Sunday, April 15, 2018

வில்லனுக்கு நன்றி கூறும் கதாநாயகன்.

வில்லனுக்கு நன்றி கூறும் கதாநாயகன்.

********************************

லூர்து,

நம்ம கதையின் வில்லன்.

என்னடா இது,  வாத்தியார் அவர் பெயரையே வில்லனுக்குச் சூட்டிட்டாரே என்று ஆச்சரியப்பட வேண்டாம்.

எதாவது ஒரு பெயரை வைக்கப்போய்,

அந்த பெயருக்கு உரிய நபர்

'வேண்டுமென்றே என் பெயரைக் கெடுத்துட்டார்னு'

வழக்குப்போட்ரப்படாது பாருங்க,

அதான் என் பெயரையே வைத்துவிட்டேன்.

ஆனால் என் பெயர் மாதிரியே பெயர் உள்ள நண்பர்கள் தயவு செய்து கோபப்பட்டிட வேண்டாம்,

வில்லனுக்குக் கொடுத்திருக்கிறது என் பெயரை மட்டும்தான்.

கதாநாயகன்?

கதையின் கடைசியில்தான் வருவான்.

சரி, கதைக்கு வருவோம்.

ஒரு ஆபீஸ்ல

லூர்து, செல்வம்னு இரண்டுபேர் வேல பார்த்தாங்க.

ஆபீஸ்தான் ஒண்ணே தவிர இரண்டு பேர் குணமும் ஒண்ணுல்ல.

செல்வத்துக்கு எதெல்லாம் பிடிக்குமோ,

அதெல்லாம் லூர்துக்குப் பிடிக்காது.

எதெல்லாம் பிடிக்காதோ,

அதெல்லாம் பிடிக்கும்.

செல்வத்துக்கு

Punctual ஆ வேலைக்கு வருவது பிடிக்கும்.

கொடுக்கப்பட்ட வேலையை Sincere ஆ செய்யப்பிடிக்கும்.

அடுத்தவங்க வேலையில மூக்கை நுழைக்கிறது பிடிக்காது.

தவறு செய்தா மன்னிப்புக் கேட்பது பிடிக்கும்,

மற்றவங்கள நேசிப்பது பிடிக்கும் ,

எடுத்ததுக்கெல்லாம் குறை சொல்றது பிடிக்காது

செல்வம் நல்லவனா இருப்பது லூர்துக்குப் பிடிக்காது.

அதுவும் அவனுக்கு மானேஜர்ட்ட நல்ல பெயர் இருக்கது கொஞ்சங்கூட பிடிக்காது.

இன்னும் கொஞ்ச நாள்ல
ஒரு பதவி உயர்வு வேற காத்துக்கிட்டிருக்கு.

அதத் தடுத்து நிறுத்தி ஆகணும்.

அதுக்காக அவன் பெயரைக் கெடுத்தாகணும்.

ஆனால் அது இப்ப இருக்கிற மானேஜர்ட்ட நடக்காது.

அவர் யார் யாரைப்பற்றி கெடுத்துப் பேசினாலும் நம்ப மாட்டார்.

கெடுத்துப் பேசியவன் பெயர்தான் விழும்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில்தான் மேனேஜருக்கு மாறுதல் உத்தரவு வந்தது.

லூர்துக்குக் கொண்டாட்டம்.

புதுசாக வரப்போகிறவர் பொறுப்பு ஏற்குமுன்னே அவரைக் கண்டு பிடித்து செல்வத்தைப்பற்றி வத்தி வைக்கவேண்டும்.

ஆபீசுக்குள் நுழையும்போதே செல்வத்தின் எதிரியாக நுழையவேண்டும்.

தன் திட்டத்தை நிறைவேற்றிட செயலில் இறங்கினான்.

முதலில் அவர் யாரென்று கண்டுபிடித்தான்.

புதிய மானேஜரின் பெயர்  அந்தோனி.

காலையில் Walking செல்லக்கூடியவர் என்பதைக் கண்டுபிடித்து,

காலையில் தற்செயலாகச் சந்திப்பதுபோல சந்தித்துத்

தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டான்.

இப்போதெல்லாம் இந்த மாதிரி வேலைகட்கு TV சீரியல்கள் செயல்முறைப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கின்றனவே!

செல்வம்

அந்தோனியைப்பற்றி தவறுதலான வதந்திகளைப் பரப்பிவருவதாக அவர் மனதில் விஷ விதையை விதைத்துவைத்தான்.

பொறுப்பு ஏற்கும்போதே செல்வத்தை விரோதியாகப் பார்த்தால் அவனது promotion காலி.

பொறுப்பு ஏற்பு நாளில் லூர்து மிக மகிழ்ச்சியாக இருந்தான்.

செல்வம் வழக்கம்போல இருந்தான்.

அன்று மாலை நம் வில்லனுக்கு பெரிய இடி காத்திருந்தது. 

செல்வத்தின் Promotion sanction ஆகியிருந்தது.

கையெழுத்திட்டவர் புதிய மானேஜர், அந்தோனி.

நமது வில்லனுக்கு ஒன்றும் புரியவில்லை.

அதெப்படி?

நமது முயற்சி இப்படி புஸ்வாணம் ஆயிடுச்சே.

ஒரு புதுமானேஜர் செவிடோ?

நாம் சொன்னது எதையும் அவர் கேட்கலியோ?

" மிஸ்டர் லூர்து,'' 

"சார்.."

"ரொம்ப நன்றி."

"நன்றியா? எனக்கா?  எதுக்கு?"

" ஒரு புண்ணியத்தோடு பணியை ஆரம்பிக்க உதவியிருக்கீங்களே. அதுக்கு."

"நான் உதவியிருக்கேனா?  எப்படி ? "

"Mr. செல்வம் என் பெயரைக் கெடுத்திட்டதா  சொன்னீங்கள்ல. அப்போ அவர் என் எதிரிதான.

நம்  ஆண்டவர் இயேசுவின் போதனைப்படி எதிரியை மன்னித்து நண்பனாக்கிவிட்டேன்,

அவருக்கு Promotion னும் கொடுத்துவிட்டேன்.

இந்த புண்ணியத்துடன் என் பணியை ஆரம்பிக்கிறேன்.

நீங்க சொல்லியிருக்காட்டா
செல்வத்தைப் பற்றி எப்படி   தெரியும்?"

" செய்த தப்பு பற்றி விசாரிச்சீங்களோ? "

"இல்ல. விசாரிச்சா உங்க பெயர் உள்ளே வருமே."

"அதுவும் சரிதான்."

"Thanks you once more. "

 "உங்கள் பகைவர்களுக்கு அன்புசெய்யுங்கள்.

அவர்களுக்கு நன்மை புரியுங்கள்." (லூக். 6:35)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment