Wednesday, October 18, 2023

உடலைக் கொன்றபின் அதற்குமேல் ஒன்றும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்சாதீர்கள்.,( லூக். 12:4)

உடலைக் கொன்றபின் அதற்குமேல் ஒன்றும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்சாதீர்கள்.,( லூக். 12:4)

"நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதை மறந்து விட்டீர்களா?"

"யார் சொன்னது?"

"யாருமே சொல்லவில்லை. நேற்று பூசைக்கு வரவில்லையே.
அதனால் தான் கேட்டேன்?"

"பூசைக்கு வராதது என் தப்புதான்.
ஆனால் என் நிலைமை அப்படி ஆகிவிட்டது?"

''அப்படி என்ன நிலைமை?"

"உங்களால் மணிக்கணக்காக நடக்க முடியும் தானே!"

"'ஆமா."

"யாராவது உங்கள் கால்கள் இரண்டையும் சேர்த்து இறுக்கக் கட்டி போட்டு விட்டால் உங்களால் நடக்க முடியுமா?"

"நிச்சயமாக முடியாது."

"அப்படித்தான் என் நிலையும்."

"ஞாயிற்றுக் கிழமையன்று உனது கால்களை யாராவது கட்டிப் போட்டு விட்டார்களா?"  

"கால்களைக் கட்டி போடவில்லை.
என்னை முழுவதும் கட்டிப் போட்டு விட்டார்கள்."

"'யார் உன்னை முழுவதும் கட்டிப் போட்டது?''

"நான் வேலை பார்க்கும் கடை முதலாளி ஞாயிற்றுக் கிழமையன்று கடையை விட்டு எங்கும் போகக் கூடாது என்றும்,  

 மீறிப் போனால் வேலை கிடையாது என்றும்  சொல்லிவிட்டார்.

அதனால்தான் என்னால் 
பூசைக்கு வர முடியவில்லை."

"ஞாயிற்றுக் கிழமை பூசைக்கு வராவிட்டால் சாவான பாவம் என்று உனக்குத் தெரியுமா? தெரியாதா?"

''தெரியும்."

"சாவான பாவத்தோடு மரித்தால் நித்திய நரகத்துக்குப் போக வேண்டியிருக்கும் என்பது தெரியுமா? தெரியாதா?"

"அதுவும் தெரியும்."

'அப்படியானால் நித்திய மோட்ச வாழ்வை விட உனக்கு இவ்வுலக வேலை தான் முக்கியம்.

கடவுளை விட உனது கடை முதலாளி தான் முக்கியம்.

 அப்படித்தானே."

''கடவுள் தான் முக்கியம். ஆனாலும் சாவான பாவத்தோடு மரணம் அடைந்தால் தானே நரகத்துக்கு போக நேரிடும்.

நான் நன்றாகத் தானே இருக்கிறேன்.

எனக்கு இப்போது மரணம் வராது."

"நன்றாக இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களில் எத்தனை பேர் Heart attack கினால் இறந்து போயிருக்கிறார்கள் தெரியுமா?"

'எனது இதயம் நன்றாகத்தான் இருக்கிறது. எனக்கு Heart attack வராது."

'நேற்று மாலையில் நமது ஊரிலேயே நான்கு பேர் கார் விபத்தில் இறந்ததைப் பற்றி கேள்விப்படவில்லையா?

சுனாமியால் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பேருக்கு தாங்கள் இறப்போம் என்று அதற்கு முந்திய வினாடி வரை தெரியாது.

துருக்கியில் நடந்த பூமி அதிர்ச்சியில் விழுந்த நகரத்தைப் பற்றி பத்திரிகைகளில் நீ வாசித்ததில்லையா?

மரணம் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரும்.

எதிர்பாராத நேரத்தில் கூட வரும்.

எப்போதும் சாவான பாவம் இல்லாத பரிசுத்தமான ஆன்மாவோடு வாழ்ந்தால் தான், 

எப்போது மரித்தாலும் மோட்சத்திற்குச் செல்வோம்.

இவ்வுலக முதலாளிகளையும், நிரந்தரமற்ற வாழ்க்கையையும்
 விட,

 நித்திய கடவுளும், நித்திய பேரின்ப வாழ்வும் தான் நமக்கு முக்கியம்.

இவ்வுலக முதலாளிக்குக் கீழ்படிவதற்காக  நம்மைப் படைத்த கடவுளை  எதிர்த்த நீ ஒரு முட்டாள்."

"நான் கடவுளை எதிர்க்கவில்லையே!" 

"பாவம் கடவுளுக்கு எதிரானது.
எதிரானதைச் செய்பவன் எதிர்ப்பவன் தானே.

உன் மகன் உனது பகைவனோடு கூட்டுச் சேர்ந்தால் அவன் உன்னை எதிர்க்கிறானா? ஆதரிக்கிறானா?"

"இப்போது புரிகிறது. நான் செய்தது கடவுளுக்கு எதிராக சாவான பாவம்.

உடனடியாக சுவாமியாரிடம் சென்று பாவ சங்கீர்த்தனம் செய்து கொள்கிறேன்.

எனது வேலைக்கு என்ன நேர்ந்தாலும் கவலை இல்லை.

இனிமேல் ஒழுங்காக ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு வந்து விடுவேன்.

தங்களது புத்திமதிக்கு நன்றி"

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment