Wednesday, October 11, 2023

என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்.(லூக்.11:23)

என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்.
(லூக்.11:23)

ஒரு வினாத்தாளில் சரியான விடையைத் தேர்ந்தெடு கேள்வியில் பின்வரும் கேள்வி கேட்கப் பட்டிருந்தது.

23 x 23 = 529 (a) சரி
          : '             (b) தவறு
                          (C)சரியாகவும் . 
                                 இருக்கலாம்,
                                  தவறாகவும்
                                  இருக்கலாம்.

ஒரு மாணவன் சரியாகவும் . 
                        . இருக்கலாம்,
                                  தவறாகவும்
                                  இருக்கலாம்

என்று விடை எழுதியிருந்தான்.

ஆசிரியர் விடையைத் தவறு என்று குறித்து மதிப்பெண் கொடுக்கவில்லை.
'
விடைத்தாளைப பெற்ற பின் மாணவன் ஆசிரியரிடம் வந்து,

"சார், இந்த பதிலுக்கு அரை மதிப்பெண்ணாவது கொடுங்கள்" என்றான்.

ஆசிரியர் மாணவனுக்கு ஒரு அறை கொடுத்தார்.

"சார், எனது முழு விடையும் தவறாக இருக்கலாம். ஆனாலும் சரியாக இருக்கலாம் என்று எழுதியிருக்கிறேனே.

அதில் உள்ள சரி என்ற வார்த்தைக்காவது பாதி மதிப்பெண் கொடுங்கள்." என்று கேட்டான்.

ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து,

''நன்கு கவனியுங்கள்.

ஒரு விடை முழுவதும் சரியாக இருக்கும். அல்லது முழுவதும் தவறாக இருக்கும்.

பாதி சரியாக இருக்க முடியாது.

சரியாக இல்லை என்றால் தவறு."

இந்த தத்துவம் ஆன்மீகத்துக்கும் பொருந்தும்.

ஒருவன் ஆன்மீக வாழ்வில் முன்னேறுவான். அல்லது பின்னடைவான்.

முன்னேறாமலும் பின்னடையாமலும் அதே இடத்தில் இருக்க முடியாது.

(In spiritual life one will progress or regress, he can't stagnate.)

அதே போல ஒருவன் கடவுளுக்கு ஊழியம் செய்வான் 

அல்லது 

சாத்தானுக்கு ஊழியம் செய்வான்.

யாருக்கும் ஊழியம் செய்யாமல் இருக்க முடியாது.

ஒருவன் கடவுள் இருக்கிறார் என்பதை நம்பி அவருக்கு ஊழியம் செய்கிறான்.

ஒருவன் கடவுளையும் நம்பவில்லை, சாத்தானையும் நம்பவில்லை. அவன் யார் பக்கம்?

சாத்தான் இல்லை என்று அவன் சொன்னாலும் அவன் சாத்தான் பக்கம்தான்.

கடவுள் பக்கம் இல்லாதவன் அவருக்கு எதிர்ப் பக்கத்தில் இருக்கிறான்.

கடவுள் இருக்கிறார் என்று நம்பும் ஒருவன் அவரது கட்டளைகளுக்கு கீழ்ப்படியாவிட்டால் அவன் கடவுளுக்கு எதிர் அணியில் அதாவது சாத்தான் அணியில் இருக்கிறான்.

ஒருவன் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவனாக இருக்கலாம்.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை உள்ளூரில் திருப்பலி இருந்தும்

 திருப்பலியில் கலந்து கொள்ளாமல் வியாபாரம் செய்ய புறப்படுகிறவன் கிறிஸ்தவன் அல்ல.

இயேசுவை பின்பற்றுகிறேன் என்று சொல்லிக்கொண்டு

 தனது இல்ல திருமண விழாவை

 நல்ல நேரம், சகுனம் பார்த்து நடத்துபவன்

 (திருமணம் நமது கோவிலில் நடந்தாலும்)

 கிறிஸ்தவன் அல்ல.

கத்தோலிக்க திருச்சபையின் போதனைப்படி எல்லா நேரமும் நல்ல நேரம்தான்.

நல்ல நேரம், சகுனம் பார்ப்பது இறை நம்பிக்கைக்கு எதிரான பாவம்.

சகுனத்தை நம்புகிறவன் இறைவனை நம்பவில்லை.

உண்மை நிகழ்வு:

ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர் தன் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்திருந்தார்.

சகுனம் பார்த்து திருமணத்திற்கான நாளையும் நேரத்தையும் குறித்து வைத்துக் கொண்டார்.

திருமண நாளில் பங்குக் குருவிடம் சென்று,

"சுவாமி சரியாக 10 மணிக்கு பெண்ணின் கழுத்தில் தாலி ஏற வேண்டும்.

ஒரு நிமிடம் கூட நேரம் முந்தவோ பிந்தவோ கூடாது." என்றார்.

குருவானவர் பதில் ஒன்றும் கூறவில்லை.

ஆனால் திருமண திருப்பலியின் போது சுவாமியார் பிரசங்கத்தின் நேரத்தை வேண்டுமென்றே நீட்டி விட்டார்.

பெண்ணின் தந்தைக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

ஆனால் திருப்பலியின் போது ஒன்றும் செய்ய முடியவில்லை.

பதினோரு மணிக்கு பெண்ணின் கழுத்தில் தாலி ஏறியது தாலி.

பூசை முடிந்தவுடன் கோபத்தோடு சுவாமிரிடம் வந்தார்.

சுவாமியார் கத்தோலிக்க திருச்சபையின் நிலையை எடுத்துக் கூறினார்.

 அவர் கூறியதை பெண்ணின் தந்தை ஏற்றுக்கொண்டார்.

மணமக்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன் முழுமையாக கத்தோலிக்க கிறிஸ்தவனாக வாழ வேண்டும்.

காலையில் நமது ஆலயத்தில் திருப்பலியில் கலந்து விட்டு

  மாலையில் பிரிவினை சபையார் நடத்தும் சுகம் அளிக்கும் ஜெப கூட்டத்தில் கலந்து கொள்பவன் கத்தோலிக்க அல்ல.

கடவுள் கொடுத்த பத்து கட்டளைகளையும் அனுசரிக்க வேண்டும்.

ஏதாவது ஒரு கட்டளையை மட்டும் அனுசரிக்காமல் இருந்தால் அவன் 10 கட்டளைகளை அனுசரிக்கவில்லை.

தீர்வை நாளில்,

"ஆண்டவரே நான் 10 கட்டளைகளில் ஒன்பதை மட்டும் ஒழுங்காகக் கடைபிடித்தேன்.

ஒரு கட்டளையை மட்டும் கடைபிடிக்கவில்லை.

எனக்கு மோட்சத்தில் பத்தில் ஒன்பது பங்கு தாரும்"

 என்று கேட்டால்,

ஆண்டவர் கூறுவார்,

"ஒன்று முழுமையாக மோட்சத்திற்கு வர வேண்டும்.

 அல்லது முழுமையாக நரகத்திற்குச் செல்ல வேண்டும்.

 பத்தில் ஒன்பது பங்கு மோட்சம், பத்தில் ஒரு பங்கு நரகம் என்ற கணக்கு இங்கு செல்லாது." என்று கூறுவார்.

தனது முன்மாதிரியான வாழ்க்கையால் மக்களை இறைவன் பக்கம் சேர்க்காதவன்,

மக்களை இறைவன் பக்கம் வர விடாமல் வாழ்கிறான்.

அதனால் தான்,

"என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்."

என்று ஆண்டவர் சொல்கிறார்.

திருமண விருந்துக்குச் செல்லும்போது விருந்து ஆரம்பிக்கும் ஆரம்பிக்கும் முன்பே சென்று விடுகிறோம்.

ஞாயிறு திருப்பலிக்குப் பாதி பூசை முடிந்த பின் வந்தால்,

பூசைக்கு வரவில்லை என்று தான் அர்த்தம்.

ஒருவர்

 "சென்று வாருங்கள், பூசை முடிந்து விட்டது"

 என்று சுவாமியார் செல்லும்போது கோவிலுக்குள் நுழைந்தார்.

"ஏன்?" என்று கேட்டால்,

"பூசை முடிந்த பின் சபையார் கூட்டம் நடைபெறும் " என்று சுவாமியார் போன வாரம் சொன்னார். நான் சபையார். கூட்டத்திற்கு வந்திருக்கிறேன்" என்று பதிலளித்தார்.

பூசைக்கு வராதவருக்கு சபையார் கூட்டத்தில் என்ன வேலை?

நம்மில் அநேகர் பெயரளவில் மட்டும் கிறிஸ்தவர்களாக வாழ்கிறார்கள்.

முழுமையான கிறிஸ்தவர்களாக வாழ்வோம். 

முழுமையாக வாழ்ந்தால் தான் முழுமையாக மோட்சத்திற்குள் நுழைய முடியும்.

லூர்து செல்வம்..

No comments:

Post a Comment