Monday, April 30, 2018

நம் அன்னையைக் காக்க வேண்டியது நம் கடமை.

நம் அன்னையைக் காக்க வேண்டியது நம் கடமை.
****-*******************--**********

"மாமா பாவ சங்கீர்த்தனம்பற்றி பைபிள் ள இருக்கா கொஞ்சம் காட்டுங்களே."

இது நேற்று எனக்கு வந்த WhatsApp message -அப்படீயே copy எடுத்து போட்டிருக்கிறேன்.

பாவசங்கீத்தன திரு அருட்சாதனம் நம் ஆண்டவர் இயேசுவால்தான் ஏற்படுத்தப்பட்டது என்ற விபரத்தை

28, ஏப்ரல் WhatsApp messageல்

நற்செய்தி ஆதாரத்துடன் குறிப்பிட்டுவிட்டேன். 

இப்போ எனக்கு  விளங்காதது,

நமது பிரிந்து சென்ற சகோதரர்கள் எதற்கெடுத்தாலும்,

"பைபிள்ள இருக்கா"

என்று கேட்பதுதான்.

நமது கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை 'விசுவாசம்'.

நமது விசுவாசப்படி இயேசு கிறிஸ்து ஒருவரே நம் இரட்சகர்.

Jesus alone is our Saviour.

இயேசு  கிறிஸ்து  ஒருவரே.

There is only one Jesus.

அவரால் நிறுவப்பட்டது ஒரு திருச்சபை மட்டுமே. (ஏக திருச்சபை)

Jesus  instituted only
one Church.(not countless ones.)

தாய்த்திருச்சபைக்கு  இயேசுவால் நியமிக்கப்பட்ட தலைவர் ஒருவரே.(இராயப்பர்)

இயேசுவின் கட்டளைப்படி அப்போஸ்தலர்கள் அவரது நற்செய்தியை அறிவித்தார்கள்.

அப்போஸ்தலர்கள் அறிவித்த நற்செய்திதான்

நற்செய்தி நூலாக எழுதப்பட்டது.

இயேசுவால் நிறுவப்பட்ட தாய்த் திருச்சபை முதலில் நற்செய்தியைப் போதித்தாள்,

பிறகு போதித்ததின் ஒரு பகுதியை நூலாக எழுதினாள்.

"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்." (அரு.21:25)

எழுதப்பட்டவையையும், எழுதப்படாதவற்றையும் தாய்த் திருச்சபை போதித்தாள்.

"இதுதான் பைபிள்"  என்று நம்மிடம் பைபிளைத் தந்தவள் தாய்த் திருச்சபைதான்.

பைபிளுக்கு   விளக்கம் தர உரிமை உள்ளவள்

'ஏக,

பரிசுத்த,

அப்போஸ்தலிக்க,

கத்தோலிக்கத்

திருச்சபை மட்டுமே.

விசுவாச சத்தியங்களை

நமது அன்னையாம் கத்தோலிக்க திருச்சபை

சொல்வதால் மட்டுமே ஏற்றுக்கொள்கிறோம்.

பாரம்பரியமும்(Tradition)
பைபிளும்(Bible)

சேர்ந்ததுதான் திருச்சபை.

நமது   தாய் சுட்டிக்காட்டும் ஆளை அப்பா என்று ஏற்றுக்கொள்கிறோம்.

ஏன்?

தாயின்மீதுள்ள நம்பிக்கை.

நாமும் நம் அன்னைத் திருச்சபையை நம்புகிறோம்,

நேசிக்கிறோம்.

நம் அன்னையின் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்காகவே

சில எதிர்ச்க்திகள்

நம்மிடையே புகுந்து வேலை செய்வதை

சமீப கால நிகழ்ச்சிகளிலிருந்து யூகிக்க முடிகிறது.

கூட இருந்துகொண்டே குழி பறித்துக்கொண்டிருக்கும் சக்திகளிடமிருந்து

நம் அன்னையைக் காக்க வேண்டியது நம் கடமை.

லூர்து செல்வம்.




No comments:

Post a Comment