Tuesday, January 3, 2023

"இறைவனுக்கு ஏற்புடையதைச் செய்யாதவனும், தன் சகோதரனுக்கு அன்பு செய்யாதவனும் கடவுளிடமிருந்து வந்தவன் அல்லன்."(1 அரு.3:10)

."இறைவனுக்கு ஏற்புடையதைச் செய்யாதவனும், தன் சகோதரனுக்கு அன்பு செய்யாதவனும் கடவுளிடமிருந்து வந்தவன் அல்லன்."(1 அரு.3:10)

"தாத்தா, ஒவ்வொரு நாளும் நாம் இறைவனை நோக்கி,

" விண்ணகத்தில் உள்ள எங்கள் தந்தையே"

 என்று அழைக்கிறோம்.

பள்ளிக்கூடத்தில் படிப்பவர்களில் சிலர் உண்மையிலேயே மாணவர்களாக இருப்பார்கள்.

சிலர் பெயரளவிற்கு  மாணவர்களாக இருப்பார்கள்.

யார் எவ்வகையினர் என்பதை தேர்வில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்களை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

இறைவனை உண்மையிலேயே தந்தையாக ஏற்றுக் கொள்பவர்கள் யார்,

பெயரளவிற்கு தந்தையாக ஏற்றுக் கொள்பவர்கள் யார் என்பதை எப்படி தெரிந்து கொள்வது?"

"'யார் தெரிந்து கொள்வது? மற்றவர்களா?"

"மற்றவர்கள் இல்லை, தாத்தா.
சம்பந்தப்பட்டவர்களே சுய பரிசோதனையின் போது தங்களை தாங்களே எப்படி தெரிந்து கொள்வது?"


"'தங்களது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும்  இறையன்பும் பிறர் அன்பும் இருக்கிறதா என்பதை பரிசோதித்து பார்க்க வேண்டும்.

இறையன்பு இருந்தால் அவர் தந்த கட்டளைகளையும்,
 தாய்த்திருச்சபையின் கட்டளைகளையும் மனமாற ஏற்றுக் கொண்டு அவற்றின்படி வாழ்வார்கள். 

கட்டளைகளை அனுசரியாதவர்கள் இறைவனைப் பார்த்து

 "தந்தையே"  என்று அழைப்பது  பெயரளவிற்காகத் தான் இருக்கும்.

உனது தாய் தந்தையை நேசித்து, மதித்து, அவர்கள் சொற்படி நட 

என்பது இறைவன் கொடுத்த கட்டளை.

பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு 

சுய சம்பாத்தியத்தில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பவன் 

இறைவனை நோக்கி "தந்தையே" என்று அழைத்தால் அதற்கு அவர் செவி மடுக்க மாட்டார்.

"உனது அயலானை நேசி" 

என்பது இறைவன் கொடுத்த கட்டளை.

தன்னை நேசிப்பது போல தன் அயலானை நேசிக்காதவன்

இறைவனைத்   "தந்தையே" என்று அழைக்க தகுதியற்றவன்."


"அப்படியானால், தாத்தா, குடும்பத்தில் சமாதானமாக இல்லாதவன்

அன்னை மரியாளை நோக்கி செபமாலை சொல்லக்கூடாதா?"

"'செபமாலை சொல்லும்போது ஒவ்வொரு கர்த்தர் கற்பித்த செபத்திலும் 

இறைவனை நோக்கி

" விண்ணகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே"

 என்று சொல்லுகிறோம்.

சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் 

பெற்றோருடனும், சகோதர சகோதரிகளுடனும் சமாதானமாக வாழ்பவர்கள் தான்

 ஜெபமாலை சொல்ல தகுதி உள்ளவர்கள்."

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அன்னை மரியாள் நம்மை செபமாலை சொல்லச் சொன்னதே உலகத்தில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக தான் என்று நினைக்கிறேன்."

"'நினைக்கிறேன் என்ன, உண்மையும் அதுதானே.

குடும்பங்களிலும் உலகத்திலும் சமாதானம் நிலவ வேண்டும் என்பதற்காகவே 

நம்மை செபமாலை சொல்லும்படி அன்னை தன்னுடைய பாத்திமா காட்சியில்  கூறினாள்.


Our Lady herself, most especially in her appearance at Fatima, but also in other apparitions, has begged us to pray the rosary daily. 

She said that it was essential to bring peace to our families and to our world, and she asked us to pray the rosary to bring an end to war."


"கர்த்தர் கற்பித்த செபத்தைத் தினமும் சொல் என்பதற்கும்,

இறைவனின் கட்டளைகளின் படி வாழ்"

என்பதற்கும் ஒரே பொருள் தான் என்று நினைக்கிறேன்.

எனவே இறைவனின் கட்டளைகளின் படி வாழ்பவன் தான் இறைவனை நோக்கி,

"விண்ணகத்திலுள்ள எங்கள் தந்தையே"

என்று அழைத்து செபிக்க முடியும்."

"'இறைவனையும், அயனையும் நேசித்து இறைவனது கட்டளைப்படி நடக்கின்றவர்கள் மட்டுமே இறைவனது பிள்ளைகள்."

"நடக்காதவர்கள்?"

"'சாத்தானின் பிள்ளைகள்."
என்று நான் சொல்லவில்லை,

புனித அருளப்பர் தனது திருமுகத்தில் கூறுகிறார்.


"இறைவனுக்கு ஏற்புடையதைச் செய்யாதவனும், 

தன் சகோதரனுக்கு அன்பு செய்யாதவனும்

 கடவுளிடமிருந்து வந்தவன் அல்லன். 

இதனின்று, 

கடவுளின் மக்கள் யாரென்றும்.

 அலகையின் மக்கள் யாரென்றும் புலப்படும்."   "(1 அரு.3:10)

"அப்படியானால் இறைவனது மக்களுடன் கலந்து சாத்தானின் மக்களும் வாழ்கின்றார்களோ?

நாம் அவர்களையும் நேசிக்க வேண்டுமோ?"

"'கடவுளை நேசித்து, அவரது கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடப்பவர்களும்,

கடவுளின் கட்டளைப் படி நடக்காதவர்களும்

ஒரே உலகில் தான் வாழ்கிறார்கள்.

நாம் எல்லோரையும் தான் நேசிக்க வேண்டும்.

சாத்தானின் மக்களையும் நாம் நேசித்தால் தான் அவர்களை மனம் திருப்பி கடவுளின் மக்களாக மாற்ற முடியும்.

இயேசுவே பாவிகளை தேடி தானே உலகிற்கு வந்தார்.

நாம் அவருடைய சீடர்கள்.

யாருக்கு உதவி தேவை, நோய் அற்றவனுக்கா? நோய் உள்ளவனுக்கா?"

"நோய் உள்ளவனுக்கே உதவி தேவை."

"'யாருக்கு நமது உதவி அதிகம் தேவை?

 கடவுளின் பிள்ளைகளுக்கா? சாத்தானின் பிள்ளைகளுக்கா?

அதாவது,

நாம் யார் மத்தியில் அதிக உழைக்க வேண்டும்,

கடவுளின் கட்டளை படி நடக்கின்றவர்கள் மத்தியிலா,

கடவுளுக்கு எதிராக நடக்கிறவர்கள் மத்தியிலா?"

''கடவுளுக்கு எதிராக நடக்கிறவர்கள் மத்தியில்தான் நமது உழைப்பு அதிகம் தேவை."

"'கடவுளை நேசிப்பவர்களை நாம் நேசித்து அவர்களோடு பழகுவது எளிது.

கடவுளைப் பற்றி கவலைப்படாதவர்கள் மத்தியில் தான் நாம் அதிகம் உழைத்து அவர்களை மனந்திருப்ப முயல வேண்டும்.

இது கடினம் தான்.

ஆனால் அது நமது கடமை.

நோய் இல்லாதவனுக்கு டானிக் கொடுப்பதை விட நோய் உள்ளவனுக்கு மருந்து கொடுப்பது சிறந்தது.

நமது இறைப்பணியின்போது இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்."

"உண்மைதான், தாத்தா.

"உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்" 

என்று நமது ஆண்டவர் சொன்னபோது,

நற்செய்தியை அறியாதவர்களுக்கு அறிவிக்க சொன்னார்.

நாம் இப்போது ஏற்கனவே நற்செய்தியை அறிந்தவர்களுக்கு மட்டுமே அறிவித்துக் கொண்டிருக்கிறோம்.

புனித தோமையார், புனித சவேரியார், புனித அருளானந்தர், வீரமாமுனிவர் போன்ற அயல்நாட்டு நற்செய்தி அறிவிப்பாளர்கள் 

மனம் திருப்பிய கிறிஸ்தவர்களின் வழி வந்தவர்களைப் பாதுகாப்பதற்கே நாம் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறோம். 

புதிதாக எத்தனை பேரை மனம் திருப்பியிருக்கிறோம் என்பதை கணக்குப் பார்த்தால் 

 நற்செய்தியை அறியாதவர்களிடையே எவ்வளவு தூரம் உழைத்திருக்கிறோம் என்பது தெரியும்."

"ஆனால், தாத்தா,
அறியாதவர்களுக்கு அறிவித்தால் நாம் நாம் மதமாற்றம் செய்கிறோம் என்று அரசு குற்றம் சாட்டுகிறதே."

"'அப்போஸ்தலர்கள் முதல்  முதல் நற்செய்தி அறிவித்தபோது அன்றைய அரசு அப்படித்தான் குற்றம் சாட்டியது.

குற்றம் சாட்டியது மட்டுமல்ல அவர்கள் வேத சாட்சிகளாக மரிக்கும் அளவுக்கு அவர்களை கொடுமைப்படுத்தியது.

அவர்கள் சிந்திய ரத்தத்தினால் தான் திருச்சபை வளர்ந்தது.

இந்தியாவில் திருச்சபை வளராததற்கு காரணம் புரிகிறதா?"

"இறைவனை தந்தையே என்று அழைக்க ஆசை இருந்தால் அவருக்காக உயிரைக் கொடுக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்பது புரிகிறது."

"'இன்றைய நிலவரங்களை வைத்துப் பார்க்கும் போது நிச்சயமாக இந்தியாவில் கிறிஸ்தவத்துக்கு ஒளிமயமான எதிர்காலம்  இருக்கிறது."

"புரியவில்லை. என்ன இன்றைய நிலவரங்கள்?"

"'வேதசாட்சிகளின் இரத்தத்தில் தான் திருச்சபை வேகமாக வளரும்.
இப்போது புரிகிறதா?"

"நன்றாகவே புரிகிறது. வேத சாட்சிகள் ஆக தயாராக இருப்போம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment