(தொடர்ச்சி)
"தாத்தா,
"கானவூர் கல்யாண வீட்டில் ஏசுவாலே கடிந்து கொள்ளப் பட்டவர் தான் இந்த மரியாள்." என்ற கட்டுரையாளரின் விமர்சனத்திற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?"
",இயேசுவின் பொது வாழ்வில் அவர் செய்த முதல் புதுமை கானாவூர் திருமணத்தின்போது தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியது.
அவர் செய்த மற்ற புதுமைகள் ஒன்று அவராகவே செய்தவையாய் இருக்கும், அல்லது நோயாளிகளின்
வேண்டுதலுக்காக செய்தவையாய் இருக்கும்.
ஆனால் கானாவூர் திருமணத்தில் செய்த புதுமை தனது தாயின் வேண்டுதலின் பேரில் செய்தது.
தனது தாய்க்கு தன்னிடம் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை நமக்கு அறிவிப்பதற்காகத்தான் இந்த புதுமையைச் செய்திருக்கிறார்,
திருமணத்தின் போது திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது.
அன்னை மரியாள் இயேசுவை நோக்கி, "இரசம் தீர்ந்துவிட்டது" என்றாள்."
என்ன நோக்கத்தில் மரியாள் தன் மகனைடம் இரசம் தீர்ந்துவிட்டது" என்றாள்?
திருமணத்திற்கு வரும்போது இயேசு திருமண வீட்டாருக்கு கொடுப்பதற்காக ரசம் கொண்டு வந்திருந்தாரா?
நிச்சயமாக அவரிடம் திராட்சை ரசம் இல்லை என்று மரியாளுக்கு தெரியும்.
ஆனாலும் அவர் சர்வ வல்லவ கடவுள் என்று அவளுக்கு தெரியும்.
30 ஆண்டுகளாக அவளுக்குக் கீழ்படிந்து நடந்த அவளது அன்பு மகன் தனது சொல்லை தட்டாமல் ஏதாவது செய்வார் என்று அவளுக்கு தெரியும்.
இயேசு திருமண வீட்டாருக்கு உதவுவார் என்ற நம்பிக்கையில் தான் மரியாள் ரசம் தீர்ந்து விட்டது என்று அவரிடம் சொன்னார்.
கட்டுரையாளர் சொல்வது போல இயேசு எனது தாயை கடிந்து கொண்டாரா?
அவர் தனது தாயை நோக்கி,
"அம்மா! அதை ஏன் என்னிடம் கூறுகிறீர்? எனது நேரம் இன்னும் வரவில்லை" என்றுதான் சொன்னார்.
எந்த வார்த்தையை வைத்து இயேசு தன் தாயை கடிந்து கொண்டார் என்று கட்டுரையாளர் சொல்கிறார்?"
"தாத்தா, நீங்கள் குறிப்பிட்ட அம்மா என்ற சொல்லுக்குப் பதில் அவர்களுடைய பைபிளில் 'ஸ்திரியே' அதாவது 'பெண்ணே' என்றிருக்கிறது.
தாயை யாராவது 'பெண்ணே' என்று அழைப்பார்களா என்று அவர் நினைத்திருப்பார்."
",பெண்ணே' என்பது கடிந்து கொள்வதற்கு உரிய வார்த்தையா?
ஒரு மாம்பழத்தைக் கண்ணால் பார்த்தாலோ, தோலை உரிக்காமல் வாயில் வைத்தாலோ ருசிக்காது.
தோலை உரித்து விட்டு உள்ளே உள்ள சதையை தின்றால்தான் ருசிக்கும்.
இறைவாக்கும் வாசித்தவுடன் புரியாது. உள்ளே சென்று தியானித்தால்தான் புரியும்.
உள்ளே சென்று தியானிப்போமா?
கடவுள் மனிதனை எப்படிப் படைத்தார்?"
"ஆணும், பெண்ணுமாகப் படைத்தார். அவரால் படைக்கப்பட்ட பெண்தான் முதலில் பாவம் செய்தாள்."
",படைப்பை பற்றிய வரலாற்றில் வேறு எங்காவது பெண் என்ற வார்த்தை வருகிறதா?"
"வருகிறது.
உனக்கும், பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்: அவள் உன் தலையை நசுக்குவாள்."
கடவுள் பாம்பை நோக்கி கூறிய வார்த்தைகள்."
",முதலில் சொல்லப்பட்ட பெண் யார் ? இரண்டாவது சொல்லப்பட்ட பெண் யார்?"
'முதலில் சொல்லப்பட்ட பெண் ஏவாள்.
இரண்டாவது சொல்லப்பட்ட பெண் சாத்தானின் தலையை நசுக்கிய மரியாள்."
",உனக்கும், பெண்ணுக்கும்" என்று சொன்னது யார்?"
" இறைவன்."
"பெண்ணின் வித்து யார்?"
"இயேசு."
",இயேசுவின் தாயை பெண் என்றுதான் கடவுளே, அதாவது, இயேசுவே குறிப்பிட்டிருக்கிறார்.
அவளை கடிந்து
கொள்வதற்காகவா?"
"இல்லை. முதலில் கடவுள் மரியாளை பெண் என்று குறிப்பிட்டபோது மரியாள் பிறக்கவே இல்லை.
பிறக்குமுன்பே கடவுள் அவளைப் பற்றி பெருமையாக பேசி இருக்கிறார், அவள் சாத்தானின் தலையை நசுக்குவாள் என்று,
அதாவது சாத்தானால் ஏமாற்றப்பட்ட பெண் செய்த பாவம் இயேசுவைப் பெறப்போகும் பெண்ணை அணுகாது என்று."
",இப்போது சொல்லு இயேசு தனது தாயை பெண்ணே என்று அழைத்தது அவளை கடிந்து கொள்வதற்கா?"
"இல்லை. 'சாத்தானின் தலையை நசுக்கிய எனது அன்னையே' என்ற பொருளில் தான் சொல்லியிருப்பார்."
அவர் சொன்ன வார்த்தையை பிற் காலத்தில் வாசிப்பவர்கள்
அவருடைய அன்னை பாவ மாசற்றவள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்லியிருப்பார்.
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment