Friday, April 27, 2018

உம்முடைய இராட்சியம் வருக.

உம்முடைய இராட்சியம் வருக.
*******************************

ஒவ்வொரு நாளும் நாம் விண்ணகத் தந்தையை நோக்கி   செபிக்கும்போது நாம் கூறும் வாழ்த்துரைகளில் இதுவும் ஒன்று:

"Thy Kingdom come."

" உம்முடைய   இராட்சியம் வருக."

"உலகினர் அனைவரும் உமது ஆட்சியின்கீழ் வருக." என்று இறைத் தந்தையை வாழ்த்துகிறோம்.


மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, ஏற்கனவே கோடீஸ்வரனாயிருக்கும் ஒருவனிடம்போய்,

"நீங்கள் கோடீஸ்வரனாக வாழ்த்துகிறேன்.

என வாழ்த்துவது போலிருக்கிறது,

நாம் இறைத் தந்தையை வாழ்த்துவது.

நாம் சொன்னாலும், சொல்லாவிட்டாலும்,

வாழ்த்தினாலும், வாழ்த்தாவிட்டாலும்

இறைவன்தான் அனைத்துலக அரசர்.

ஏனெலில் அனைத்துலகையும்
படைத்து ஆண்டு நடத்துபவர் அவரே.

பூமியில் வாழும் விலங்குகட்கும்,

வானத்துப் பறவைகட்கும் உணவு ஊட்டுபவர் அவரே.

செடிகளை மலர்களாலும், மரங்களை காய்கனிகளாலும் அலங்கரிப்பவர் அவரே.

நமது வாழ்த்துரையால் அவருக்குக் கூடுதலாக எதுவும்
கிடைக்கப் போவதில்லை,

ஏனெனில் அவர் நிறைவானவர்.

நிறைவில் எந்த மாற்றமும் செய்ய இயலாது.

Who is perfect cannot become more perfect.

அப்படியானால் நமது வாழ்த்துரையின் பொருள் என்ன?  நோக்கம் என்ன?

நாம் நமது நண்பர்களை வாழ்த்துகிறோம்:

"தங்கள் காலைப்பொழுது நலம் நிறைந்ததாய்  இருப்பதாக."

"Good morning. "

"தங்கள் பிறந்த நாளில் மகிழ்ச்சி பொங்கட்டும்."

"நீண்ட நாள் வாழ்க."

நமக்குத் தெரியும்

நமது வெறும் வாழ்த்துதலால் மட்டும்

நம்மால் யாருக்கும்

மகிழ்ச்சியையோ,

நீண்ட ஆயுளையோ

தரமுடியாது என்று.

பின் ஏன் வாழ்த்துகிறோம்?

யாருடன் நமக்கு நட்புறவு இருக்கிறதோ,

யாருடைய மகிழ்ச்சியை நாம் விரும்புகிறோமோ,

யாருடைய அன்பு நமக்கு வேண்டுமென விரும்புகிறோமோ

அவர்களைத்தான் வாழ்த்துவோம்.

அவர்கட்கு நம் நல்ல மனதைத் தெரிவிப்பதற்காகவே வாழ்த்துகிறோம்.

இறைவனுக்கும் நமக்கும் இடையே உள்ள அன்பு, சமாதான உறவின் அடிப்படை 'நல்ல மனது'.

  படைப்பின்போது   இறைவனோடு   நாம் கொண்டிருந்த சமாதான உறவை பாவத்தால் நாம் இழந்தோம்.

அதை மீட்க
மனித உரு எடுத்த இயேசு

பிறந்தபோது

நமக்குத் தந்த

முதல் நற்செய்தி

"Glory to God in the highest: and on earth peace to men of good will."

" விண்ணுலகில் இறைவனுக்கு மகிமையும்,

  பூவுலகில் நல்மனத்தோர்க்கு சமாதானமும் உண்டாகுக."
(லூக். 2:14)

முக்கிய வார்த்தைகள்:

"men of good will."

"நல்மனத்தோர்க்கு."

நல்ல மனது உள்ளவர்கட்கு மட்டுமே இறைவன் தரும்
சமாதானம் கிடைக்கும்.

நமது நல்ல மனதை இறைவனுக்குத் தெரிவிப்பதற்காகவே அவரை வாழ்த்துகிறோம்.

இறைவனுக்கு எல்லாம்  தெரியும்.

ஆயினும் நமது மனதை நாமே அவரிடம் திறந்து காட்ட விரும்புகிறார்.

அவர் அன்பளிப்பாக நமக்கு அளித்த

பரிபூரண சுதந்திரத்தைப் பயன்படுத்தி

முழுமையான நல்மனத்துடன்

அவரைத் தேர்ந்தெடுத்து

அவரிடம் தெரிவிக்கவேண்டும்.

"இறைவா,

என் முழு மனதுடன்

உம்மை

விசுவசிக்கிறேன்,

நம்புகிறேன்,

நேசிக்கிறேன்.

ஆராதிக்கிறேன்.

வாழ்த்துகிறேன்."

ஆன்மீக வாழ்வின் ஆரம்பமே நல்மனதுதான்.

சிலசமயங்களில் சில நற்செயல்களைச் செய்ய நம்மால் இயலாதிருக்கலாம்.

அச்சமயங்களில் அவற்றைச் செய்ய விரும்பும் நமது நல்ல மனது நற்செயல்களின் பலனைப் பெற்றுத் தரும்.

ஒரு ஏழை மாணவனுக்கு பண உதவி செய்ய மனது இருக்கிறது.

ஆனால் பணம் இல்லை.

நமது நல்ல மனதுடன் இறைவனிடம் அவனுக்காகச் செபித்தால் அவனுக்கு வேண்டிய உதவி வேறு எந்த வகையிலாவது சென்று செர இறைவன் அருள்வார்.

திவ்ய நற்கருணை பெற மனதில் ஆசை இருக்கிறது.

ஆனால் திருப்பலி காண இயலவில்லை.

மனதில் ஆசை நன்மை மூலம் நற்கருணைநாதரின் அருளைப் பெறலாம்.

இறைவனை நாம் வாழ்த்தும்போது, 

அவரது அருள் பெற்று பயனடைவது நாம்தான்.

இறைவனை வாழ்த்துவோம்,

நம் நல் மனதை அவருக்குத் தெரிவிப்போம்

அவரது அருளில் வளர்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment