Tuesday, April 10, 2018

வீட்டுப் பாடத்தை ஒழுங்காகப் படிப்போர் ஏன் ஆசிரியரது பிரம்புக்குப் பயப்படவேண்டும்?

வீட்டுப் பாடத்தை ஒழுங்காகப் படிப்போர் ஏன் ஆசிரியரது
பிரம்புக்குப் பயப்படவேண்டும்?
*******************************

நான் பாடவேளைக்காக வகுப்புக்குச் செல்லும்போது என்னோடு எடுத்துச் செல்வது இரண்டு பொருட்கள்:

இடது கையில் புத்தகம்.

வலது கையில்  பிரம்பு.

வகுப்பிற்குள் நுழையும்போதே யார்யார் வீட்டுப் பாடத்தை ஒழுங்காகப் படித்து விட்டு வந்துள்ளார்கள் என்பதைக் கண்டுபிடித்து விடுவேன்.

படித்து வந்துள்ளோர் கண்கள் என் முகத்தில் இருக்கும்,  புன்முறுவலோடு.

படியாதோர் கண்கள் என் பிரம்பின்மீது இருக்கும்,  பயஉணர்வோடு.

நல்லதோ, கெட்டதோ பிரம்பிற்கு ஒரு பயன் உண்டு,

அநேக பிள்ளைகளைப் படிக்க வைக்கும்.

நமது ஞான வாழ்விலும்கூட நரகம் அநேகரை நல்லவர்களாக வாழவைத்திருக்கிறது.

ஆசிரியரின் பிரம்புக்குப் பயந்து நன்கு படிக்கும் மாணவர்களைப்போல,

நரகத்திற்குப் பயந்து பாவம் செய்யாமல் வாழ்பவர்கள் இருக்கிறார்கள்.

நன்கு படிப்பதற்காக ஆசிரியர் பிரம்பைக் காண்பிப்பதுபோல,

இயேசுவும்

நம்மை நல்வழிப்படுத்துவதற்காக

நரகத்தைப் பற்றி பேசியிருக்கிறார்.

நரகம் என்றால் என்ன?
'"""""""""""""""""""""""""""""""""""
நாம் செய்த பாவத்தின் விளைவாக

நம்மை நாமே

இறைவன் மற்றும் புனிதர்களின் உறவிலிருந்து

நித்தியத்துக்கும் பிரித்துக்கொள்ளும் நிலை.

"Hell is the state of definitive self-exclusion from communion with God and the blessed.”(CCC1033)

1.நரகம் பாவத்தின் விளைவு.

தண்டனை என்று கூற மாட்டேன், இது நமது பாவத்தின் விளைவு.

பள்ளித் தேர்வில்,  நன்கு படிக்காத மாணவனால் 35 மதிப்பெண்கள் பெற முடியவில்லை.

விளைவு: Failure.

ஆசிரியரா அவனை fail ஆக்குகிறார்?

இல்லை.

அவன் fail ஆகிறான்,  படியாததின் விளைவாக.

2. சாவான பாவ நிலையில் மரிக்கிறவர்கள்தான் இறைவனின் உறவிலிருந்து பிரிகிறார்கள்.(self-exclusion)

3.பிரிவு நித்தியமானது.

நரகம்  இறைவனது அன்பிற்கோ, இரக்கத்திற்கோ எதிரானது அல்ல.

இறைவன் மாறாதவர்,

ஆகவே  அவர் நம்மீது கொண்டுள்ள அன்பு ஒருபோதும் மாறாது.

பாவம் செய்பவர்கள்தான் அவரது அன்பை உதறிவிட்டுப் போகிறார்கள்.

ஒரு நண்பர் கேட்டார்,   'இறைவன் நம்மைப் பாவம் செய்ய முடியாமல் படைத்திருக்கலாமே' என்று.

படைத்திருக்கலாம்.

மிருகங்களை அப்படித்தானே படைத்தார்.

Sports முடிந்ததும் தலைமை ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்டார்,  "நீ பரிசு ஏதும் பெறவில்லையா? "

மாணவன் சொன்னான்,  "நீங்கள் போட்டியே வைக்காமல் எல்லோருக்கும் பரிசு கொடுத்திருக்கலாம்."

கொடுத்திருக்கலாம், எல்லோருக்கும் சாப்பாடு கொடுக்கிறது மாதிரி.

ஆனால் அதற்குப் பெயர் பரிசு அல்ல.

இறைவன்  நமக்கு முழுச் சுதந்திரம் தந்திருக்கிறார்.

முழுச் சுதந்திரத்தோடு இறைவனைத் தேர்ந்தெடுத்தால் மோட்சம்,

அதாவது,  இறைவனோடு வாழ்வு பரிசாகக் கிடைக்கும்.

இறைவனைத் தேர்ந்தெடுக்காவிட்டால்,

நாமாகவே பரிசை வேண்டாம் என்கிறோம், அதுதான் நரகம்.

இறைவனைத் தேர்ந்தெடுத்தால் நித்திய பேரின்பம்.

நிராகரித்தால் நித்தியபெருந்துன்பம்.

மோட்சம் பேரின்பமானது.

நரகம் அளவு கடந்த வேதனை நிறைந்தது.

நமது நித்திய வாழ்வு
குறித்து

முடிவெடுக்கவும், 

அதற்காகத்

தயாரிக்கவும்தான்

இவ்வுலக வாழ்வு தரப்பட்டுள்ளது.

அதை மறந்து

'வாழ்க்கை அனுபவிக்கவே'

என்று நினைத்து,

இறைவனை மறந்து வாழ்ந்தால்,

நித்திய பேரின்பம்

கைநழுவிப் போய்விடும்.

நித்திய துன்பம் வந்துசேரும்.

சாவான பாவம் செய்தவர்கள் மனம் வருந்தி மன்னிப்பு பெற

இவ்வுலகில் முடியும்,

நரகில் முடியாது.

முடிவில்லா இன்பமா,

முடிவில்லா வேதனையா,

எது வேண்டும்?

நாம்தான் முடிவு செய்ய வேண்டும்,

இவ்வுலகிலேயே.

ஆகவே, பாவம் செய்திருந்தால்,

மனஸ்தாபப்பட்டு,

பாவசங்கீத்தனம் மூலம்

இவ்வுலகிலேயே

மன்னிப்புப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வுலக வாழ்வுதான்

மறுவுலக வாழ்வைத் தீர்மானிக்கிறது.

இவ்வுலகில் இறைவனுக்காக வாழ்வோம்.

மறுவுலகில் இறைவனோடு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment