Friday, November 11, 2022

நாம் எதற்காக இயேசுவைத் தேட வேண்டும்?(தொடர்ச்சி)

நாம் எதற்காக இயேசுவைத் தேட வேண்டும்?
(தொடர்ச்சி)


நண்பர் ஒருவருக்கு ஒரு சின்ன சந்தேகம்.

''கடவுள் நம்மோடு இருக்கிறார். நம்மைப் பற்றி அவருக்கு எல்லாம் தெரியும்.

நம்மோடு இருப்பவரை பார்க்க ஏன் கோவிலுக்கு செல்ல வேண்டும்?

நான் அவரை விசுவசிக்கிறேன், நம்புகிறேன், நேசிக்கிறேன் என்று அவருக்கு தெரியும்.

இதை ஏன் அவரிடம் சொல்ல வேண்டும்?"

",உங்களுக்கு திருமணம் ஆகி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?"

"10 ஆண்டுகள். காதல் திருமணம்."

", மகிழ்ச்சி. முதல் முதல் காதலை தெரிவித்தது யார்?"

"நான்தான். கடிதம் மூலம் தெரிவித்தேன். பதில் கடிதத்தில் அவளும் தெரிவித்தாள்."

",திருமணத்திற்கு முன் ஒருவரை ஒருவர் காதலித்தது இருவருக்கும் தெரியும். சரியா?"

"ஆமா."

",திருமணம் ஆனபின் எப்போதாவது உங்கள் மனைவியை பார்த்து, 'I love you.'ன்னு சொல்லியிருக்கிறீர்களா?"

"இதென்ன சார் கேள்வி? எல்லா கணவன் மனைவிகள் போலதான் நாங்களும். அடிக்கடி சொல்வோம்."

", எதற்கு சார் ஏற்கனவே தெரிந்ததை திரும்பவும் திரும்பவும் சொல்லவேண்டும்?"

''அது அன்பின் குணம், சார். அன்பு தன்னைத் தெரிந்தவர்களிடம் எல்லாம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும். அதில் ஒரு இன்பம்."

",,கரெக்ட். அது அன்பின் குணம்.

அன்பு மயமான கடவுள் தன் அன்பை வெளிப் படுத்துவதற்காகத்தான் மனித குலத்தையே படைத்தார்.

தனது செயல்கள் மூலம் தனது அன்பை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்.

அன்பின் உச்சக் கட்டமாகத்தான் அவர் நம்மைப் போல் மனிதனானார்.

நம்மை அளவு கடந்து நேசிக்கும் கடவுளை நாமும் நேசிக்க வேண்டும்.

நமது அன்பு உண்மையானால் அதை அவரிடம் சொல்லிக் கொண்டேயிருப்போம்.

ஏன் என்று கேட்க மாட்டோம்.

அதுமட்டுமல்ல, கடவுள் எங்கும் இருக்கிறார் என்று தெரிந்தாலும் 

பொது வழிபாட்டிற்காக யாரும் சொல்லாமலே கோவிலுக்குப் போவோம்.

கோவிலில் இயேசு திவ்ய நற்கருணையில் தனது ஆன்ம, சரீரத்தோடு நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

இதை விசுவசித்தால் எப்போது போக வேண்டும் என்று கேட்கமாட்டோம்.

முடியும் போதெல்லாம் போவோம்.

இயேசுவைப் பார்க்கப் போவது நமது அன்பைத் தெரிவித்து மகிழ்வதற்காகத்தான்.

"Jesus, I love you." என்று சொல்வதில் ஒரு இன்பம் இருக்கிறது, தெரியுமா?

 சொல்லிப் பாருங்கள் தெரியும்.

நமக்கு வேண்டிய உதவிகளைக் கேட்கவும் போகலாம்.

அவரை நாம் உண்மையாகவே நேசித்தால் நமது அன்பை அவரிடம் சொல்லி மகிழ்வதற்காகவே கோவிலுக்குப் போவோம்.

திருமண வீட்டிற்குப் போவதன் முக்கிய நோக்கம் மணமக்களை ஆசீர்வதிக்க.

உணவு இரண்டாம் பட்சம்.

இயேசுவை பார்க்க கோவிலுக்குப் போவதின் முக்கிய நோக்கம் அவரை ஆராதிக்க, அதன் மூலம் நமது அன்பைத் தெரிவிக்க.

புரிகிறதா?"

"அப்போ கோவிலுக்கு போகாதவர்களுக்கு எல்லாம் இயேசுவின் மேல் அன்பு இல்லை என்கிறீர்களா?"

",நான் அப்படி சொல்லவில்லை.

 இயேசுவின் மீது நமக்கு உள்ள அன்பை அவரிடம் தெரிவித்து மகிழ்வதற்காகவே கோவிலுக்குப் போகிறோம் என்று தான் சொன்னேன். 

கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள் எல்லாம் கடவுளுக்காக வாழ்வதில்லை.

ஆனால் கடவுளுக்காக வாழ்பவர்கள் எல்லாம் அவர் இருக்கிறார் என்பதை உறுதியாக நம்புகிறார்கள்."

கடவுள் அன்பு மயமானவர்.

God is Love.

அன்புதான் அவரது வாழ்க்கை.

அவர் என்ன செய்தாலும் அது அன்பின் விளைவுதான்.

கடவுள் நமது வாழ்வில் செயலாற்றுகிறார் என்பதை ஏற்றுக் கொண்டு,

அவர் என்ன செய்தாலும் அது அன்பின் விளைவுதான் என்பதையும் ஏற்றுக்கொண்டால்

நமக்கு என்ன நேர்ந்தாலும் அது இறைவன் செயல் என்பதையும் ஏற்றுக் கொள்வோம்.

கடவுள் நல்லவர், நல்லதை மட்டுமே செய்வார்.

நமக்கு நேர்வதெல்லாம் கடவுளால் நேர்வதால், நேர்வதெல்லாம் நல்லதாகவே இருக்கும்.

நமக்கு என்ன நேர்ந்தாலும் அதற்குக் காரணமான கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நாம் இயேசுவைப் பார்க்கப் போவதே நமது அன்பைத் தெரிவிக்கவும்,

அவருக்கு நன்றி கூறவும்தான்.

என்ன நேர்ந்தாலும் இயேசுவுக்கு நன்றி கூறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment