கடவுளின் தாய் மரியாள்.
(தொடர்ச்சி
"தாத்தா, அந்த ஆள் சொல்றாரு,
இயேசு பிறந்த பிற்பாடு மாதாவுக்கு சூசையப்பர் மூலமாக குழந்தைகள் பிறந்தனவாம்,
அவள் இயேசு பிறக்கும் வரை தான் கன்னியாம்.
முக்காலமும் கன்னி இல்லையாம்.
வசன ஆதாரங்கள் இருக்கின்றனவாம்.
என்ன பதில் சொல்கிறீர்கள்."
",நாற்காலிக்கு எத்தனை கால்கள்?"
"நான்கு கால்கள்."
",ஒரு நாற்காலியின் ஒரு காலை அப்புறப்படுத்தி விட்டால் அதன் பிறகு அதை நாற்காலி என்று சொல்லலாமா?"
"முக்காலி என்று வேண்டுமானால் சொல்லலாம்.''
",பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களையும்,
புதிய ஏற்பாட்டு புத்தகங்களையும்
பைபிள் என்ற ஒரே நூலாக மக்களுக்கு தந்தது கத்தோலிக்க திருச்சபை.
கத்தோலிக்க திருச்சபை தந்த பைபிளில் மொத்தம் 73 .புத்தகங்கள் உள்ளன.
பழைய ஏற்பாடு 46 புத்தகங்கள்.
புதிய ஏற்பாடு 27 புத்தகங்கள்.
73 புத்தகங்களைக் கொண்ட பைபிள் கத்தோலிக்க திருச்சபையின் சொத்து.
16 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க திருச்சபையை விட்டு பிரிந்து சென்ற Protestants
உண்மையான முழுமையான கத்தோலிக்க பைபிளிலிருந்து ஏழு புத்தகங்களை அப்புறப்படுத்தி விட்டு
மீதி 66 புத்தகங்கள் உள்ள நூலை பைபிள் என்று கூறிக்கொண்டு
கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையான பைபிளிலிருந்து 7 புத்தகங்களை நீக்கியது போலவே,
வசனங்களுக்கு தங்கள் இஷ்டம் போல் பொருள் கூறுவதிலும் அவர்கள் வல்லவர்கள்.
இன்று ஆயிரக்கணக்கான Protestant பிரிவுகள் உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரே வசனத்திற்கு ஒவ்வொரு பிரிவும் ஒரு பொருள் கொடுக்கும்.
உண்மையான பொருள் முழுமையான பைபிளைத் தந்த கத்தோலிக்க திருச்சபையிடம் தான் உள்ளது.''
"தாத்தா, ஒரு நிமிடம். என் நண்பன் ஒருவன் ஒளவையார் மது அருந்தும் படி நமக்கு புத்திமதி சொல்கிறார் என்கிறான்.
அதற்கு அவளுடைய ஆத்திசூடியையே ஆதாரமாக காட்டுகிறான்.
"ஊக்கமது கைவிடேல்."
பதவுரை :
ஊக்கம் = ஊக்கம் தரக்கூடிய,
மது = மதுவை,
கைவிடேல் = கைவிட்டு விடாதீர்கள்.
பொருளுரை:
எல்லோரும் எப்போதும் மது அருந்தி கொண்டே இருங்கள்."
",Protestant கள் வசனங்களுக்கு பொருள் கூறுவதற்கு நீ சொல்வது நல்ல ஒப்புமை.
இயேசு மனிதனாய் பிறந்து உலகுக்கு வந்ததன் ஒரே நோக்கம் பாவ பரிகாரமாக தன்னையே பலி கொடுப்பதற்கு, அதன் மூலம் நாம் பாவ மன்னிப்பு பெறுவதற்கு.
வந்த இடத்தில் தான் அவர் நற்செய்தியை அறிவித்தார், புதுமைகள் பல செய்து நோயாளிகளை குணமாக்கினார்.
நற்செய்தியை அறிவித்த காலத்திலும், புதுமையாக செய்து நோயாளிகளைச் குணமாக்கிய போதும்
இயேசு அடிக்கடி சொல்வார்:
"என் நேரம் இன்னும் வரவில்லை."
அவர் நேரம் என்று குறிப்பிடுவது
அவர் உலகிற்கு எதற்காக வந்தாரோ அந்த நேரம்,
அதாவது பாவப் பரிகாரமாக பாடுகள் பட்டு, மரிக்கும் நேரம்.
புனித வியாழன், புனித வெள்ளி, ஈஸ்டர் ஞாயிறு இவைதான் அவரது நேரத்திற்குள் அடங்கும்.''
"அப்போ இயேசு நோயாளிகளைக் குணமாக்குவதற்காக வரவில்லையா?''
",குற்றாலத்திற்கு எதற்காகப் போகிறோம்?"
''குளிப்பதற்காக.''
",பஸ்ஸில் ஏறுவதற்கும் அதிலிருந்து இறங்குவதற்கும், துண்டு வாங்குவதற்கும்,
கடையில் இட்லி சாப்பிடுவதற்கும்
போகவில்லையே.
அதே போல் தான் இயேசு உலகிற்கு வந்தது நம்மை பாவத்திலிருந்து மீட்க,
அதற்காகத்தான் பாடுகளும் சிலுவை மரணமும், உயிர்ப்பும்.
அவரது 33 ஆண்டு வாழ்வும் இதற்கான தயாரிப்பு காலம்தான்.
கத்தோலிக்க திருச்சபை இந்த நேரத்தைத் தான் தினமும் கொண்டாடுகிறது.
தினமும் திருப்பலி ஒப்புக் கொடுத்து, திவ்ய நற்கருணை வழங்குவதன் மூலம் இயேசு உலகிற்கு வந்ததன் நோக்கத்தை கத்தோலிக்க திருச்சபை கொண்டாடுகிறது.
எங்கே பாவ சங்கீர்த்தனமும், திருப்பலியும்,
திவ்ய நற்கருணையும் இருக்கிறதோ
அங்கேதான் கத்தோலிக்க திருச்சபையும் இருக்கிறது.
நான் சொல்வதன் கருத்து உனக்கு புரியும் என எண்ணுகிறேன்."
"புரிகிறது. இந்த மூன்றும் உள்ள சபைதான் இயேசுவால் நிறுவப்பட்ட கத்தோலிக்க திருச்சபை."
",எங்கே திவ்ய நற்கருணைப் பேழை இருக்கிறதோ அதுவே இயேசு வாழும் ஆலயம்.
பிரிவினை சபையினர் வைத்திருப்பது செபக் கூடங்கள் மட்டும் தான்.
புனித வியாழன் அன்று இயேசு தனது அப்போஸ்தலர்களுக்குக் குருப் பட்டம் கொடுத்தார்.
அவர்களிலிருந்து தொடர்ச்சியாக வரும் அவர்களது வாரிசுகளாகிய குருக்களால் மட்டுமே இயேசு புனித வியாழனன்று செய்ததை செய்ய முடியும்,
அதாவது அப்பத்தை இயேசுவின் உடலாகவும் ரசத்தை அவருடைய இரத்தமாகவும் மாற்ற முடியும்.
அதாவது அவர்களால் மட்டுமே திருப்பலி நிறைவேற்ற முடியும்.
பாப்பரசரின் தலைமையில் இயங்கும் திருச்சபை தான் இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட திருச்சபை.
அது கத்தோலிக்க திருச்சபை மட்டுமே."
"மாதாவின் கன்னிமைக்கு எதிராக மற்றவர்கள் கூறும் கருத்துக்களுக்கு பதில் கேட்டால்
நீங்கள் அதை இன்னும் சொல்லவில்லை."
",எனது மகன் சின்னப் பையனாக இருக்கும்போது
"அப்பா, உவரி அந்தோனியார் கோவிலுக்குப் போக வேண்டும்" என்று சொன்னான்.
நாங்களும் கோவிலுக்கு போவதற்காக Bus stand குப் போனோம்.
என் மகன் கேட்டான்,
"அப்பா, அந்தோனியார் கோவிலுக்குப் போக வேண்டும் என்று சொன்னால்,
Bus stand குக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்?"
அப்படி இருக்கிறது உன் கேள்வி."
(தொடரும்)
லூர்து செல்வம்.
..
No comments:
Post a Comment