Wednesday, April 25, 2018

எதிர் நீச்சல்.

எதிர் நீச்சல்.
**********************************

மக்கள் இருவகையினர்:

1. ஓடும் தண்ணீரோடு எதிர்ப்பின்றி செல்பவர்கள்.

2.  எதிர்நீச்சல் போட்டு  வெற்றி பெறுபவர்கள்.

முதல் வகையினர்  தங்களைச் சுற்றி தினமும் நடப்பவைபற்றிய காரியங்களின் தன்மை பற்றி கவலைப்படுவதில்லை.

அவை நல்லவையா? கெட்டவையா?

பின்பற்றத் தக்கவையா?  தகாதவையா?

கேள்வி கேட்கப் படத்தக்கவையா?  அப்படியே ஏற்றுக்கொள்ளப்படத் தக்கவையா?

என்றெல்லாம் கவலைப்பட மாட்டார்கள்.

அரசியலில் 'ராமன் ஆண்டாலென்ன,  ராவணன் ஆண்டாலென்ன. நாம்பாட்ல சொன்னதக் கேட்டுக்கொண்டே போவோம்' என்ற கருத்து உடையவர்கள்.

சமூகத்தில் சுற்றி நடப்பவன பற்றி கவலைப் படாமல்,  'காலம் மாறிப்போச்சி, நாமும் மாறிக்கொள்வோம்; ஊரோடு ஒத்து வாழ்; யார் எக்கேடு கெட்டால் உனக்கென்ன, உன் சோலியை மட்டும் பார்' போன்ற கருத்துக்களைக் கொண்டவர்கள்.

இத்தகைய எண்ணங்கொண்ட நம்மவர்கள் திருச்சபையின் அனுசரிப்பு முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் ஏற்றுக் கொள்ளக்கூடிய தன்மை பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

' கோவிலுக்குப் பெண்கள் முக்காடு போட்டு வந்தாலென்ன, போடாமல் வந்தாலென்ன,

நன்மையை நாவினால் வாங்கினாலென்ன, கையில் வாங்கினாலென்ன,

சாமிமார் அங்கி போட்டாலென்ன, Pants, shirt போட்டாலென்ன, 

அவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது, அவர்களுடைய உதவி நமக்குத் தேவை, Appointing and transferring power அவர்களிடம் இருக்கிறது'  என்ற ரீதியில் சிந்திக்கக்கூடியவர்கள்.

இத்தகையவர்கள் எந்த அமைப்பில் என்ன மாற்றம் வந்தாலும்,  வராவிட்டாலும் கவலைப்பட மாட்டார்கள்.

ஒருவன்: அரசியலில் மாற்றம் வரவேண்டும். ஆட்சி மாற வேண்டும்.

முதல் வகை ஆள்: எவன் யோக்கியனாயிருக்கான்?  எவன் ஆண்டாலென்ன, நாம வேல பார்த்தா நமக்குச் சோறு.

ஒருவன்: சமூகம் கெட்டுப் போய்க்கொண்டிருக்கிறது.

முதல் வகை ஆள்: Adjust பண்ணிக்கிட்டு போடா.

ஒருவன்: வரவர பாவசங்கீத்தனங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. கவலையாய் இருக்கு.

முதல் வகை ஆள்: பாவம் செய்வோர் குறைந்திருப்பார்கள். அதுல உனக்கு ஏன் கவலை?

இத்தகையோரால் யாருக்கும் பிரச்சினை இல்லை; பயனும் இல்லை.

இரண்டாம் வகையினர் எதிர்நீச்சல்  போடுபவர்கள்.

எந்த அமைப்பிலும் என்ன மாற்றம் வந்தாலும்,  சிந்தனைக்குப் பின் ஏற்பார்கள், அல்லது நிராகரிப்பார்கள்.

உண்மையான    மாற்றம்  இயற்கையான வளர்ச்சியின் வெளி அடையாளமாய் இருக்கும்.

மாற்றத்திற்காகவே (Change for the sake of change.) செய்யப்படும் மாற்றம் வளர்ச்சியைத் தராது.

உ.ம்

திவ்ய நற்கருணையில் இறைமகன் இயேசு மெய்யாகவே பிரசன்னமாய் இருக்கிறார்.(Jesus is really present in the Holy Eucharist.)

திவ்ய நற்கருணை முன்  முழந்தாள்படியிவது ஆராதனை புரிவதற்கான அடையாளம்.

அதற்குப் பதிலாக நாம் சாதாரண மனிதனுக்குச் செய்துவரும் தலை வணங்குவதைப் புகுத்தியிருப்பது
எப்படி ஆராதனையை அதிகரிப்பதாகும்?

ஆராதனையை வணக்கமாக மாற்றியிருக்கிறோம்.

அதாவது ,  இதை டைப் அடிக்கும்போது விரல்கள் நடுங்குகின்றன, இறைவனும் மனிதனுமானவரை வெறும் மனிதனாக மாற்றியிருக்கிறோம்.

இது heresy in practice.

தாய் தன் குழந்தைக்கு வாயில் உணவூட்டுகிறாள்.

வாயில் உணவு ஊட்டுதல் ஊட்டுபவருக்கும், ஊட்டப்படுபவருக்கும் உள்ள உறவின் நெருக்கத்தைக் காட்டுகிறது.

கையில் எதை வேண்டுமென்றாலும்,  யாருக்கு வேண்டுமென்றாலும் கொடுக்கலாம்.

வாயில் உணவை மட்டுமே ஊட்ட முடியும்.

திவ்ய நற்கருணையைக் குருவானவர் நம் வாயில் ஊட்டும்போது தாய்த்திருச்சபை இறைமகன் இயேசுவை நமது ஆன்மீக உணவாக நமக்கு ஊட்டுகிறாள்.

இது தாய்த் திருச்சபைக்கும்
நமக்கும் இடையே உள்ள உறவின் நெருக்கத்தைக் குறிக்கிறது.

கையால் வாங்கும்போது உறவின் நெருக்கம் குறைகிறது.

பக்தி முயற்சிகளில் மாற்றம் செய்யும்போது பிந்தியதில் முந்தியதை விட பக்தி உணர்வு அதிகரிக்க வேண்டும்.

அம்மாவிடம் போய்  கையை நீட்டும் பிள்ளைக்கும், வாயைத்திறக்கும் பிள்ளைக்கும் இடையே உள்ள உணர்வு வித்தியாசத்தைக் கற்பனை செய்து பாருங்கள், புரியும்.

எதிர் நீச்சல் போடுபவர்கள் மாற்றங்கள் வரும்போது எப்படிச் சிந்திப்பார்கள் என்பதைக் காட்டவே மேற்படி உதாரணங்கள்.

ஆனால் சரியான மாற்றங்கள் வரும்போது,  சிந்தனைக்குப் பின் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.

எதிர்த்துக்கொண்டே இருப்பது இவர்கள் தொழில் அல்ல.

நற்செயல்கள் புரியும்போது எவ்வளவு சங்கடங்கள் வந்தாலும் எதிர் நீச்சல் போட்டு வெற்றியும் காண்பார்கள்.

நமது ஆன்மீக முன்னேற்றத்தில் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் எதிர் நீச்சல் போட்டு வெற்றிபெற இறைவன் அருள்வாராக.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment