Sunday, April 1, 2018

ஒரு கற்பனை உரையாடல்.

ஒரு கற்பனை உரையாடல்.
********************************

இந்த உரையாடலை ஏற்றுக்கொள்வதும்,  ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

"ஹலொ! நான் யாருன்னு தெரியுதா? "

"மோட்ச வாசலுல நிக்கிறீங்க.  கையில சாவிக்கொத்து வச்சிருக்கீங்க. ராயப்பராகத்தான் இருக்கணும்."

"தெரியுதுல்ல.

தெரியாதது மாதிரி நடந்துபோரீங்க

என் அனுமதியோடதான் உள்ள போகமுடியும்.

நீங்க உள்ள போங்கம்மா.

உன்னுடைய வீட்டுக்காரர் கொஞ்ச நாள் கழிச்சிதான் வருவாரு."

"ஐயோ!  ராயப்பரே, நாங்க ஒண்ணா கல்யாணம் முடிச்சி,

ஒண்ணா வாழ்ந்து,

ஒண்ணா செத்து,

ஒண்ணா வந்திருக்கோம்.

எங்கள பிரிச்சிராதீங்க."

"உங்க திருமண நாள்ல,

'நாங்க
இன்பத்திலும் , துன்பத்திலும்

சுகத்திலும் துக்கத்திலும் ஒண்ணாயிருப்போம்னு

வாக்குக் கொடுத்தீங்கல்ல."

"ஆமா, அதனாலதான் மோட்ச இன்பத்துக்கு ஒண்ணா வந்திருக்கோம்."

"இன்பத்துலமட்டுந்தான் மனைவியோடு இருந்தீங்க. கஷ்ட நேரத்துல நீங்க மனைவிக்கு ஆறுதலா இருக்கல.

குறைந்தது சமயலுலயாவது மனைவிக்கு உதவி செய்தீங்களா?

சாப்பாட்டுக்கு முதல் ஆளா
ஆஜர்!

அதுக்கெல்லாம்  உத்தரியாம உள்ளே போகமுடியாது.

உத்தரிக்கிறஸ்தலத்துக்குப்  போங்க."

"ஐயோ! ராயப்பரே,

சமையல் செய்யயாததுக்கெல்லாம் உத்தரிக்கிஸ்தலமா?

'சமையல் செய்வாயாக' என்று கட்டளை எதுவுமில்லையே? "

"அப்படி  ஒரு கட்டளை இல்லை.

ஆனால், மனைவியின் கஷ்டத்தில் உதவியாயிருப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கீங்கில்ல? 

இது ஒரு உதாரணம்தான்.

நீங்க எந்தக் கஷ்த்திலும் மனைவிக்கு உதவவில்லை.

அதனால உத்தரிச்சிதான் ஆணும்.

போங்க."

அடுத்து சார் இங்க வாங்க."

"நான் என்ன செய்தேன்? 

காலை,  மாலை செபம் ஒழுங்கா சொன்னேன்"

"சொன்னீங்க, ஆனா ஒழுங்கா சொல்லலிய.

உங்க வாய்செபம் செபம் கொண்டிருந்தது,

ஆனால், உங்க மனசு?"

"உண்மைதான். எங்கேயோ சுற்றிக்கொண்டிருந்தது."

"அதற்குக் காரணம்

நீளமாக செபம் செய்தால்,

நிறைய வார்த்தைகளைப் பயன்படுத்தினால்,

சப்தமாகச் சொன்னால்

அதிகமாகப் பலன் கிடைக்கும் என்று நீங்கள் நினைத்ததுதான்.

சின்ன மனவல்லப செபங்களை மனதினால் மட்டும் நினைத்தால் நினைவு வேறெங்கும் போயிருக்காது.

கடவுளுக்கு மொழி அழகு தேவையில்லை.

உள்ளத்தில் அவரது அன்பை நினைத்துப் பாருங்கள்.

அதுக்குப் பெயர்தான் தியானம்.

அது போதும்."

"அப்போ சப்தமா,  நீளமாச் சொன்னா பாவமா? "

"இல்லவே இல்லை.

நீண்ட செபத்தில மனச ஒருநிலைப் படுத்தறது கடினம்னு சொன்னேன்."


"இத நான் உயீரோடு இருக்கும்போதே எங்கிட்ட சொல்லியிருக்கணும்.

பூசைக்குப் போனால் சாமியாரு பிரசங்கத்த முக்கால் மணி நேரம் நீட்டிருதாரு.

கால்வாசிப் பிரசங்கத்திலே தூக்கம் வந்து விடுகிறது

நான் என்ன செய்வேன்?

நீங்க திருச்சபைத் தலைவர்தானே.

பத்து நிமிடம் ,

கூடப்போனால் கால்மணி நேரம்,

அதற்கு மேல பிரசங்கம் போகக்கூடாதுன்னு

உத்தரவு போடவேண்டியதுதானே."

"இப்பெல்லாம் தலைவர் சொல்றத யாருய்யா கேட்கிறா.

உங்ககிட்ட பேசிக்கிட்டே இருந்தா என் வேல கெட்டிடும்.

போங்க. உத்தரிக்கிரஸ்தலத்துக்குப் போங்க.

அடுத்தது யாரு? "

"Good morning,  St. Peter."

"இங்க morning ங்கும், evening. ங்கும் கிடையாது. எப்பவும் ஒரே நேரம்தான்.

"நீங்க ஒரு ஆசிரியர்."

"ஆமா. நீங்க ராயப்பர்.உங்க
கையிலதான் மோட்சத்திற்கான சாவி இருக்குன்னு சொன்னாங்க.

நான் உள்ளே போகலாமா?"

"நீங்க ஆசிரியர்தான. தப்பும் தவறுமா கட்டுரை எழுதிய மாணவன என்ன பண்ணுவீங்க? "

"சரியா படிச்சி எழுதறவரைக்கும் மழங்கால்ல வைப்பேன் அல்லது பெஞ்ச் மேல ஏத்துவேன்."

"நானும் உங்கள அதத்தான் செய்யப்போறேன்."

"ஐயோ,  ராயப்பரே, நீங்க எப்போ கட்டுரை எழுதச் சொன்னீங்க? "

நீங்க முப்பது வருசம் வேல பார்த்திருக்கீங்க."

"ஆமா. சரியாத்தான் கணக்கு வச்சிருக்குங்க."

"உங்க முப்பது வருட ஆசிரியப் பணியில

எத்தனை

நல்ல,

ஒழுக்கமான

மாணவர்கள

உருவாக்கியிருக்கீங்க?"

"ராயப்பரே,  பாடத்திட்டத்த முடிக்கிறதும்,

நல்ல மதிப்பெண் வாங்க. வைக்கிறது மட்டுமே என் வேலை."

"ஆசு இரியர்னு சொன்னால் குற்றங்களைக் களைபவர்னு அர்த்தம்.

ஒவ்வொரு ஆசிரியரும் ஆண்டுக்கு ஆண்டுக்கு ஒரு நல்ல மாணவனை உருவாக்கியிருந்தால்கூட நாட்டில் ஏராளமாமான நல்ல குடிமக்கள் இருப்பர்."

"அதற்கு முதலில் நல்லாசிரியர்களை உருவாக்கியிருக்க வேண்டூம்.

பல இலட்சங்கள் லஞ்சம் கொடுத்து வேலைக்கு வருபவர் எப்படி இருப்பார்?

நானே பத்து லட்சம் கொடுத்துதான்

அரசுப் பள்ளிக்கு வேலைக்கு வந்தேன்"

"புனிதமான பணியை லஞ்சம் கொடுத்துக்
கேவலப்படுத்தியிருக்கீங்க.

நல்ல,  ஒழுக்கமான மாணவர்களையும் உருவாக்கல.

உங்கள எப்படி உள்ளே விடறது? "

"நாங்க எங்களுக்குச் சம்பளம் கொடுத்தவங்க சொன்னதத்தான் செய்தோம்."

"பாடம் சொல்லிக் கொடுத்தீங்க.

நல்லொழுக்கம்  கற்பிக்கல."

"நல்லொழுக்க பாடமும் சொல்லிக்கொடுத்தோமே. ஆனா பாஸ் பண்றதுக்கு அதுக்கான மார்க் தேவையில்லை."

"நீங்க மார்க்கிலேயே நிற்கரீங்க.

நான் நல்ல வாழ்க்கையச் சொன்னேன்.

நீங்க ஆசிரியப்பணி செய்யல. மார்க் பணிதான் செஞ்சிருக்கீங்க.

உத்தரிக்கிறஸ்தலத்துக்குப் போங்க."

ஒரு பங்கு சாமியார் வருகிறார்.

"வணக்கம், Father."

"வணக்கம்,  ராயப்பரே "

(உரையாடல் தொடரும்.)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment