீழ்படிந்து நடக்கும் விதத்தில் தான் நாங்கள் எங்களது சமயக் கொள்கைகளை மற்றவர்களுக்கு அறிவிக்கிறோம்.

அறிவிக்காவிட்டால் நாங்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் அல்ல.

எங்கள் அறிவிப்பை ஏற்று அதன்படி நடந்து மீட்பு அடைவதும்,

ஏற்றுக்கொள்ளாமல் மீட்பு அடையாதிருப்பதும் அவரவர் சுதந்திரத்திற்கு உட்பட்டது.

மற்றவர்களது சுதந்திரத்தில் நாங்கள் குறுக்கிடுவதில்லை.

மனிதர்முன் இயேசுவை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு, 

மற்றவர்களுக்கும் அவரை அறிவிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.

கடவுளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது எங்கள் கடமை."

"ஒவ்வொருவரும் அவரவர் சமயக் கொள்கைகளைச் சரி என்று ஏற்றுக் கொண்டால் தங்களது கொள்கைகளோடு ஒத்து மற்றவர்களது கொள்கைகளைத் தவறு என்று நினைக்கிறார்கள் என்று தானே அர்த்தம்."

"'2 + 2 = 4என்பது உண்மையானால் 2 + 2 = 5 என்பது தவறு தானே!"

"அதாவது உங்களைப் பொறுத்தமட்டில் உங்களது சமயக் கொள்கைகள் மட்டுமே சரி, அப்படித் தானே!"


"'அவரவர்கள் அவரவர்களது கொள்கைகள் சரி என்று நினைப்பார்கள்.

நினைக்காவிட்டால் எப்படி அவர்கள் அதை நம்ப முடியும்? "

"எங்களது கொள்கைகள் தவறு என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?"

"'எங்களது கொள்கைகள் சரி என்று சொல்ல எங்களுக்கு முழு உரிமை இருக்கிறது.

நாங்கள் நம்புகிறோம், நம்புவதை செயல்படுத்துகிறோம், அதாவது வாழ்கிறோம்.

எல்லோருடைய முன்னால் தானே வாழ்கிறோம்.

கடவுளை அன்பு செய்து, அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் அன்பு செய்து, அனைவருக்கும் உதவி செய்து வாழ்கிறோம்.

எங்களது வாழ்க்கையின் ஒளியில் இயேசு தெரிந்தால் நீங்களும் அவரை ஏற்றுக் கொள்வீர்கள்."

"இயேசு தெரியாவிட்டால்?"

"'நாங்கள் சரியாக வாழவில்லை என்று அர்த்தம்.

இயேசுவின் ஒளியியில், அவர் காட்டும் வழியில் நாங்கள் நடந்தால் 

நிச்சயமாக நீங்கள் அவரைக் காண்பீர்கள்."

"இயேசு காட்டும் வழியில் நடந்தால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?"

"'இவ்வுலகில் எங்கள் வாழ்வு முடிந்தவுடன் விண்ணுலகில் இயேசு எங்களை ஏற்றுக் கொள்வார்.

அவரோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment