Tuesday, June 6, 2023

"வானகத்தில் தேவதூதர்களைப் போல்இருப்பார்கள்." (மாற்கு.12:25)

"வானகத்தில் தேவதூதர்களைப் போல்இருப்பார்கள்."    
(மாற்கு.12:25)

மனிதனைப் படைப்பதற்கு முன்னால் கடவுள் கோடிக்கணக்கான சம்மனசுக்களைப் படைத்தார்.

சம்மனசுக்கள் ஆவிகள்.

அவர்களுக்கு நம்மைப் போன்ற உடல் கிடையாது.

ஆகவே வாழ்வதற்கு இடம் தேவை இல்லை.

 சடப் பொருட்கள் இருப்பதற்குத் தான் இடம் தேவை.

நமது உடல் மண்ணில் உள்ள தாதுப் பொருட்களால் ஆன சடப்பொருள்.

ஆனால் நமது ஆன்மா ஆவி.

கடவுளுக்கும் பிரியமாக வாழ்பவர்கள் இறந்தவுடன் அவர்களின் ஆன்மா,

தேவைப்பட்டால் உத்தரிக்கிற ஸ்தலத்தைக் கடந்து,

மோட்சத்திற்குச் சென்று 

உடல் இல்லாத சம்மனசுக்களைப் போல வாழ ஆரம்பிக்கும்.

சம்மனசுக்களைப் போலவே மோட்சத்துக்குச் செல்லும் நமது ஆன்மாக்களுக்கும் வாழ இடம் தேவை இல்லை.

மோட்சத்தில் இடம் கிடையாது.

அங்கு வாழ்பவர்கள் நித்திய பேரின்ப நிலையில் வாழ்கின்றார்கள்.

உலகம் முடியும் போது பூமிக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்த நமது உடல்கள் உயிர்த்தெழும்.

அவை உயிர்க்கும்போது தங்களுடைய சடப் பொருள் நிலையை இழந்து, 

இயேசுவின் உடலை போல ஆன்மீக நிலையை அடைந்து,

மோட்சத்தில் வாழ்வதற்கு ஏற்ற நிலையை அடையும்.

Our material bodies will become spiritual bodies, which will need no place and time to live in.

உலகம் முடிந்தபின் நாம் இயேசுவைப் போலவே ஆன்ம, சரீரத்தோடு மோட்சத்தில் வாழ்வோம்.

ஆன்ம, சரீரத்தோடு வாழ்ந்தாலும் சம்மனசுக்களைப் போலவே வாழ்வோம்.

நமது உடல்கள் Spiritual bodies ஆக மாறிவிட்டதால் அவை வாழ்வதற்கு மூச்சு விட வேண்டிய அவசியம் இல்லை.

மோட்சத்தில் காற்று இல்லை.

உணவு உண்ண வேண்டிய அவசியம் இல்லை.

கணவன், மனைவியாக உலகில் வாழ்ந்தவர்கள் மோட்சத்தில் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்வார்கள்.

ஆனால் அவர்களால் உலகில் வாழ்ந்தது போல குடும்ப வாழ்க்கை வாழ முடியாது.

சம்மனசுக்களைப் போலவே வாழ்வார்கள்.

மோட்சத்தில் வாழ்பவர்களின் ஒரே வேலை இறைவனை முக முகமாய் தரிசிப்பதும்,

 அவரை அன்பு செய்வதும், 

அவர் அவர்களுக்கு சன்மானமாக அளிக்கிற பேரின்ப நிலையில் வாழ்வதும் மட்டும் தான்.

உலகம் முடியும் முன் மோட்சத்தில் வாழ்பவர்கள் உலகத்தில் வாழ்பவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுவார்கள்.

உலகம் முடிந்த பின் யாருக்காகவும் பரிந்து பேச வேண்டிய அவசியம் இருக்காது. 

ஏனெனில் நல்லவர்கள் எல்லோரும் மோட்சத்தில் இருப்பார்கள்.

கெட்டவர்கள் எல்லோரும் நரகத்தில் இருப்பார்கள்.

நரகத்தில் உள்ளவர்கள் இறைவனை காண முடியாமையால் ஏற்படும் வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

மோட்சத்தில் உள்ளவர்கள் இறைவனை தரிசிப்பதால் ஏற்படும் பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

இறைவனை நேசிப்பதும், அவரது புகழைப் பாடிக் கொண்டிருப்பதும் மட்டுமே அவர்களது வேலை.

மோட்சத்தில் நாம் அனுபவிக்கப் போகும் பேரின்பத்தை நினைத்துப் பார்த்தால் இவ்வுலகில் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் துன்பங்களாகவே தெரியாது.

இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட துன்பங்கள் அனைத்தும் நித்திய பேரின்பமாக மாறும்.

எப்படி இயேசு பாடுகள் பட்டு, சிலுவையில் மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தாரோ,

அவ்வாறே துன்பங்களை அனுபவித்து கொண்டு வாழும் நாம் மரித்து உலக முடிவில் இறைவனின் அருளால் உயிர்த்தெழுவோம். 

இவ்வுலகில் நமக்கு துன்பங்கள் வரும்போது அவற்றிலிருந்து விடுதலை பெற ஆசைப்படுவதற்குப் பதிலாக 

அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக கடவுளிடம் ஒப்புக்கொடுத்தால் 

அவை நித்திய பேரின்பமாக மாறும்.

இவ்வுலகில் வாழும்போது நமது சிலுவைகளை மகிழ்ச்சியோடு சுமப்போம்.

மரித்தபின் எப்படி இயேசு உயிர்த்தாரோ,

அதேபோல நாமும் அவர் அருளால் ஒருநாள் உயிர்ப்போம்.

இயேசு நம்மை உயிர்ப்பிப்பார்.

அவரோடு நித்திய பேரின்பத்தில் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment