Saturday, April 14, 2018

பேரின்பக் கனவு.

பேரின்பக் கனவு.
********************************

ஜோ,

நமது பேரின்பக் கனவின் கதாநாயகன்.

யாரோ சொன்னதற்காக இவன் கனவு காணவில்லை.

சுயமாக, 

ஆனால் பொது நலங் கருதி ஒரு கனவு  கண்டான்,

பகற்கனவு அல்ல,  இரவுக்கனவும் அல்ல,

நனவாகத் துடிக்கும் வாழ்க்கைக் கனவு.

தான் M.B.B.S படிக்க வேண்டும்,

டாக்டராக வேண்டும்,

தன் வீட்டுக்கும்

ஊருக்கும் மட்டுமல்ல,

உலகிற்கே சேவை செய்யவேண்டும்

என்று மனதார ஆசைப்பட்டான்.

"நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்."
(மத்.25:36)
என்ற இறைமகன் இயேசுவின் புனித வார்த்தைகளே இக் கனவின் காரணம்.

அதற்காக இடைவிடா ஜெபத்துடன், சுய முயற்சியும் எடுத்தான்.

+2 வில் அறிவியல் பாடத்தை முக்கிய பாடமாக எடுத்ததுமன்றி

அதை முயன்று படித்தான்.

அரசுப் பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று,

மதிப்பெண் அடிப்படையில்,

குறுக்குவழியில் அல்ல,

கல்லூரியில் இடம் பெற வேண்டும் என்பதே அவனது தீர்மானம்.

தேர்வும் வந்தது. 

நல் முறையில் தேர்வு எழுதினான்.

Physics ல் முழுமதிப்பெண் கிடைக்கும்.

Chemistry யில் முழுமதிப்பெண் கிடைக்கும்.

அடுத்து நடைபெறயிருக்கும் Biology தேர்வையும் முழு மதிப்பெண் பெறும் வகையில் எழுத வேண்டும்.

அதற்கான முழு முயற்சியும் எடுத்து படித்தான்.

தேர்வு நாளும்  வந்தது.

காலையில் எழுந்து,

முமு மதிப்பெண் கிடைக்கும் வகையில்

தேர்வு எழுத வரம் தர வேண்டும் என இறைவனிடம் வேண்டினான்.

காலை உணவு அருந்திவிட்டு,  பெற்றோரிடமும் ஆசீர் பெற்றுக்கொண்டு இறுதித் தேர்வு எழுத சைக்கிளில் புறப்பட்டான். 

Main road வழியேதான் செல்ல வேண்டும்.

சைக்கிளை விரைவாக மிதித்தான்.

இன்னும் கால் மணி நேர மிதிதான் பாக்கி.

மணி 9.45.

10 மணிக்குத் தேர்வு.

எதிர்பாராத காட்சி ஒன்று சைக்கிளை நிறுத்தியது.

சாலையின் ஓரமாக வயதான ஒருவர் மயங்கிக் கிடந்தார்.

ஜோவின் உள்ளத்தில்,

"நான் மயக்கமாய் இருந்ததேன்,

நீ என்னை எழுப்பிவிட்டாய்,"

இயேசு  கூறுவதுபோலிருந்தது.

சைக்கிளை விட்டு இறங்கி, 

பெரியவரின் முகத்தை உற்று நோக்கினான்.

உலகின் பார்வையில், அது அறிமுகமில்லா முகம்.

விசுவாசப் பார்வையில் அது இயேசுவின் முகம்.

"மகனே, மயக்கமாய் இருக்கிறேன்,

எழுப்பிவிட மாட்டாயா?"

உள்ளத்தின் ஆழத்திலிருந்து இயேசுவின் குரல் ஒலித்தது.

கைக்கடிகாரம் கூறியது,

"தேர்வுக்கு இன்னும் பத்து நிமிடங்கள்தான்."

தேர்வா?  இயேசுவா?

அவன் உள்ளத்தில் போராட்டம்  எதுவும் ஏற்படவில்லை.

'எல்லாம் இயேசுவுக்காக' என்பதுதான் அவன் வாழ்வின் குறிக்கோள். (Motto)

சைக்கிளை ஒரு ஓரமாக நிறுத்தினான்.

ஏதாவது வாகனம் வருகிறதா என்று பார்த்தான்.

Auto ஒன்று  Free யாக வந்தது.

Auto வை நிறுத்தினான்.

பெரியவரை மெதுவாக வண்டியில் ஏற்றினான்.

மருத்துவ மனைக்குப் பறந்தான்.

பெரியவர் கண் விழிக்கும் வரை அவர் கண்களையே  பார்த்துக்கொண்டிருந்தான்.

கண்விழித்தவுடன்,

"தாத்தா,  எப்படி இருக்கீங்க? "

தாத்தா புன்முறுவல் பூத்தார்.

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு
வீட்டிற்குச் சென்றான்

அப்பா கேட்டார், 

"தேர்வு எப்படி எழுதியிருக்க"

"நல்லா எழுதியிருக்கேன்பா."

நடந்ததை  விளக்கினான்.

"Very good.

    தேர்வு வரும், போகும்.

இயேசு வரும்போது பற்றிக்கொள்ள வேண்டும்.

நீ கண்ட பேரின்பக் கனவு இன்று நிறைவேறியது."

"இயேசுவே உமக்கு நன்றி."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment