Saturday, October 7, 2023

அவர் உரைத்த உவமைகளைக் கேட்ட தலைமைக்குருக்களும் பரிசேயரும் தங்களைப்பற்றியே கூறினார் என்று உணர்ந்து அவரைப் பிடிக்க வழிதேடினர். (மத்.21:45)

அவர் உரைத்த உவமைகளைக் கேட்ட தலைமைக்குருக்களும் பரிசேயரும் தங்களைப்பற்றியே கூறினார் என்று உணர்ந்து அவரைப் பிடிக்க வழிதேடினர். 
(மத்.21:45)

திராட்சைத் தோட்ட உவமையில் தனது விருப்பப்படி செயல்படாத தோட்ட ஊழியர்களிடமிருந்து தோட்டத்தைப் பிடுங்கி

 உரிய காலத்தில் பலனைக் கொடுக்கும் வேறு குடியானவரிடம் திராட்சைத் தோட்டத்தை விடுவான் என்று இயேசு கூறுகிறார்.

தவாறான முறையில் செயல்பட்டுக் கொண்டிருந்த தோட்டக்கார ஊழியர்களை போலவே 

மோயீசன் கொடுத்த திருச்சட்டத்திற்கு பாதுகாவலர்களாக இருக்க வேண்டிய

தலைமைக்குருக்களும் பரிசேயரும் அதை உணர்வு பூர்வமாக(In Spirit) அனுசரிக்காமல்,

எழுத்துப் (in |etter) பூர்வமாக மட்டும் அனுசரித்து வந்ததோடு, '

தங்கள் இஷ்டம் போல வாழ அதைப் பயன்படுத்தி கொண்டிருந்தார்கள்.

ஆகவே கடவுளின் அரசு அவர்களிடமிருந்து எடுபட்டு ஏற்ற பலனைத்தரும் இனத்தாருக்கு அளிக்கப்படும் என்று இயேசு கூறுகிறார்.

பரிசேயர்கள், தலைமை குருக்கள் ஆகியோரிலேயே நிலைமை ஒரு புறம் இருக்கட்டும்.

நம்மால் திருத்த முடியாத அவர்களுடைய நிலையைப் பற்றி ஆலோசிக்காமல் நமது நிலையை பற்றி ஆலோசிப்போம்.

நாம் கத்தோலிக்க திருச்சபையின் உறுப்பினர்கள்.

உணர்வு பூர்வமாக உறுப்பினர்களா அல்லது வெறும் பெயரில் மட்டும் உறுப்பினர்களா?

ஒரு பையனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டால் மட்டும் அவன் மாணவனாகி விடுவானா?

அவன் பாடங்களை ஒழுங்காக படித்தால் மட்டுமே மாணவன்.

பாடங்களைப் படியாமல் வெறுமனே பள்ளிக்கூடத்துக்குப் போய், வருபவனாக மட்டும் இருந்தால் அவன் பேருக்கு மட்டும் மாணவன், உண்மையில் மாணவன் அல்ல.

நாமும் அப்படித்தான்.

ஞானஸ்தானம் பெற்று விட்டதால் மட்டும் உண்மையான கிறிஸ்தவர்கள் ஆகி விட மாட்டோம்.

உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ்ந்தால் மட்டும் நாம் கிறிஸ்தவர்கள்.

 பெயருக்கு மட்டும் கிறிஸ்தவர்களாக இருந்தால் கிறிஸ்தவர்களாக இருப்பதில் எந்த பயனும் இல்லை.

நமக்கும் அஞ்ஞானிகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

கிறிஸ்தவன் என்பதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பூசைக்கு போகிறோம்.
'
கோவிலுக்குள் போய் அமர்கிறோம். பூசையைப் பார்க்க மட்டும் செய்கிறோமா அல்லது குருவானவரோடு சேர்ந்து திருப்பலியை ஒப்புக்கொள்கிறோமா?|

கண் முன் இலையில் இருக்கும் பிரியாணியைப் பார்த்துக் கொண்டே இருந்தால் வயிறு நிறையுமா?

ருசித்து சாப்பிட்டால் மட்டுமே வயிறு நிறையும்.

அதேபோல வெறுமனே பீடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் மட்டும் திருப்பலியின் பயனை அடைய முடியாது.

நாம் கிறிஸ்தவர்களாக இருப்பதன் பயனை அடைய முடியாது.

குருவானவரின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்து நமது இருதயத்திற்குள் அனுப்ப வேண்டும்.

நாம் சொல்லும் ஜெபமும் நமது இருதயத்திலிருந்து வரவேண்டும்.

குருவானவரோடு முழுக்க முழுக்க இணைந்து திருப்பலியை முழு மனதோடும் முழு இருதயத்தோடும் ஒப்புக்கொடுக்க வேண்டும்.

கோவிலுக்கு பைபிளைக் கொண்டு வருவதில் தவறு இல்லை.

வகுப்பில் சில மாணவர்கள் ஆசிரியரின் போதனையைக் கவனிக்காமல் கையில் இருக்கும் பாடப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டேயிருப்பார்கள்.
'
ஆசிரியர் கூறுவது காதில் விழும். மூளைக்குள் ஏறாது.

அதே போல சாமியார் பிரசங்கம் வைக்கும் போது சிலர் பைபிளை புரட்டிக் கொண்டேயிருப்பார்கள்.

பிரசங்கத்தால் அவர்களுக்கு ஒரு பயனும் இல்லை.

திருப்பலியில் முழு மனதோடு கலந்து கொள்ளாதவர்களுக்கு திருப்பலியின் பயன் எதுவும் கிடைக்காது..

:
இத்தகைய கிறிஸ்தவ ஈடுபாடு. திருப்பலிக்கு மட்டுமல்ல, கிறிஸ்தவனின் ஒவ்வொரு விநாடி வாழ்வக்கும் பொருந்தும்.
'
காலையில் எழும்போது தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் எழாமல் 

Phone நிகழ்ச்சிகளை அனுபவித்து கொண்டு எழுபவன் உண்மையான கிறிஸ்தவன் அல்ல.

எழுந்தவுடன் இறைவனைத் தேடாமல் காபியைத் தேடுபவன் உண்மையான கிறிஸ்தவன் அல்ல.


இறைவனுக்கு நன்றி கூறாமல் கிடைக்கும் உணவை உண்பவன் உண்மையான கிறிஸ்தவன் அல்ல.

தனக்கு தீமை செய்தவர்களை மன்னிக்காதவன் உண்மையான கிறிஸ்தவன் அல்ல.

தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்யாதவன் .உண்மையான கிறிஸ்தவன் அல்ல.

 தனது ஒவ்வொரு வேலையையும் தந்தை, மகன், தூய ஆவிக்கு ஒப்பு கொடுக்காதவன் உண்மையான கிறிஸ்தவன் அல்ல.
.
தனக்குத் துன்பங்கள் வரும் பொழுது அவற்றை தனது பாவங்களுக்கு பரிகாரமாக கடவுளுக்கு ஒப்பு கொடுக்காதவன் உண்மையான கிறிஸ்தவன் அல்ல.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்கள் அயலானுக்கு நற்செய்தி அறிவிக்காதவர்கள்,

தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் கடவுள் நம்மை பராமரித்து வருகிறார் என்பதை ஏற்றுக் கொள்ளாதவர்கள்,

என்ன நேர்ந்தாலும் நமது நன்மைக்கே என்பதை ஏற்றுக் கொள்ளாதவர்கள்,

சாவான பாவத்தில் விழ நேர்ந்தால் பாவ சங்கீர்த்தனம் செய்யாதவர்கள்,

தகுந்த தயாரிப்பு இல்லாமல், சாவான பாவ நிலையில் திவ்ய நற்கருணை வாங்குபவர்கள்,

எல்லாம் இறைவன் திட்டப்படியே நடக்கும் என்பதை ஏற்றுக் கொள்ளாதவர்கள்,

திருமண இன்பத்தை இறைவனுக்கு ஒப்புக் கொடுக்காமல்,

 வெறுமனே உலக இன்பத்துக்காக மட்டும் அனுபவிப்பவர்கள், 

பிள்ளைகளை இறைவனது திட்டப்படி வளர்க்காதவர்கள்

போன்ற அனைவரும் உண்மையான கிறிஸ்தவர்கள் அல்ல.

கர்த்தர் கற்பித்த செபத்தை பக்தியுடன் சொல்பவர்களுக்கு யார் உண்மையான கிறிஸ்தவர்கள் என்பது புரியும்.

விண்ணக தந்தையை தங்கள் தந்தையாக ஏற்றுக் கொள்பவர்கள்,

புனிதமான அவரது பெயரின் மகிமைக்காக வாழ்பவர்கள்,

உலகெங்கும் அவரது அரசுக்குள் வர பாடுபடுபவர்கள்,

விண்ணகவாசிகள் இறைவனின் சித்தத்தை அனுசரிப்பது போல தாங்களும் அவரது சித்தப்படி வாழ்பவர்கள்,

இறைவன் தரும் அன்றாட உணவோடு திருப்தி அடைபவர்கள்,

தங்களுக்குத் தீமை செய்தவர்களை மன்னிப்பதோடு தாங்கள் செய்த பாவங்களுக்கும் இறைவனிடம் மன்னிப்பு கேட்பவர்கள்,

பாவச் சோதனைகள் வரும்போது தந்தையின் உதவியோடு அவற்றை வெல்பவர்கள்,

அனைத்துத் தீமைகளிலிருந்தும் விலகி நடப்பவர்கள்

மட்டுமே உண்மையான கிறிஸ்தவர்கள்.

கிறிஸ்துவின் போதனைப்படி நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்வோம். 

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment