Wednesday, April 4, 2018

இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமப்போம்.

இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமப்போம்.
******************************

புதுத்துணி tailor ஐப் பார்த்து:

"நான் மிக உயர்ந்த Shirting cloth.

அதிக விலை கொடுத்து

என் முதலாளி என்னை  வாங்கியிருக்கார் -

தனக்கு நல்ல டிசைன்ல சட்டை தைக்கதுக்காக.

நல்ல சட்டையா தை.

ஆனா என் மேல கத்தரிக்கோல் படக்கூடாது.

என்னக் கிழிக்கக்கூடாது.

ஊசி என்னத் தொட்றக்கூடாது.

புரியுதா "

என்றதாம்.

நிலம் உழவனைப் பார்த்து:

"நான் பெரிய ஜமீன்தாருக்குச் சொந்தமானவன்.

என்மேல நெல் விளைய வைக்கணும்.

ஆனா,

என் மேல

கலப்பையோ,

மண்வெட்டியோ,

களைகொத்தியோ

பட்றக்கூடாது.

என்மேல ஒரு கீரல்கூட விழக்
கூடாது.

புரியுதா? "

என்றதாம்

தங்கம் ஆசாரியைப் பார்த்து :

"எனக்கு மதிப்பு அதிகம்.

     ரொம்ப விலை கொடுத்து என்ன வாங்கியிருக்காங்க.

புது டிசைன்ல நகை செய்யணும்.

ஆனா என்மேல நெருப்போ, சுத்தியலோ பட்றக்கூடாது.

பட்டா வலிக்கும்.

புரியுதா? "

என்றதாம்.

காய்கறிகள் சமையல்காரனைப் பார்த்து:

"எங்க விலை ஏறி தங்க விலைக்கு வந்தாச்சி.

புதுப்பொண்ணு, புதுமாப்பிள்ளைக்கு விருந்து வைக்கதுக்காக,

அதிக விலை கொடுத்து வாங்கியிருக்காங்க.

கூட்டு செய்யுங்க அல்லது சாம்பார் வையுங்க.

ஆனா எங்கமேல கத்தி பட்றக்கூடாது.

நெருப்பு மேல வச்றக்கூடாது.

புரியுதா?"

என்றனவாம்.

இவை சொல்றதை எல்லாம் நமக்குச் சிரிப்பு வருதுல்ல?

துணியை வெட்டாமல் எப்படி சட்டை தைக்கிறது?

நிலத்தை உழவு செய்யாமல் எப்படி பயிர் செய்கிறது?

தங்கத்தை உருக்காமல்  எப்படி நகை செய்றது?

காய்கறிகளை வெட்டாமல் எப்படி சாம்பார் வைக்றது?

என்றெல்லாம் கேட்கத்தோன்றுகிறதல்ல?

ஆனால், ஒன்றை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

சில சமயங்கள்ல நாம் வேண்டுவதைப் பார்த்து நம் ஆண்டவருக்கும் சிரிப்பு வரும்.

"ஆண்டவரே, என்னை நோய்நொடிகளிலிருந்து காப்பாற்றும்,

கஷ்டங்களிலிருந்து என்னை விடுவியும்,

துன்பமில்லாத வாழ்வைத் தாரும்"

என்றெல்லாம் வேண்டும்போது இயேசுவுக்கு நம்மைப் பார்த்து சிரிப்பு வரும்.

"தம்பி, 'நான் கிறிஸ்தவன், அதாவது,  கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவன்' என்று பெருமையாய்ச் சசொல்லிக்கொள்கிறாயே,

எதில் என்னைப் பின்பற்றுகிறாய்?

சர்வ வல்லப கடவுளாகிய நான்,  சக்தியற்ற மனிதப் பிறவி எடுத்தேன்,  உனக்காக,

உலகிலுள்ள எல்லா பொருட்களுக்கும் உரிமையாளனாகிய நான் ஒன்றுமே இல்லாதவனைப் போல மாட்டுக்குடிலில் பிறந்தேன்,  உனக்காக.

ஒரே வார்த்தையில் உலகைப் படைத்த நான், 30ஆண்டுகள் தச்சுத் தொழில் செய்து கிடைத்த வருவாயில் வாழ்ந்தேன்,  உனக்காக.

அன்பைப் பற்றி போதித்த நான்,  நான் பிறந்த குல மக்களாலேயே வெறுக்கப்பட்டேன், உனக்காக.

வாழ் நாளெல்லாம் கஷ்டப்பட்டது போதாதென்று பாடுகள் பல பட்டு சிலுவையில் அறையப்பட்டு உயிரைப் பலியாக்கினேன்,  உனக்காக.

நீ என்னைப் பின் பற்றுபவன் என்று கூறிக்கொண்டு,  என் பாடுகளைப் பின்பற்ற மறுக்கிறாய்.

தன் சிலுவையை எனக்காகச் சுமப்பவன்தான் என் சீடன்.

அன்பு செய்,  எனக்காக.

துன்பத்தைத் தாங்கிக் கொள்,  எனக்காக.   

மோட்சத்தில் பேரின்பம் காத்திருக்கிறது,  உனக்காக"

இயேசுவுக்காக சிலுவையைச் சுமப்போம்.

பெரிய வெள்ளிக்குப் பிறகு உயிர்த்த ஞாயிறு கட்டாயம் வரும்.

இவ்வுலக கஷ்டங்களுக்குப் பின்,

மோட்ச பேரின்பம் கட்டாயம் வரும்.

லூர்து செல்வம்.




No comments:

Post a Comment