Sunday, April 29, 2018

இயேசுவே தந்திருக்கும் தெய்வீக மருந்து.

இயேசுவே தந்திருக்கும்

தெய்வீக மருந்து.

*********************************

"தோனி, லைட்டப் போடு."

"போட்டுட்டேம்மா. எரியமாட்டேங்குதம்மா."

"ஏன்? கரண்ட் இல்லையா? "

"இருக்கும்மா.  T.V ஓடுத."

"அப்போ லைட் மட்டும் ஏன் எரிய? "

Electrician லைன பிரிச்சிப் பார்த்துவிட்டு,

"Madam, லைன் cut ஆயிருக்கு. அதனால்தான் கரண்ட் கிடைக்காம லைட் எரியல."

"சரி பண்ணிடுங்க."

"ஆகட்டும், Madam."
   
*      *       *      *      *   *

"Tankல தண்ணீர் இல்லையோ?"

"இருக்க. கொஞ்சம்
முன்னதானே மோட்டார் போட்டேன்."

"நல்லியில தண்ணீர் வரல?"

"குழாய்ல ஏதாவது அடைப்பு இருக்கும்."

*         *        *           *         *   

"வீட்டுக்குள்ள ஏன் போக முடியல? "

"கதவு பூட்டியிருக்கு."

லைன் கட் ஆய்ட்டா கரண்ட் வராது.

குழாய்ல அடைப்பு இருந்தால்
தண்ணீர் வராது.

கதவு பூட்டியிருந்தால் வீட்டுக்குள்ள போகமுடியாது.

இயேசு கூறியுள்ளபடி,

"கிளையானது திராட்சைக் கொடியில் நிலைத்திருந்தாலன்றி, தானாகக் கனி தரமுடியாது."

மேற்கூறப்பட்டவை எல்லாம்

உவமானங்கள்.

உவமேயம் எது?

நமது ஆன்மீக வாழ்வு வளம் பெற நமது ஆன்மா இறைவனோடு இணைந்திருக்க வேண்டும்.

அப்போதுதான் நமது ஆன்மா என்ற பல்புக்குள் ஆண்டவருடைய அருள் என்ற மின்சாரம் பாய்ந்து ஒளி தரும்.

ஆன்மா என்ற வீட்டிற்குள் ஆண்டவருடைய அருள் நுழைய முடியும்.

ஆன்மா என்ற திராட்சைக் கிளை இறைவன் அருள் பெற்று
நற்செயல்களாம் கனி தரும்.

விசுவாசமும், நற்செயல்களும்

இன்றி இரட்சண்யம் பெற இயலாது.

நாம் செய்யும் எந்த செயலும் நற்செயல் ஆக

நமது ஆன்மாவில்

தேவ இஸ்டப்பிரசாதம் (Sanctifying grace)

என்ற இறை அருள்

இருக்க வேண்டும்.

இந்த அருளுடன்

ஒரு ஏழைக்கு

ஒரு ரூபாய்

தர்மம் செய்தாலும்

அது விண்ணகப் பரிசைப் பெற்றுத் தரும்

ஒரு நற்செயல்.

இந்த அருளின்றி

ஆண்டவருக்கு ஆலயம் கட்ட

ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தாலும்

அதனால் நமது ஆன்மாவிற்கு

ஒரு பயனும் இல்லை.

Whatever is done without sanctifying grace is of no value before God.

நாம் ஞானஸ்நானம் பெறும்போது

முதல்முதல்

தேவ இஸ்டப்பிரசாதத்தைப் (Sanctifying grace) பெற்றோம்.

பெற்ற இந்த இறை அருளை இழக்காமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

நாம் சாவான பாவம் செய்யும்போது இந்த அருளை இழந்துவிடுகிறோம்.

சாவான பாவ நிலையில் நாம் எந்த நற்செயலையும்  செய்ய முடியாது.

சாவான பாவ நிலையில்

நாம் நற்கருணை உட்கொண்டால்

மேலும் ஒரு

சாவான பாவம்

செய்கிறோம்.

சாவான பாவ நிலையிலிருந்து விடுபட

இயேசு தந்திருக்கும்

திரு அருட்சாதனம்தான்

பாவசங்கீத்தனம்.

இக்காலத்தில் அநேகருக்கு பாவசங்கீத்தனத்தின் முக்கியத்துவம் புரிவதில்லை.

அது பாவநோய் தீர

இயேசுவே தந்திருக்கும்

தெய்வீக மருந்து.

இயேசுவை நம் ஆன்மீக வைத்தியராக ஏற்றுக்கொண்டால்

அவர் தரும் மருந்தைச் சாப்பிடவேண்டும்.

இயேசு நம் குருக்களின் உருவத்தில்

நம்மிடையே இன்றும் வாழ்கிறார்.

இயேசு பாவிகளைத் தேடியே இவ்வுலகிற்கு வந்தார், பாவங்களை மன்னிக்க.

ஆகவே குருக்கள் பாவிகளைத் தேடிச் செல்ல வேண்டும், பாவங்களை மன்னிக்க.

நாமும் குருக்களைத் தேடிச் செல்ல வேண்டும், பாவன்னிப்பு பெற.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment