Friday, April 6, 2018

ஹலோ! Friends, நான் சாத்தான் பேசறேன்.

ஹலோ!  Friends,

நான் சாத்தான் பேசறேன்.
*******************************

"ஹலோ!  Friends,

நான் சாத்தான் பேசறேன்.

என் இயற்பெயர் லூசிபெர்.

லூசிபெர் என்றாலே பிரகாசமானவன் என்று பொருள்.

கடவுள் உங்களைப் படைப்பற்கு முன்பே சம்மனசுக்களைப் படைத்தார்.

சம்மனசுக்களிலேயே அதிகமாக ஒளி வீசியவன் நான்.

எல்லா சம்மனசுகளுக்கும் தலைவனாகப் படைக்கப்படேன். .

என்னுடைய அழகும், புத்தியும், சக்தியும்,  தலைமைப் பொறுப்பும் என்னையே பிரமிப்பு அடையச் செய்தன.

என்னுடைய கர்வம்

எனக்கு அழகும், புத்தியும், சக்தியும் தந்த

இறைவனுக்கு நிகரானவனாக

என்னையே நினைக்கச் செய்தது.

இறைவன் எங்களைப் படைக்கும்போது சிந்தனை, செயல் சுதந்திரத்தோடு படைத்தார்.

அதை அவருக்கு எதிராகப் பயன்படுத்தி,

என்னோடு ஆயிரக்கணக்கான சம்மனசுக்களையும் சேர்த்துக்கொண்டு

இறைவனுக்கு எதிராக எழுந்ததால்

விண்ணிலிருந்து வீசி எறியப்பட்டோம்.

இருப்பினும் என் கர்வம் சிறிதும் குறையவில்லை.

இறைவனுக்கு அடிமையாய் இருப்பதைவிட, நரகத்தின் மன்னனாய் இருப்பதில் பெருமை கொள்கிறேன்.

எங்களது வீழ்ச்சிக்குப்பின் கடவுள் உங்கள் முதல் பெற்றோரை,

எங்களுக்கு அவர் அளித்திருந்த

அதே சிந்தனை, செயல் சுதந்திரத்தோடு படைத்தார்.

அவர்கள் முழு மனச் சுதந்திரத்தோடு இறைவனைத் தெரிவு செய்து ,

அவருக்கு சேவை செய்து

விண்ணகத்தை சுதந்தரித்துக் கொள்ள வேண்டும்

என்பது அவர் திட்டம்.

ஆனால் ,

எங்களுக்கு மறுக்கப்பட்ட விண்ணகத்தினுள்

மனிதர்  நுழைவதை என்னால் எப்படித் தாங்கிக்கொள்ள இயலும்?

மேலும் எனது சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

அதற்காக உங்கள் முதல் பெற்றோரை ஏமாற்றி

என் வழிக்குக் கொண்டுவரத் தீர்மானித்தேன்.

உங்களுக்குதான் தெரியுமே

நான் ஆதாம், ஏவாளை எப்படி ஏமாற்றினேன் என்று.

என் சொல்லைக் கேட்டு ஏமாந்து '

கடவுளுடைய கட்டளையை மீறி பாவம் செய்தார்கள்.

பாவம் செய்த மனித இனம் என் பக்கம்,

என் சாம்ராஜ்யம் விரிவடையும்,

விண்ணகத்திற்குள் யாரும் நுழைய மாட்டார்கள்

என்று ஆனந்தப்பட்டேன்.

ஆனால் கடவுள் என் மகிழ்ச்சியில் மண்ணைப் போட்டுவிட்டார்.

அவர்தான் அளவற்ற இரக்கம் நிறைந்தவர் ஆயிற்றே.

நான் கைப்பற்றிய மனித இனத்தை என்னிடமிருந்து மீட்கத் தீர்மானித்தார்.

மனித இனம் அவருக்கு எதிராகச் செய்த பாவத்துக்கு அவரே பரிகாரம் செய்யத் தீர்மானித்தார்.

பரிசுத்த தம திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதன் தேவனே

மனிதனாய்ப் பிறந்து, 

தனது பாடுகளாலும்,

சிலுவை மரணத்தாலும்

உங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் செய்து,

உங்களுக்கு விண்ணக வாயிலைத் திறப்துவிட்ட
வரலாறு உங்களுக்குத் தெரியும்.

ஆனாலும் நான் விடுவதாயில்லை.

இறைவனுக்கு எதிராக நான் ஆரம்பித்த போர் தொடர்கிறது.

இறைவன்  சர்வ வல்லவர் என்று எனக்குத் தெரியும்.

இறுதி வெற்றி அவருக்குதான் என்பதும் எனக்கு தெரியும்.

அவரை நேரடியாக எதிர்க்க முடியாது.

ஆகவே உங்களை ஏமாற்றி,

உங்களை அவரிடமிருந்து பிரித்து,

என் வழிக்குக் கொண்டுவர

என்னென்ன செய்ய வேண்டுமோ

அதையெல்லாம் செய்யும் நோக்கோடு

நானும் என் பரிவாரங்களும்

உங்களிடையே

மாறு வேடத்தில்
உலவிக்கொண்டிருக்கிறோம்.

பாவத்திலிருந்து உங்களை மீட்பது இயேசுவின் பணி என்றால்,

உங்களை பாவத்துக்குள் இழுப்பது எங்கள் வேலை.

உங்களை மீட்கும் நோக்கோடு

இயேசு பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை

ஏழு தேவத்திரவிய அனுமானங்களோடு நிருவினார்.

அவரால் நியமிக்கப்பட்ட குருக்களும்,

ஏழு தேவத்திரவிய அனுமானங்களும்தான் இயேசு ஏற்படுத்தியுள்ள மீட்பின் வழி.

டாக்டர் எழுதிக்கொடுத்த மாத்திரைகளை வாங்கினால் மட்டும் போதாது.

அவர் சொன்னபடி சரியான முறையில் சாப்பிட வேண்டும்.

முறைதவறிச் சாப்பிட்டால்

எதிர்பார்த்த விளைவு அல்ல,

எதிர்விளைவுகள் ஏற்படும்.

அதேபோல்தான் தேவத்திரவிய அனுமானங்களை  முறைதவறி  பெற்றால், பயன் இல்லை.

உதாரணத்திற்கு,

சாவான   பாவநிலையில் உள்ளவன்

சரியான முறையில் பாவசங்கீத்தனம் செய்யாமல்

திவ்ய நற்கருணை வாங்கினால்

இன்னொரு சாவான பாவம்

கட்டிக்கொள்கிறான்.

இது குளிக்கப் போனவன் சேற்றை அள்ளிப் பூசிக்கொண்ட கதையாகிவிடும்.

என் பரிவாரங்களுக்கு நான் இட்டிருக்கும் கட்டளை:

1.ஒவ்வொகிறிஸ்தவனையும் பின் பின்பற்றுங்கள்.

2.அவன் தேவ திரவிய அனுமானங்களை நெருங்காதபடிப் பார்த்துக்கொள்ளுங்கள்.

3.நெருங்கினால் முறையாக நெருங்காதபடிப் பார்த்துக்கொள்ளுங்கள்.

என் முயற்சி பலன் அளித்துக்கொண்டிருக்கிறது.

திருவிழாக்களுக்குச் செல்வோர் எண்ணிக்கை கூடியிருந்தாலும்,

பூசையில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை கூடியிருந்தாலும்,

நற்கருணை வாங்குவோர் எண்ணிக்கை கூடியிருந்தாலும்

பாவசங்கீத்தனஙங்களின் எண்ணிக்கை  கணிசமான அளவு  குறைந்துவிட்டது.

எவ்வித தயாரிப்புமின்றி

ஏதோ தின்பண்டத்தை வாங்குவதுபோல

நற்கருணையை

இடது கையால் வாங்கி

வலது கையால் வாயில் போடும்போது

நீங்கள் அவமதிப்பது உங்கள் ஆண்டவரை!

நீங்கள் எங்கள் எதிரியை அவமதிக்கும்போது

எங்கள் ஆட்களாக மாறிவிடுகிறீர்கள்!

கிறிஸ்தவர்களிடையே பாவ உணர்வைக் குறைத்தது,

தாங்கள் பாவிகள் என்பதையே மறக்கடிக்கச் செய்தது

எங்கள் பரிவாரங்களின் வேலைதான்.

பைபிள் வாசிப்பு அதிகரித்துவிட்டது,  உண்மைதான்.

ஆனால் வாசகங்களுக்குப் பொருள் தேடும்போது

என் ஆட்கள்

ரெடியாகக் காத்திருப்பார்கள், 

தவறான பொருளோடு.

இப்போது

அதிகம் படித்தவர்கள்கூட

அவரவர் விருப்பத்திற்கேற்ப

வசனங்களுக்கு

வித்தியாசமான பொருள் (interpretations) தருவதால்

சாதாரண மக்கள் குழப்பம் அடைகிறார்கள்.

உதாரணத்திற்கு,  இயேசு ஐந்து அப்பங்களையும்,  இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த புதுமை,

தன் உடலை மனிதருக்கு உணவாகத் தரவிருக்கும் உண்மையை

மறுநாள்அவர்களிடம் சொல்லும்போது

அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள

  அவர்களை     மனதளவில் தயாரிப்பதற்காகத்தான்.

ஆனால் அப்புதுமையை

மக்களிடம் பகிர்வு மனப்பான்மையை ஏற்படுத்த 

இயேசு செய்த செயல்முறைப் போதனை(Practical teaching)

என்று சிலர் பொருள் கூற

எங்கள் ஆட்களின் தூண்டுதல்தான் காரணம்.

மக்களின் பக்தி முயற்சிகளைக்கூட எங்கள் வேலைக்குச் சாதகமாகப்  பயன்படுத்திக்கொள்வோம்.

கோவில் திருவிழாக் கொண்டாடுவது அவர்களைப் பொறுத்த மட்டில் பக்தி முயற்சி.

எங்களுக்கு அதுதான் செயற்களம்.

திருவிழாக் காலங்களில்,

கொண்டாடும் முறை பற்றி திட்டமிடல்,

வரவு செலவு பற்றி

தீர்மானிக்கும் சபைத் தலைவர்கள் கூட்டத்தில்

அவர்கள் ஒற்றுமையைக் குலைத்து அவர்களிடையே சண்டை மூட்டி விடுவதே

என்னுடைய பரிவாரங்கள்தான்.

பங்குசாமியார் யாருக்கு பரிந்து பேசுவது என்று முழிப்பார்.

அவரோடும் சண்டை போட ஆரம்பித்து விடுவார்கள்.

சண்டைத் தீயை மூட்டிவிட்டு

அது அணையாதபடி

வருடம் முழுவதும்

ஊதி விட்டுக்கொண்டே இருப்போம்.

விழாக்களில் காட்டும் ஆர்வத்தைவிட

அதற்காக சண்டை போடுவதிலேயே

அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

எந்த சமாதானத்தை ஏற்படுத்த இயேசு மனிதன் ஆனாரோ

அந்த சமாதானத்தை

அவர் பெயரைச் சொல்லிக்கொண்டே

பறக்கவிட வைப்பதே எங்கள் வேலை.

எங்களோடு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி."

         *********

அன்பு நண்பர்களே,

சாத்தானின் பேச்சைக் கேட்டு

நாம் பயப்பட வேண்டியதில்லை.

இயேசு நம்மோடு இருக்கிறார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment