Tuesday, April 17, 2018

என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்.  (1தெசெ.5:18)

என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள். 
(1தெசெ.5:18)
*******************************

பரிசுத்த கத்தோலிக்க வேதாகமம்

பல்வேறு ஆசிரியர்கள் எழுதிய நூல்களின் தொகுப்பு என்றாலும்

அதன் ஆசிரியர் பரிசுத்த ஆவியானவர்தான்.

ஏனெனில் அதன் செய்திகள் (Messages) யாவும் அவரின் ஏவுதலால் எழுதப்பட்டவை.

புனித சின்னப்பருடைய மடல் வாயிலாக பரிசுத்த ஆவியானவர் நமக்குச் சொல்கிறார்,

"என்ன நேர்ந்தாலும் நன்றிகூறுங்கள்."
(1தெசெ.5:18)

வழக்கமாக யாராவது நமக்கு நல்லது செய்திருந்தால்,

"நன்றி" என்று கூறுவோம்.

நம்மிடமிருந்து வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் ஏமாற்றினால்

நன்றி கூறமாட்டோம்.

ஆனால் பரிசுத்த ஆவியானவர் கூறுகிறார் , 

"என்ன நேர்ந்தாலும் நன்றிகூறுங்கள்."

நமது சிந்தனைப்படி

நல்லது நடந்தால் நன்றிகூறுவோம்.

என்ன நேர்ந்தாலும் எப்படி நன்றி கூறுவது?

Answer is very simple.

நம் வாழ்வில் என்ன நேர்ந்தாலும் நல்லதாய்த்தான் இருக்கும். 

அதாவது, வாழ்வில் நல்லதுமட்டும்தான் நடக்கும்.

நாம் செய்வதில் நல்லதும் இருக்கலாம், அல்லதும் இருக்கலாம்.

பாவம் செய்தால் கெட்டது,

புண்ணியம் செய்தால் நல்லது.

நாம் செய்வதற்கு நாமே பொறுப்பு.i

நமக்கு நேர்வதற்கு நாம் பொறுப்பல்ல.

நமக்கு என்ன நேர்ந்தாலும் இறைவன் திட்டப்படி, சித்தப்படிதான் நடக்கும்.

இறைவன் திட்டப்படி, சித்தப்படி நமக்கு நேரும் எதுவும் நமக்கு நன்மைதான் புரியும்.

நமக்கு நன்மை புரிவதற்காகவே இறைவனால் அனுமதிக்கப்பட்டிருக்கும்.

ஆகவே என்ன நேர்ந்தாலும் நாம் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.

"எல்லாம் அவன் செயல்."

"எல்லாம் நன்மைக்கே."

"அவனன்றி அணுவும் அசையாது."

போன்ற சொற்றொடர்கள் எது நேர்ந்தாலும் நன்றி கூற வேண்டும்

என்ற வாக்கியத்துக்கு வலு சேர்க்கின்றன.

விபசாயி ஏன் தன் உழைப்பின் கஷ்டங்களை மனமாற ஏற்றுக்கொள்கிறான்?

கிடைக்க இருக்கும் மகசூலை எண்ணித்தானே.

பெண் ஏன் பேறுகால வேதனையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறாள்?

பிறக்கயிருக்கும் குழந்தையை எண்ணித்தானே.

அதுபோலவே நாமும் என்ன நேர்ந்தாலும் நன்றியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்,

அவை நமக்குத் தரயிருக்கும் நித்திய பேரின்பத்தை எண்ணி.

ஆம், என்ன நேர்ந்தாலும் நன்றி கூறினால் அதன் பலன் நித்திய வாழ்வில் தெரியும்.

கல்லூரியில் ஆசைப்பட்ட Group கிடைக்கவில்லையா?

நம் நன்மைக்காகத்தான்.

இறைவா, உமக்கு நன்றி.

Interview வில் தோல்வியா?

நம் நன்மைக்காகத்தான்.

இறைவா, உமக்கு நன்றி.

Home loan கிடைக்கவில்லையா?

நம் நன்மைக்காகத்தான்.

இறைவா, உமக்கு நன்றி.

தீராத வியாதியா?

நம் நன்மைக்காகத்தான்.

இறைவா, உமக்கு நன்றி.

வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டமா?

நம் நன்மைக்காகத்தான்.

இறைவா, உமக்கு நன்றி.

Accident ல் கால் போய்விட்டதா?

நம் நன்மைக்காகத்தான்.

இறைவா, உமக்கு நன்றி.

மருத்துவம் பயனளிக்காமல் மரணம் நெருங்கிவிட்டதா?

நம் நன்மைக்காகத்தான்.

இறைவா, உமக்கு நன்றி.

இருந்தாலும், இறந்தாலும் நாம் இறைவன் கையில்தான்.

ஆகவே இருக்கும்போது உள்ள நன்றியுணர்வு

இறக்கும்போதும் இருக்கவ்ண்டும்.

பரிசுத்த ஆவியின் அடுத்த அறிவுரை:

"எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள்."

"என்ன நேர்ந்தாலும் அது இறைவன் செயல்."

என்பதை  ஏற்றுக்கொண்டால்,

நாம் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்போம்.

நம் கடவுள் மகிழ்ச்சியின் கடவுள்.

இயேசு பாடுகள் பட்டுத் தன்னையே பலியாக்கிக் கொண்டதே

நம் நித்திய மகிழ்ச்சிக்காகத்தான்.

ஆகவே என்ன நேர்ந்தாலும் மகிழ்ச்சியாய் இருப்போம்.

நாம் எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க

என்ன செய்ய வேண்டும்?

அதற்கும் ஆவியானவரே வழி காட்டுகிறார்.

" இடைவிடாது செபியுங்கள்."

இடைவிடாது செபித்துக் கொண்டிருந்தால்

நமது மற்ற வேலைகளை எப்போ செய்வது?

நாம் செபம் என்றவுடன் வார்த்தைகளினால் ஆன செபத்தை நினைக்கிறோம்.

உண்மையில் வார்த்தைகட்கும் இறைவனுக்கும் நேரடித் தொடர்பு இல்லை.

வீட்டில் ஸ்விட்சைப் போட்டால் லைட் எரிகிறது.

உண்மையில் ஸ்விட்சிக்கும் லைட்டிற்கும் நேரடித் தொடர்பு இல்லை.

மின்சாரத் தொடர்பு இல்லாவிட்டால் ஸ்விட்சை எப்படிப் போட்டாலும் லைட் எரியாது.

இறைவனுக்கும் நமக்கும் இடையில் நேரடித் தொடர்பு கொண்டது நமது உள்ளம்.

உள்ளம் இறைவனோடு தொடர்பு கொண்டிராவிட்டால்,

வார்த்தைகளால் பயனில்லை.

உண்மையில் நமது உள்ளம் இறைவனோடு ஒன்றித்து இருப்பதே செபம்.

நாம் இறைனின் சந்நிதானத்தில் வாழ்ந்தால்தான் இந்த ஒன்றிப்பு ஏற்பட முடியும்.

சுருக்கமாக இறைவனின் சந்நிதானத்தில் வாழ்வதே செபம்.

அதாவது

இறைவன் எப்போதும் நம்மோடு இருக்கிறார் என்ற உணர்வோடு,

தூக்கம் உட்பட,

எல்லா வேலைகளையும்

செய்வதுதான் செபம்.

1. எப்போதும் இறைவனின் சந்நிதானத்தில் வாழ்வோம்.

2. எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்போம்.

3. என்ன நேர்ந்தாலும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

விண்ணக இன்பம் நமக்காகக் காத்துத்கொண்டிருக்கிறது.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment