Tuesday, October 17, 2023

அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு ஆதலால் தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்.(லூக்.10:2)

அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு ஆதலால் தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்.(லூக்.10:2)

அறுவடையின் ஆண்டவர் இயேசு அவர் அனுப்புகின்ற ஆட்களைப் பார்த்து

 "தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்." என்று கூறுகிறார்.

வயல் உரிமையாளர் வயலில் அறுவடை அதிகமாக இருந்தால் அதிகமான ஆட்களை அழைத்து வருவது வழக்கம்.

இயேசு தன்னை வயல் உரிமையாவதாகக் கற்பனை செய்து கொள்கிறார்.

உலகம் அவளுடைய வயல்.

அறுவடை நற்செய்தி அறிவித்தல்.

நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டிய மக்கள் ஏராளமாக உள்ளனர்.

நற்செய்தியை அறிவிக்கும் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்பவர் வயல் உரிமையாளரான ஆண்டவர் தான்.

நற்செய்தி பணிக்காக ஆள்கள் ஆண்டவரால் தேர்வு செய்யப்படுவதை தேவ அழைத்தல் என்கிறோம்.

அழைப்பவர் ஆண்டவர் இயேசு தான்.

அவரே நம்மைப் பார்த்து,

"நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டிய மக்கள் ஏராளமாக உள்ளனர்.

ஆகவே அப்பணிக்கு அதிகமான ஆட்களை தேர்வு செய்யும்படி என்னை மன்றாடுங்கள்.'

அறுவடையின் ஆண்டவரே அவர்தான்,

அதனால்தான் என்னை மன்றாடுங்கள் என்று குறிப்பிட்டேன்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று இயேசு சொல்லும்போது 

என்னைக் " கேளுங்கள்" என்றுதானே சொல்கிறார்!

ஏன் அவர் செய்ய வேண்டிய வேலையை செய்யும்படி நம்மைக் கேட்க சொல்கிறார்?

நாம் கேட்காமலேயே அவரால் அறுவடைக்கான ஆட்களை தேர்வு செய்ய முடியுமே?

முதலில் நாம் கிறிஸ்தவர்கள், அதாவது, கிறிஸ்துவின் சீடர்கள், என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.

குரு செய்யும் பணிக்கு முழுமையாக ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டியவன் சீடன்.

அந்த வகையில் நற்செய்தி அறிவிக்கும் பணி இயேசுவுடையது மட்டுமல்ல நமது பணியும் தான்.

என்று நாம் ஞானஸ்நானம் பெற்றோமோ, 

அன்றே, 

இறை மகனாகிய இயேசு என்ன பணி செய்ய உலகுக்கு வந்தாரோ 

அப்பணியில் அவருக்கு உதவிகரமாக இருக்க  சீடர்கள் என்ற முறையில் நமக்குக் கடமை ஏற்பட்டது.

இயேசு மனிதர்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் பட்டு, மரித்து, 

அவர்களைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக மனிதனாய் பிறந்தார்.

இயேசு மீட்க வந்தது மனிதர்களை, 

ஆகவே மனிதர்கள் என்ற முறையில் அவருக்கு முழுமையான ஒத்துழைப்புக் கொடுக்க நமக்கு கடமை உண்டு.

நமது குடும்பம் ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் போது

 அதைத் தீர்க்க ஒருவர் உதவிக்கு வந்தால் குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது உண்மைதானே.

மனுக்குலம் நமது குடும்பம்.

அதை மீட்கவே இயேசு மனிதனாகப் பிறந்தார்.

நாம் அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.

நாம் எப்படி ஒத்துழைப்புக் கொடுப்பது?

முதலாவது நாம் அவரை நமது மீட்பராக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அடுத்து அவர் நமது மீட்புக்காக என்னவெல்லாம் செய்தாரோ, அவற்றில் நம்மால் செய்ய 
முடிந்தவற்றை செய்ய வேண்டும்.


அவர் நமக்காக பாடுகள் பட்டு மரித்து, அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாகப் பரம தந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

நாம் நமக்கு வரும் துன்பங்களைப் பாடுகளாக ஏற்றுக்கொண்டு,

அவற்றை நமது பாவங்களுக்கும், அகில உலகத்தின் பாவங்களுக்கும் பரிகாரிமாக பரம தந்தைக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

இதைத்தான் இயேசு சிலுவையைச் சுமந்து கொண்டு என் பின்னால் வருபவனே எனது சீடன் என்கிறார்.

இயேசு உலக மக்களின் பாவங்களை மன்னிப்பதற்காக உலகிற்கு வந்தார்.

நாம் மன்னிக்கும் மனப்பான்மையைப் பெற வேண்டும்.

உலகத்தின் பாவங்களை மன்னிக்க நமக்கு அதிகாரம் இல்லை. ஆனால் நமக்கு விரோதமாக குற்றம் செய்தவர்களை நாம் மன்னிக்க வேண்டும்.

உலகத்தின் பாவங்களை மன்னிக்க இயேசுவால் நிறுவப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபையின் குருக்களுக்கு அதிகாரம் உண்டு.

இது இயேசுவால் கொடுக்கப்பட்ட அதிகாரம்.

அதிகமான குருக்களை உலகிற்கு அனுப்பும்படி இயேசுவிடம் மன்றாட வேண்டும்.

அதாவது தேவ அழைத்தல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி அழைக்கும் ஆண்டவரைக் கேட்க வேண்டும்.

நம்மைக் குருத்துவப் பணிக்கு இயேசு அழைத்தால் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

குருக்களுக்கு அதிகாரபூர்வமாக விளக்கங்களோடு நற்செய்தி அறிவிக்கும் பணி உண்டு.

இதுதான் அறுவடைப் பணி.

இந்த அறுவடை பணிக்கு அதிகமான ஆட்களை, அதாவது, ' குருக்களை அனுப்பும்படி 
அறுவடையின் ஆண்டவராகிய இயேசுவிடம் மன்றாட வேண்டும்.

இவ்வாறு மன்றாடும் போது, நாம்
 அறுவடைப் பணியில் அதிகமான ஆர்வம் காட்டுகிறோம்.

நாம் சாதாரண சீடர்கள். நாம் நமது குருவாகிய இயேசுவிடம் அடிக்கடி மன்றாடும் போது, குரு-
சீடர் உறவு நெருக்கம் அடைகிறது.

அறுவடையின் ஆண்டவரை மன்றாடினால் மட்டும் போதாது.

நமது குடும்பங்களிலிருந்து தான் இயேசு குருத்துவத்திற்கான ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறார்.

நமது பிள்ளைகளை அதற்கான சூழ்நிலையில் நல்ல, இறைபணியில் ஆர்வம் உள்ள கிறிஸ்தவ பிள்ளைகளாக வளர்க்க வேண்டும்.

குடும்பம் தான் குருத்துவத்தின் நாற்றங்கால்.
அதைப் பராமரிக்கும் பொறுப்பினை இயேசு பொது நிலையினரிடம் தான் ஒப்படைத்திருக்கிறார்.

நாம் நமது கிறிஸ்தவக் கடமைகளை உணர்ந்து நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்ந்தால் தான் நமது பிள்ளைகளும் நம்மை போல வளர்வார்கள்.

மாவு சரியாக இருந்தால் தான் இட்லி நல்லதாக இருக்கும்.

நல்ல குடும்பங்களிலிருந்து தான் நல்ல குருக்கள் உற்பத்தியாவார்கள்.

நல்ல குடும்பங்களைப் பராமரிப்பதன் மூலம்  அறுவடைக்குச் சரியான ஆட்களைத் தேர்ந்தெடுக்க இயேசுவைக்கே உதவுகிறோம்.

நமது பிள்ளைகளுக்கு சரியான முறையில் நற்செய்தியை அறிவித்து, அதன்படி வாழ அவர்களுக்கு உதவுவதின் மூலம்,
அவர்கள் குருத்துவத்தைத் தேர்ந்தெடுக்க உதவுகிறோம்.

 அறுவடைக்காக அதிகமான ஆட்களை தேர்ந்தெடுக்கும் படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுவோம்.

நமது குடும்பங்களிலிருந்து தான் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதால் நமது பிள்ளைகளை அதற்கு ஏற்றவர்களாக வளர்ப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment