(மத். 5:34)
பரிசேயர்கள் தாங்கள்தான் திருச் சட்டப்படி நடப்பதாகவும், ஆகவே தாங்கள் பரிசுத்தவான்கள் என்று எண்ணிக் கொண்டதோடு,
வரி தண்டுவர்களையும், படிக்காத சாதாரண மக்களையும் பாவிகள் என்று கருதினார்கள்.
அவர்கள் கருத்துப்படி இயேசுவும் ஒரு பாவி, ஏனென்றால் அவர் பாவிகளோடு பழகுகிறார், அவர்கள் வீட்டில் சாப்பிடுகிறார்.
இயேசு பாவிகளைத் தேடி வந்த கடவுள் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரை கடவுளுக்கு எதிராக பேசுபவராகவே கருதினர்.
பேய்பிடித்த ஒரு ஊமையன் ஒருவனிடமிருந்து அவர்
பேயை ஓட்ட, ஊமையன் பேசினான். மக்கட்கூட்டம் வியப்புற்று, "இப்படி ஒருகாலும் இஸ்ராயேலில் கண்டதில்லை" என்றது.
இயேசு செய்த புதுமையை புதுமை இல்லை என்று பரிசேயரகளால் கூற முடியாது.
ஆனால் , "இவன் பேய்களின் தலைவனைக்கொண்டே பேய்களை ஓட்டுகிறான்" என்று கூறினார்கள்.
மூவுலகையும் படைத்த கடவுளை பேய்களின் தலைவனின் வேலையாள் என்று கூறும் அளவுக்கு அவர்களுடைய தரம் தாழ்ந்து விட்டது.
எந்த அரசனாவது தனக்கு எதிராக செயல் புரிவானா?
இயேசு இறையரசை உலகில் நிருவ நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருந்தார்.
அதற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தான் சாத்தான்
அவன் தான் அனுப்பிய
பேயையே விரட்ட யாருக்காவது உதவி செய்வானா?
இயேசு பேய்களின் தலைவனின் ஆளாக இருந்தால் எப்படி தன் தலைவனுக்கு எதிராக செயல்படுவார்? என்று சிந்திக்கக் கூட பரிசேயரால் முடியவில்லை.
இப்படி சிந்திக்கத் தெரியாமல் சிந்திப்பதால் பாதிக்க பட போகின்றவர்கள் சிந்திப்பவர்கள் மட்டுமே, இயேசு அல்ல.
இயேசு எப்போதும் மனுக் குலத்தை மீட்க மனித உரு எடுத்த இறைமகன்தான்.
இன்று கூட பரிசேயத்தனமாக சிந்திக்கக் கூடிய மக்கள் நம்மிடையே இருக்கிறார்கள்.
நமது பிரிவினை சகோதார்கள்.
கையில் பைபிள் ஒன்றை வைத்துக் கொண்டு,
தாங்கள்தான் பைபிள்படியும், இயேசுவின் போதனைப்படியும் வாழ்வதாகக் கூறிக் கொண்டு,
இயேசு நிறுவிய கத்தோலிக்கத் திருச்சபையை சிலை வழிபாட்டுக் காரர்களின் கூட்டம் எனக் கூறிக் கொண்டு,
கத்தோலிக்கத் திருச்சபையின்
(அதாவது இயேசுவின்) போதனையையும், அதன் வழிபாட்டு முறைகளையும்
குறை சொல்பிக் கொண்டே திரியும் இவர்களை,
இயேசுவைக் குறை சொல்வதையே தொழிலாகக் கொண்டிருந்த பரிசேயர்களுடன் ஒப்பிடுவதில் என்ன தவறு?
அவர்கள் திருச்சட்டம் பற்றியே பேசியது போல,
இவர்கள் பைபிள் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.
அவர்கள் திருச்சட்டத்தின் எழுத்துப்படி (letter) மட்டுமே நடந்தார்கள், கருத்துப்படி (spirit) அல்ல.
இவர்கள் பைபிள் எழுத்துக்களுக்கு தங்கள் விருப்பம் போல் பொருள் கொடுத்துக் கொண்டு, அப்படியே வாழ்கின்றார்கள்.
பைபிளின் கருத்துகளை ஏற்றுக் கொள்ளவேயில்லை.
ஏற்றுக் கொண்டிருந்தால் இராயப்பரைத் திருச்சபையின் தலைவராக ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்கள்,
கத்தோலிக்க குருக்களுக்கு ஆண்டவர் அளித்த பாவம் மன்னிப்பு அதிகாரத்தை ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்கள்.
திருப்பலியையும்,
திவ்ய நற்கருணையையும் ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்கள்.
இயேசுவின் அன்னையைத் தங்கள் அன்னையாக ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்கள்.
கத்தோலிக்க திருச்சபையை ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்கள்.
இவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ளாதவர்கள் நம்மைப் பற்றி கூறும் கருத்துக்களை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இயேசுவின் சொற்படி நடப்பதும், அவரைத். திருப்திப்படுத்துவது மட்டுமே நமது பணி.
ஒருவன் இரண்டு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது.
இறைவன் மட்டுமே நமது தலைவர்.
அவருக்கு மட்டுமே ஊழியம் செய்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment