Monday, April 30, 2018

தேய்க்கத் தேய்க்கப் பாத்திரம் பளபளக்கும்.


தேய்க்கத் தேய்க்கப் பாத்திரம்  பளபளக்கும்!
***********************************

" அண்ணே!    ஒரு சந்தேகம்.

சாவான பாவம் செய்தவர்கள் மன்னிப்புப் பெற பாவசங்கீத்தனம் செய்யவேண்டும்.

புரிகிறது.

ஆனால் சாமியார் பிரசங்கத்தில்

"அடிக்கடி,

குறைந்தது மாதம் ஒருமுறையாவது

பாவசங்கீத்தனம் செய்யுங்கள்,''  என்று சொன்னார்

அப்படீன்னா 'மாதம் ஒருமுறையாவது சாவான பாவம் செய்யுங்கள்'னு அர்த்தமா? "

"ஹலோ! நீங்க பண்றது அர்த்தமல்ல, அனர்த்தம்.

'சுகமில்லாவிட்டால் டாக்டரைப் பாருங்கள்' என்று சொன்னால்

'டாக்டரைப் பார்ப்பவர்களெல்லாம் சுகமில்லாதவர்கள்'

என்று அர்த்தமா?

சாவான பாவத்திற்கு மன்னிப்புப் பெற மனஸ்தாபத்தோடு சங்கீர்த்தனமும் அவசியம்.

ஆனால் அற்பப் பாவத்திற்கு  மன்னிப்புப் பெற மனஸ்தாபம்
போதுமானது.

ஆனாலும் அற்பப் பாவத்தையும்,  
சங்கீர்த்தனம் செய்யலாம்.

ஆகவே சாவான பாவ நிலையில் இல்லாவிட்டாலும்  அற்பப் பாவங்களுக்காகவும் பாவசங்கீத்தனம் செய்யலாம்."

"ஒருவனிடம் சாவான பாவமே இல்லை.

அவன் அடிக்கடி பாவசங்கீத்தனம் செய்ய வேண்டுமா?

'செய்யலாமா? ' என்று கேட்கவில்லை.

'வேண்டுமா?' என்றுகேட்கிறேன்."

"நான் ஒன்று கேட்கலாமா?"

"சந்தேகம் தவிர என்ன வேண்டுமானாலும் கேளுங்ககள்."

" வங்கி ஒரு அறிவிப்பு வெளியிடுகிறது:

'இன்று முதல்

வங்கிக்கு

எந்த Account holder

எப்போ வந்தாலும்

பணம் பெற்றுக்கொள்ளலாம்.

கணக்கில் பணம் இருந்தால்

இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்துக்கொள்ளலாம்.

பணமே இல்லாவிட்டாலும்

வரும் ஒவ்வொரு முறையும்

ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொள்லாம்.  

எத்தனை முறை வேண்டுமென்றாலும் வரலாம்.'

இந்த அறிவிப்பிற்குப்பின் வங்கி எப்படி இருக்கும்?"

"வங்கியில் கூட்டம் அலைமோதும்.

கணக்கில் பணம் இல்லாதவர்கட்கும்

ஆயிரம் ரூபாய் கிடைத்தால் விடுவார்களா? "

"அதே போன்று பாவசங்கீத்தனம் செய்யும்போது பாவங்கள் மன்னிக்கப்படுவதோடு,

அந்த அருட்சாதனத்திற்கான மற்ற பலன்களும் கிடைக்கின்றன.

புதிதாக பாவம் செய்யாத  ஒருவன் ஏற்கனவே சங்கீர்த்தனம் செய்த பாவங்கட்காக மனஸ்தாபப்பட்டு சங்கீர்த்தனம் செய்தால்,

அதன் மூலம் திரும்பவும் பாவத்தில் விழாமலிருப்பற்கான அருள் வரத்தைப் பெறுகிறான்.

அவனது ஆன்மா பாவத்திற்கு எதிராகப் பலப்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு முறை சங்கீர்த்தனம் செய்யும்போதும்

'இனி பாவம் செய்வதில்லை' எனப் பிரதிக்கினை எடுக்கும்போது

அதற்கான அருள்வரத்தையும் வேண்டுகிறான்.

அருள்வரமும் அளிக்கப்படுகிறது.

Every confession strengthens our soul against sin and the desire for sin.

அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்தால்

ஆன்மா அதிக அருள்வரம் பெற்று

அதிக பரிசுத்தம் அடையும்.

புரிகிறதா? "

"புரிகிறது.

தேய்க்கத் தேய்க்கப் பாத்திரம்  பளபளக்கும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment