Thursday, January 5, 2023

திருச்சபை கட்டளை.

     திருச்சபை கட்டளை.

"தாத்தா, "வருடத்துக்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது."..

 என்று திருச்சபை கட்டளை கொடுத்திருக்கிறது.

பாவமே செய்யாவிட்டால் ஏன் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்?"

"'இப்போ நான் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லு.

இயேசு பிறந்த நாற்பதாம் நாள் எதற்காக திருக்குடும்பம் கோவிலுக்குச் சென்றது?"

"யூத சமய சட்டப்படி குழந்தை பிறந்த 40 வது நாள் தாய் சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.

முதல் ஆண் குழந்தையை கோவிலுக்கு எடுத்துச் சென்று கடவுளுக்கு ஒப்பு கொடுத்துவிட்டு,

ஒரு ஆட்டுக்குட்டியையாவது இரண்டு புறாக்களையாவது  கொடுத்துவிட்டு குழந்தையை மீட்டு வர வேண்டும்.

அதற்காக அன்னை மரியாளும் சூசையப்பரும் குழந்தை இயேசுவை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றார்கள்."

"'அன்னை மரியாளுக்கு சுத்திகரிப்பு அவசியமா?"

"இல்லை. அவளது கன்னிமைக்கு பழுது ஏற்படாமல் இயேசு பிறந்தார். ஆகவே தீட்டு எதுவும் படவில்லை. ஆகவே சுத்திகரிப்பும் அவசியம் இல்லை."

"'பிறகு ஏன் சுத்திகரிப்புக்காக கோவிலுக்குச் சென்றாள்?"

" சமய சட்டத்திற்கு கீழ்ப் படிவதற்காக"

"' குழந்தை இயேசு யார்?"

"கடவுள்."

"' மரியாள் கடவுளையே அவருக்கே ஒப்புக் கொடுக்க வேண்டுமா?"

"தேவை இல்லை. ஏனெனில், அவரே கடவுள்."

"'பிறகு ஏன் மரியாள் குழந்தை இயேசுவை கோவிலுக்கு எடுத்துச் சென்று காணிக்கையாக ஒப்பு கொடுத்துவிட்டு 

இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளைப் பலியாகக் கொடுத்து மீட்டாள்?"

"சட்டத்துக்கு மதிப்பு கொடுத்து"

"' அவசியம் இல்லாவிட்டாலும் கூட சட்டத்திற்கு மதிப்பு கொடுத்து 
திருக்குடும்பம் இவற்றை செய்தது.

இயேசுவிடம் பாவம் இருந்ததா?"

"இயேசு கடவுள். அவரால் பாவம் செய்ய முடியாது."

"' பிறகு ஏன் அவர் ஸ்நாபக அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெற்றார்?"

"அருளப்பர் அவரைத் தடுத்த போது .

இயேசு. இவ்வாறு நாம் நியமங்களெல்லாம்
 நிறைவேற்றுவது தகுதியே."
என்று பதிலளித்தார்.

அவசியம் இல்லாவிட்டாலும் நியமங்களை நிறைவேற்றுவதற்காக (to fulfill all justice.) ஞானஸ்நானம் பெற்றார். 

'பாவமே செய்ய முடியாத அவர் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக  தன்னையே சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தாரே.

நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்வதற்காகவே மனிதனாகப் பிறந்தார்.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக பாடுகளையும், மரணத்தையும் ஏற்றுக்கொண்டது போலவே,

அந்தப் பணியை ஆரம்பிக்கும்போது, அதே நோக்கத்தோடு ஞானஸ்நானத்தையும் ஏற்றுக் கொண்டார்."

"'அதாவது எல்லாம் நமக்காக ஏற்றுக் கொண்டார்.

இப்போ கவனி.

மரியாளுக்கு சுத்திகரிப்பு தேவை இல்லாவிட்டாலும் சட்டத்திற்கு மதிப்பு கொடுத்து சுத்திகரிப்பை ஏற்றுக் கொண்டாள்.

 தான் கடவுளாக இருந்தாலும் சட்டத்திற்கு மதிப்பு கொடுத்து கோவிலில் தன்னை காணிக்கையாக ஒப்புக் கொடுப்பதை இயேசு ஏற்றுக்கொண்டார்.

தன்னிடம் பாவம் துளி கூட இல்லாவிட்டாலும் நமது பாவங்களுக்காக தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்து பரிகாரம் செய்தார்.

நீ "பாவமே செய்யாவிட்டால் ஏன் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்?".என்கிறாய்.

மனிதர்களில் அன்னை மரியாளைத் தவிர பாவமே செய்யாதவர்கள் யாருமே இல்லை.

"நான் பாவம் எதுவும் செய்யவில்லை" என்று சொல்பவன் ஒரு முழுப் பொய்யன்.

பாவ சங்கீர்த்தனத்தில் சொல்ல ஒரு அற்ப பாவம் கூடவா நம்மிடம் இருக்காது?

தினமும் காலையில் குளிக்கிறாயே, ஏன்?

இரவில் ஒரு வேலைக்கும் போகாதிருக்கும்போது உடம்பில் தூசி ஒட்ட வாய்ப்பில்லை.

வியர்வை கூடவா இருக்காது?

தினமும் காலையில் குளிக்க வேண்டும் என்ற சுகாதார விதிக்கு கட்டுப்பட்டு குளிக்கும் உன்னால்,

திருச்சபையின் கட்டளைக்கு கட்டுப்பட்டு பாவசங்கீர்த்தனம் செய்ய முடியாதா?

அழுக்கு இல்லாத போதும் வியர்வைக்காக மட்டும் குளிக்கும் போது உற்சாகம் பிறப்பது போல,

ஒரு அற்ப பாவத்திற்காக நீ பாவ சங்கீர்த்தனம் செய்தால் அதற்குரிய அருள் வரங்கள் உனக்கு நிறைய கிடைக்கும்."

",புரிகிறது, தாத்தா.

 பாவ மன்னிப்புக்காக மட்டுமல்ல, 

கிடைக்கும் அருள் வரங்களுக்காகவும் நான் பாவ சங்கீர்த்தனம் செய்வேன்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment