''தாத்தா, ஆண்டவர் இயேசு,
"கேளுங்கள், கொடுக்கப்படும்." என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால் எதைக் கேளுங்கள், எவ்வளவு கேளுங்கள் என்று சொல்லவில்லை.
ஆகவே எதை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம் அல்லவா?
கேட்டால் கட்டாயம் தருவார் அல்லவா?"
",எதை வேண்டுமானாலும் என்றால்?"
''சொத்து, சுகம், பணம், பதவி, நீண்ட வாழ்வு போன்றவை."
", ஒரு டாக்டர் நோயாளிடம் 'நீ காய்கறி மட்டும்தான் சாப்பிட வேண்டும்' என்று சொல்லிவிட்டு
'வீட்டில் மட்டன் பிரியாணி இருக்கிறது, வந்து எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடு' என்று சொல்லுவாரா?"
"அதெப்படிச் சொல்லுவார்? காய்கறி மட்டும் சாப்பிட வேண்டியவனை எப்படி மட்டன் சாப்பிட சொல்லுவார்?"
",ஆங்கில ஆசிரியர் தனது வகுப்பில் மாணவர்களை பார்த்து, "கணக்கில் என்ன சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள்" என்று சொல்லுவாரா?"
"அதெப்படிச் சொல்லுவார்? 'ஆங்கில பாடத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள், என்று தான் சொல்லுவார்."
",ஏழைகளே நீங்கள் பாக்கியவான்கள்' என்று சொன்ன இயேசு
'ஏழைகளை பார்த்து "எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கேளுங்கள்" என்று சொல்வாரா?"
"அதெப்படிச் சொல்லுவார்?
வேறு எப்படிச் சொல்லுவார்?"
",பேரப்புள்ள, ஆண்டவர் எதற்காக மனிதனாகப் பிறந்தார்?"
"நம்மை இரட்சிக்க.''
", அப்போ எதைக் கேளுங்கள் என்பார்?"
''இரட்சிப்புக்கு தேவையான அருள் வரங்களைக் கேளுங்கள் என்பார்."
",சொத்து, சுகம், பணம் போன்றவை ஆன்மீக இரட்சிப்புக்குத் தேவையா?"
"தேவையில்லை. ஆகவே ஆண்டவர் அவற்றைப் பற்றி கூறியிருக்க மாட்டார்.
ஆனால் மக்கள் அவற்றைத்தானே கேட்கிறார்கள்!"
",அதற்கு நான் என்ன செய்வேன்?
மக்கள் கேட்பது அவர்களது ஆன்மீக வாழ்க்கைக்கு உதவியாக இருந்தால் கடவுள் அவற்றைக் கொடுப்பார்.
உதவியாக இல்லாவிட்டால் கொடுக்க மாட்டார்.
மத். 7.11 ஐ வாசி."
"ஆகவே தீயோராகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிவீர்களானால்,
வானகத்திலுள்ள
உங்கள் தந்தை தம்மிடம் கேட்பவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய் நன்மை செய்வார்!"
",உங்கள் தந்தை தம்மிடம் கேட்பவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய் நன்மை செய்வார்!
நன்கு கவனி "நன்மை செய்வார்."
மக்கள் எதைக் கேட்டாலும் தந்தை நன்மையானதை மட்டும் செய்வார்.
உலகப் பொருட்கள் நமது ஆன்மீக வாழ்க்கைக்கு உதவியாக இருக்குமானால் அவற்றைத் தருவார்.
மத். 6:11 ஐ வாசி. "
"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
( மத். 6:11)
ஆண்டவர் செபம் சொல்ல கற்றுத் தரும்போது
'எங்களுக்கு அன்றன்று வேண்டியதை அன்றன்று தாரும்'
என்று பொருள் பட
"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்" என்று தந்தையிடம் கேட்கச் சொல்கிறார்"
",அதாவது..."
"எதையும் மொத்தமாக கேட்கச் சொல்லவில்லை."
",மத்.6:19-21 ஐ வாசி."
"மண்ணுலகில் செல்வம் சேர்த்துவைக்க வேண்டாம்.
இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்:
திருடரும் கன்னமிட்டுத் திருடுவர்.
ஆனால் விண்ணுலகில் செல்வம் சேர்த்துவையுங்கள்.
அங்கே பூச்சியும் துருவும் அழிப்பதில்லை:
திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.
உங்கள் செல்வம் எங்குள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.(மத்.6:19-21)"
",எவற்றைக் கேட்க சொல்கிறார்?"
"விண்ணுலகச் செல்வங்களை."
",நீ சொன்ன சொத்து, பணம், பட்டம், பதவி எல்லாம் உன்னோடு விண்ணுலகுக்கு வருமா?"
"நிச்சயமாக வராது. நாம் விண்ணுலகம் செல்லும் போது நமது உடலையே மண்ணிற்குள் போட்டு புதைத்து விடுவார்கள்.
உலக முடிவில் நாம் உயிர்த்தெழும்போது சடப் பொருளாகிய உடல் ஆன்மீக
உடலாக (Spiritual body) மாறியே உயிர்க்கும்."
",இப்போ புரிகிறதா?"
"புரிகிறது. ஆன்மீக சம்பந்தமாக அருள் வரங்களையே ஆண்டவர் கேட்கச் சொல்கிறார்.
ஆனால், தாத்தா, நம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்கள்
கையில் பைபிளை வைத்துக்கொண்டு
இயேசுவிடம் வாருங்கள்
" செழிப்பாக வாழலாம், '
கடன் தொல்லைகள் தீரும்,
நோய் நொடிகள் குணமாகும்."
என்று போதிக்கிறார்களே!"
",அது தங்களிடம்
வருபவர்களிடமிருந்து தசம பாகத்தைக் காணிக்கையாகப் பெற்று
தங்களது சொத்து சுகங்களை பெருக்கி,
சொகுசாக வாழ்வதற்காக."
'''ஏன், தாத்தா, நம்மவர்களிடம் பண ஆசை உள்ளவர்கள் இல்லையா?"
", பன்னிருவரில் யூதாஸ் இருந்தானே, 30 வெள்ளிக் காசுக்காக ஆண்டவரைக் காட்டிக் கொடுத்தவன்.
அவன் என்ன ஆனான் என்பது உனக்குத் தெரியுமே.
அவனிடமிருந்து 'பண ஆசை கூடாது,' என்ற பாடத்தைக் கற்றுக் கொள்வோம்.
யூதாசிடமிருந்து மட்டுமல்ல சாத்தாளிடமிருந்தும் ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம்.
என்ன பாடத்தை என்று சொல்லு பார்ப்போம்."
"தற்பெருமை உள்ளவர்கள் விண்ணகத்திற்குள் நுழைய முடியாது."
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment