Thursday, April 19, 2018

மோட்ச வழியில் நடப்போம்.

மோட்ச வழியில் நடப்போம்.
**********************************

நண்பர் ஒருவர் சென்னையில் இரயிலில் ஏறினார்.

முதல் வகுப்புப் பெட்டி.

சகலவித சௌகர்ய வசதிகளும் இருந்தன.

வீட்டில்கூட அவ்வளவு வசதிகள் இல்லை.

உண்மையிலேயே பிரயாணத்தை நன்கு அனுபவித்தார்.

திருநெல்வேலி இறங்கும் இடம்.

இரயில் திருநெல்வேலிக்கு வந்துவிட்டது.

முதல் வகுப்பு  வசதியை அனுபவித்து வந்திருந்த நண்பருக்கு

இரயிலைவிட்டு இறங்க மனது  வரவில்லை.

ஆனால், டிக்கட் பரிசோதகர் விடுவாரா?

இறக்கிவிட்டுவிட்டார்.

இந்த நண்பரின் மனப்பக்குவம்தான் நம்மில் அநேகருக்கு இருக்கிறது.

இவ்வுலக வாழ்வு இரயில் பயணத்தைப் போன்றது,

நிரந்தரமானது அல்ல,

ஏதாவது ஒரு நாள் இதைவிட்டு இறங்கியே ஆகவேண்டும் என்று

நம் எல்லோருக்கும் தெரியும்.

தெரிந்தது மாதிரியா நடக்கிறோம்?

இவ்வுலக வாழ்வில் நமக்கு எவ்வளவு பற்று!

இவ்வுலக வாழ்வு நிரந்தரமில்லாதிருக்கலாம்,

ஆனால், இறைவனால் தரப்பட்டது.

மிக முக்கியமான பயன்பாட்டிற்காகத் தரப்பட்டது.

நிரந்தரமான,  முடிவில்லாத நித்திய வாழ்வுக்கு நம்மைத் தயாரிப்பதற்காக

இந்த நிரந்தரமற்ற வாழ்வு தரப்பட்டுள்ளது.

இவ்வுலக வாழ்வு ஒரு வழி,

நித்திய பேரின்ப வாழ்வுக்கு.

இயேசு சொல்கிறார்:

நானே வழி,

நானே   ஒளி,

நானே ஜீவன்.

நாம் இயேசுவின் சீடர்கள்.

ஆகவே நாம்

இயேசு என்னும் உயிரோடு,

இயேசு என்னும் ஒளிவிளக்கில்,

இயேசு என்னும் வழி நடந்தால்

நித்திய பேரின்ப வாழ்வை  அடைவது உறுதி.

அதாவது  நமது வாழ்வு

இயேசுவின் வாழ்வாக,

இயேசுவுக்கே உரிய

மட்டற்ற அன்பு ,

இரக்கம்,

பணிபுரியும் குணம்,

உதவிபுரியும் குணம்,

தியாக குணம்,

மற்றவர்கட்காகத் தன் உயிரையே கொடுக்கும் குணம்,

தந்தையின் சித்தத்தையே வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்த குணம்

ஆகிய பண்புகள் கொண்ட வாழ்வாக  மாறவேண்டும்.

இயேசு அளித்த நற்செய்தி என்னும் ஒளியில் நாம் நடக்க வேண்டும்.

அவரையே நம் ஆன்மீக உணவாய் உண்டு,

அவரையே நம் ஜீவனாகக் கொண்டு வாழவேண்டும்.

இத்தகைய வாழ்வுதான் நாம் நடக்கவேண்டிய மோட்ச வழி.

இந்த வழி எளிதான வழி அல்ல.

சிலுவைகள் நிறைந்த வழி.

நமது சிலுவையைச்  சுமக்காமல் இயேசுவின்  வழியில் நடக்க இயலாது.

இயேசு தன் சிலுவை மரணத்தால்தான்

நமது நித்திய மரணத்தை வென்றார்.

நாமும் இயேசுவின் துணையோடு,

நமது சிலுவையைச் சுமந்து கொண்டு

மோட்ச வழியில் நடப்போம்,

அவரோடு நித்திய பேரின்ப  வாழ்விற்குள் நுழைவோம்.

லூர்து செல்வம்.




No comments:

Post a Comment