Sunday, April 8, 2018

குழப்பத்தில் மாட்டாதபடி கவனமாயிருப்போம்.

குழப்பத்தில் மாட்டாதபடி கவனமாயிருப்போம்.
********************************

"ஹலோ! "

"ஹலோ! லூர்து செல்வம் here.  யார் பேசரது? "

"நான் யார்னு நீயே கண்டுபிடிசச்சிறுவ.

நான் பேசரது மாதிரி கற்பனை பண்ணி WhatsAppல போட்டிய..."

"ஹை!  சாத்தானா? உன் பெயர் எங்க Groupல இல்லிய..."

"அத தெரிஞ்சிக்கிடுறதற்கு group எதுக்கு?

கற்பன பண்றதுதான் பண்ணின,  அத முழுதும் பண்ணித் தொலைக்க வேண்டியதுதான."

"இங்க பார், என்னுடைய presentation வேணும்னா கற்பனையாய் இருக்கலாம். ஆனால் சொன்னதெல்லாம் உண்மை."

"பொய்னு நான் சொன்னேனா?  என்னுடைய மலையளவு சாதனைகளை விட்டு விட்டு, கோலிக்காய் சைஸ் சாதனைகளை மட்டும் தொட்டுட்டு மட்டும் போயிருக்கியே, நான் எப்படிப்பட்டவன்?

இயேசு கடவுள்னு தெரிஞ்சிருந்தும் அவரையே சோதிச்சவன்!

அவரது அப்போஸ்தலர்கள்ல ஒருத்தனையே என்பக்கம் இழுத்தவன்! 

இங்க பார், எனது பெரிய சாதனைகளை நீ சொல்லாம விட்டது எனக்கே கேவலமாயிருக்கு."

"சரி, நான்தான் மறந்திட்டேன். நீயே சொல்லு."

"இயேசுவின் தாய் மரியாள். அவளுடைய மிகப் பெரிய புகழ் எது? ''

"இயேசுவின் தாய்ங்கிறதுதான்"

"அதுக்குஇணையானது? "

"அவள் ஜென்மப்   பாவமாசின்றி
உற்பவித்ததும், 

பாவத்தின் நிழலே படாமல் வாழ்ந்ததும்."

"அதற்கு பைபிள்ல ஆதாரம் இருக்கா? "

"இருக்கு.

ஆதியாகமத்ல 'அவள் உன் தலையை நசுக்குவாள்'ன்னு கடவுளே உனக்கிட்ட சாபம்."

"அந்த ஆதாரம் இப்ப பைபபிள்ல இருக்கா? "

"நீ எங்க வாரன்னு புரியுது.
புனித ஜெரோம் மொழி  பெயர்த்த Vulgate version ஐப் பாரு.

(Vulgate is  the principal Latin version of the Bible, prepared mainly by St Jerome in the late 4th century, and (as revised in 1592) adopted as the official text for the Roman Catholic Church.)"

"அது உனக்கு முன்னாலே எனக்கும் தெரியும்.

புது மொழி பெயர்ப்ல இருக்கா? "

"இல்ல.

'அவள் வித்து உன் தலையைக்
காயப்படுத்தும்.'னு இருக்கு."

"நைசா அம்மாவ எடுத்திட்டு மகன போட வச்சது யாரு?

'நசுக்குவாள்' க்குப் பதில் 'காயப்படுத்தும்'னு போடவச்சது யாரு?

நசுக்கப்பட்ட பாம்பு கடியாது,

ஆனா, காயப்படுத்தப்பட்ட பாம்பு பழி வாங்கும்.

ஆக புதிய மொழிபெயர்ப்புப்படி நான் நசுக்கப்படல.

காயத்தோட உலவிக்கிட்டிருக்கேன்.

ஆக ஒரு ஆதாரம் out!

அடுத்த ஆதாரம்? "

"ஆதாரம் ஒண்ணும் அவுட் ஆகல.

உன்னுடைய சித்து வேலைகளெல்லாம் எங்களுக்குத் தெரியும்."

"சரி. அடுத்த ஆதாரம்? "

" புதிய ஏற்பாட்ல.

'அருள் நிறைந்தவளே வாழ்க , 

என்று கபிரியேல் தூதர் மரியாளை வாழ்த்திய வார்த்தைகள்.

ஒரு பாத்திரத்தில் ஒரு பொருள் 'நிறைந்திருதால்'

அதில் இன்னொரு பொருள் இருக்க முடியாது.

மரியாள் அருளால் நிறைந்திருக்கும்போது

அவளிடம் அருளுக்கு எதிரான பாவம் கொஞ்சங்கூட இருக்க
முடியாது.

இயேசுவின் தாய் ஜென்மப் பாவ மாசின்றி உற்பவித்தாள்,

பாவமாசுமரு இன்றி வாழ்ந்தாள் என்பதற்கு கபிரியேல் வாழ்த்துரை ஒரு ஆதாரம்."

"இது பழைய கதை. இப்ப அந்த ஆதாரம் என்னாச்சி?

புதிய மொழிபெயர்ப்புப்படி "அருள்மிகப் பெற்றவரே வாழ்க!" என்று கபிரியேல் தூதர் வாழ்த்துகிறார்.

'நிறைந்த'  'மிக'வாக மாறிவிட்டது.

ஒரு பாத்திரத்தில் ஒரு பொருள் மிகுதியாக இருக்கிறது என்றால் நிறைவாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

90% பகுதி இருந்தாலே 'மிக' உள்ளதாகத்தான் அருத்தம்.
மீதி 10% பகுதியில் வேறு பொருள் இருக்க வாய்ப்பு இருக்கலாம்.

'அருள் மிகப்பெற்றவள்'என்றால்

அருள் 'முழுவதும்' இருக்கத்  தேவை  இல்லை.

அதாவது 'ஜென்மப்பாவமின்றி உற்பவித்தாள்' என்பதற்கான புதிய ஏற்பாட்டின் ஆதாரம் அவுட்!

எப்படி என் சாதனை! "

"ரொம்ப மனப்பால் குடிக்காதே.

நீ என்ன தகடுதத்தம் பண்ணினாலும் எங்கள் விசுவாசம் மாறாது.

புதிய மொழிபெயர்ப்பாளர்கள் மூல நூலிலிருந்து மொழிபெயர்த்ததாகக் கூறுகிறார்கள்.

ஆயினும் வல்கேட் திருச்சபையின் அதிகாரப்பூர்வமான மொழிபெயர்ப்புதான்."

''பைபிள் வாசிப்பவர்கள் குழம்புவார்களே.

உங்களிடமிருந்து பிரிந்தவர்கள் ஆதாரம் கேட்டால் என்ன சொல்லுவ? "

"உன் வண்டவாளத்த எடுத்து தண்டவாளத்தில விடுவேன்."

"அத பிறகு விடு.

இப்ப கேட்கதுக்குப் பதில் சொல்லு.

ஆன்மா ,  வாழ்வு, இரண்டில் எது அதிக முக்கியம்?"

"உன் கேள்வியின் நோக்கம்  புரிகிறது.

"ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன? ஒருவன் தன் ஆன்மாவிற்கு ஈடாக எதைக் கொடுப்பான்?"

இது பழைய மொழிபெயர்ப்பு.

மிகத் தெளிவாக இருக்கிறது.

"மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?"

இது புதிய மொழிபெயர்ப்பு.

தெளிவாக இல்லை.

'வாழ்வு' என்ற வார்த்தை மறு உலக வாழ்வையும் குறிக்கலாம்,

இவ்வுலக வாழ்வையும் குறிக்கலாம்.

மறு உலக வாழ்வை நினைத்து வாசித்தால் சரி.

இவ்வுலக வாழ்வை நினைத்து வாசித்தால் தவறு.

நிலை வாழ்வு என்றாவது போட்டிருக்கலாம்."

"இக்குழப்பத்தை ஏற்படுத்தியதே நான்தான், தெரியுமா?"

"குழப்பம் என்றாலே சாத்தான்னு உலகுக்கே தெரியுமே!"

"ஹலோ!  என்னது? அவசர வேலையா?..... நரகத்திலா? ..இதோ வருகிறேன்.

நாளை வந்து குழப்புகிறேன். Bye bye! "

சாத்தானின் குழப்பத்தில் மாட்டாதபடி கவனமாயிருப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment