Tuesday, June 13, 2023

''இச்சின்னஞ் சிறு கட்டளைகளில் ஒன்றையேனும் மீறி, அப்படியே மனிதர்க்கும் போதிப்பவன், விண்ணரசில் மிகச் சிறியவன் எனப்படுவான். அவற்றைக் கடைப்பிடித்துப் போதிப்பவனோ, விண்ணரசில் பெரியவன் எனப்படுவான்.," (மத்.5:19)

''இச்சின்னஞ் சிறு கட்டளைகளில் ஒன்றையேனும் மீறி, அப்படியே மனிதர்க்கும் போதிப்பவன், விண்ணரசில் மிகச் சிறியவன் எனப்படுவான். அவற்றைக் கடைப்பிடித்துப் போதிப்பவனோ, விண்ணரசில் பெரியவன் எனப்படுவான்.," (மத்.5:19)

நற்செய்தி வெறுமனே செய்தி (news) அல்ல.

"தமிழ் நாட்டின் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார்."  என்பது செய்தி.

செய்திகளால் நமது பொது அறிவு வளரும். (General knowledge)

நற்செய்தி இறைவன் நமக்கு அனுப்பும் Message.

News க்கும், Message க்கும் வித்தியாசம் இருக்கிறது.

" அப்பா உங்களுக்கு ஒரு பேரன் பிறந்திருக்கிறான்"

என்று மகன் அப்பாவுக்கு அனுப்பும் தகவல் ஒரு News அல்ல, 

அது ஒரு Message.

News அறிவுக்கு மட்டும் உணவு.

Message நமது வாழ்க்கைக்கு உணவு.

இயேசு நமக்கு அறிவித்த நற்செய்தி Message from God.

Newsலும் உண்மை இருக்கும். ஆனால் அது நமது ஆன்மீக வாழ்க்கைக்குத் தேவையானதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் நமது வாழ்க்கையைப் பாதிக்கக் கூடிய சக்தி Message க்கு உண்டு.

Message க்குப் பொறுத்தமான தமிழ்ச்  சொல் எனக்குக் கிடைக்கவில்லை.

அகராதியைப் பார்த்தால் செய்தி என்றுதான் எழுதியிருக்கிறது.

தாய் திருச்சபை நமக்கு தந்திருக்கும் வார்த்தை 'நற்செய்தி'.(Gospel)

நற்செய்தி நாம் அறிந்து கொள்வதற்காக மட்டும் தரப்படவில்லை,

ஆனால் வாழ்வதற்காகத் தரப்பட்டிருக்கிறது.

வினாடி வினாக்களுக்குப் பதில் அளிப்பதற்காக மட்டும் நற்செய்தி நூலை நாம் வாசித்தால் 

அதை வெறும் செய்தியாக (News) மட்டும் பயன்படுத்துகிறோம்,

வாழ்வதற்காகப் பயன்படுத்தினால் மட்டுமே அது நற்செய்தி.
(Message from God.)

நற்செய்தியை வாசிக்க வேண்டியது,

தேர்வு எழுதுவதற்காக மட்டும் அல்ல,

போதிப்பதற்காக மட்டும் அல்ல,

பட்டிமன்றங்களில் பேசுவதற்காக மட்டுமல்ல.

இயேசு நற்செய்தி யோடு, கட்டளைகளையும் சேர்த்து நமக்குத் தந்திருக்கிறார்.

இறைவன் ஒருவரே என்பது நற்செய்தி.

அவரை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிக்க வேண்டும் என்பது கட்டளை.

நற்செய்தியையும், கட்டளையையும் பிரிக்க முடியாது.

இறைவன் ஒருவரே என்பதை அறிந்து, 
அவரை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிக்காவிட்டால்
நாம் அறிவதால் எந்த பயனும் இல்லை.

இறைவன் ஒருவரே என்பதை அறிந்து, 
நாம் அவரை நேசிக்காமல்,
நாம் அறிந்ததை மற்றவர்களுக்கு போதித்தால்,

நாம் அறிந்ததும் பயனற்றது, போதிப்பதும் பயனற்றது.

நாம் நற்செய்தியை வாழ்ந்து,
அதை மற்றவர்களுக்கும் போதிக்க வேண்டும்.

நற்செய்தியை வாழாமல் போதித்தால்

கேட்பவர்கள் நாம் சொல்வதை நம்ப மாட்டார்கள்.

அறிவது வேறு, நம்புவது வேறு.

நாம் அறிந்த நற்செய்தியை நம்பினால் மட்டுமே அதை வாழ்க்கையாக்குவோம்.

நற்செய்தியை வாசித்த பின் அதை வாழாவிட்டால் நாம் அதை நம்பவில்லை என்று அர்த்தம்.

இன்று மழை வரும் என்று செய்தி வருகிறது.

அதை நம்பினால் இன்று குடையுடன் வெளியே செல்வோம்.

குடை எடுக்காமல் சென்றால் செய்தியை நம்பவில்லை என்று தானே பொருள்.

போதிப்பவர்கள் தங்களது போதனையை வாழாவிட்டால்,

அவர்கள் நம்பாத ஒன்றை கேட்பவர்கள் எப்படி நம்புவார்கள்?

பழிக்குப் பழி வாங்குவதையே தொழிலாக கொண்டிருக்கும் ஒருவன்,

"உனது பகைவனை நேசி" என்று போதித்தால்,

வாய்க்கும், வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லாத ஒருவர் கூறுவதை மற்றவர்கள் எப்படி நம்புவார்கள்?

இயேசு போதித்த கட்டளைகளை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றால்

முதலில் நாம் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

"உனது அயலானை நேசி" என்று போதிப்பதற்கு முன்னால்,

நாம் நமது அயலானை நேசிக்க வேண்டும்.

"உனக்குத் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்" என்று போதிப்பதற்கு முன்னால்

நாம் நமக்குத் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.

"உனக்கு எதிராக குற்றம் செய்தவர்களை மன்னிக்க வேண்டும்" என்று போதிப்பதற்கு முன்னால்

நமக்கு எதிராக குற்றம் செய்தவர்களை நாம் மன்னிக்க வேண்டும்.

உணவு உண்பதற்கு முன் செபம் சொல்ல வேண்டும்,

உணவின் மீது சிலுவை அடையாளம் போட வேண்டும்,

உணவை உண்ட பின்னும் செபம் சொல்ல வேண்டும் 

என்று தாய்த் திருச்சபை கூறுகிறது.

இதை நமது பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் நாம் செய்ய வேண்டும்.

பெரிய காரியங்களில் மட்டுமல்ல,

சிறிய காரியங்களிலும் மற்றவர்களுக்கு நாம் முன் மாதிரிகையாக வாழ வேண்டும்.

நற்செய்தியை வாசிப்போம்,

வாசித்ததை வாழ்வோம்,

வாழ்ந்ததைப் போதிப்போம்,

மோட்சத்திற்குச் செல்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment