Wednesday, July 6, 2022

"இலவசமாய்ப் பெற்றுக்கொண்டீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்."(மத்.10:8)

"இலவசமாய்ப் பெற்றுக்கொண்டீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்."
(மத்.10:8)

இயேசு 12 அப்போஸ்தலர்களை போதிக்க அனுப்பும்போது

நோய் பிணியெல்லாம் குணப்படுத்தவும்,

 இறந்தோரை உயிர்ப்பிக்கவும் 

, தொழுநோயுற்றோரைச் சுகமாக்கவும் , 

பேய்களை ஓட்டவும்: 
அதிகாரம் அளித்ததோடு

''இலவசமாய்ப் பெற்றுக்கொண்டீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்"

என்று உத்தரவும் போட்டார்.

இறைவன் நமக்குத் தருபவை வரங்கள்.

நமது உடல், ஆன்மா உட்பட கடவுள் நமக்குத் தந்திருப்பவை அனைத்தும் நமக்கு இலவசமாய்த் தரப்பட்டவை.

கடவுள் ஒரு வியாபாரி அல்ல. அவர் நம்மை வியாபாரிகளாகப் படைக்கவில்லை.

கடவுள் தனது அன்பினால்தான் நம்மைப் படைத்தார்.

தனது அன்பினால்தான் நம்மோடு தனது பண்புகளைப் பகிர்ந்து கொண்டார்.

தனது அன்பினால்தான் தன்னால் படைக்கப்பட்ட உலகை நமது பயன்பாட்டுக்காக இலவசமாய்த் தந்தார்.

நமக்குள் அன்பு இருந்தால் நமக்கு இலவசமாய் கிடைத்தவற்றைத் தேவைப் படுவோராடு இலவசமாய்ப் பகிர்ந்து கொள்வோம்.

நம்மிடம் உள்ளதை இல்லாதவர்களோடு இலவசமாக பகிர்ந்து கொள்வோம்.

அவர்கள் நம்மிடம் இல்லாததை இலவசமாக பகிர்ந்து கொள்வார்கள்.

அன்பு இருக்கும் இடத்தில் இந்த இலவச பகிர்வு இருக்கும்.

அன்பு இல்லாத இடத்தில் இலவச பகிர்வு கொடுக்கல் வாங்கலாக மாறி,

கொடுக்கல் வாங்கல் வியாபாரமாக மாறி விடுகிறது.

வியாபாரத்தின் மையம் இலாபம், அன்பு அல்ல.

ஆன்மீகத்தில் வியாபாரத்திற்கு இடமில்லை.

ஆன்மீகத்தின் மையம் அன்பு.

ஆகவேதான் அன்பே உருவான இயேசு இலவசமாக பெற்றுக் கொண்டீர்கள் இலவசமாக கொடுங்கள் என்கிறார்.

அப்போஸ்லர்கள் தாங்கள் இயேசுவிடமிருந்து பெற்ற வரங்களாகிய 

நோய் பிணிகளைக் குணப்படுத்துதல், ,

 இறந்தோரை உயிர்ப்பித்தல், 

, தொழுநோயுற்றோரைச் சுகமாக்குதல், 

பேய்களை ஓட்டுதல்

ஆகியவற்றை  இலவசமாகவே பயன்படுத்த வேண்டும்.

இவ்வரங்களால் பயன்பெற்ற 
நபர்களிடமிருந்து எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்க கூடாது.

பயன்பெற்றவர்கள் ஆன்மீக ரீதியாகப் பயன் அடைந்திருக்க வேண்டும்.

இயேசுவின் புதுமைகளால் சுகம் அடைந்தவர்கள் விசுவாசம், பாவ மன்னிப்பு ஆகிய வரங்களைப் பெற்றார்கள்.

அதேபோல் அப்போஸ்தலர்களால் சுகம் வருபவர்கள் ஆன்மீக ரீதியாக பயன் பெற வேண்டும்.

வேறு எந்தவிதமான பதில் உதவியும் அப்போஸ்தலர்கள் எதிர்பார்க்கக் கூடாது.

இயேசு அப்போஸ்தலர்களுக்குக் கூறிய புத்திமதி நமக்கும் பொருந்தும்.

நம்மிடம் புதுமைகள் செய்யும் வரம் எதுவும் இல்லாமலிருக்கலாம்.

ஆனால் நாமும் மற்றவர்களுக்கு ஆன்மீக ரீதியாக நமது செபத்தினால் உதவிகள் செய்யலாம்.

அதற்கு உலக ரீதியான பதில் உதவி எதையும் எதிர்பார்க்கக் கூடாது.

ஆன்மீகத்தில் நாம் செய்யும் பிறர் அன்பு பணிகளுக்கான சன்மானம் விண்ணகத்தில் தான் இறைவனால் தரப்படும்.

பூவுலகில் அதை யாரிடமிருந்தும் எதிர்பார்க்கக் கூடாது.

யாராவது அன்பின் அடிப்படையில் நமக்கு தேவையான ஒன்றை நம்முடன் பகிர்ந்து கொண்டால் 

அது அன்பின் அடிப்படையில் தரப்படுவதால் அன்பின் அடிப்படையில் மட்டுமே அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எப்படி ஒருவர் பசியாக இருக்கும்
 போது அவருக்கு நாம் உணவு கொடுத்தால் அது இயேசுவுக்கு கொடுக்கப்படுகிறதோ,

அதேபோல நமக்கு பசிக்கும் போது இன்னொருவர் உணவு தந்தால் அதுவும் இயேசுவுக்கே கொடுக்கப்படுகிறது.

இந்த பகிர்வு முழுக்க முழுக்க இறை அன்பின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

இறை அன்பினால் உந்தப்பட்டு நாம் எதை செய்தாலும் அதை இறைவனுக்கே செய்கிறோம்.

இறைவனுக்காக செய்யப்படும் எந்த நற்செயலுக்கும் இந்த உலகை சார்ந்த சன்மானம் எதையும் எதிர்பார்க்கக் கூடாது.
 
இறைவனும் அவர் தரும் நித்திய பேரின்ப வாழ்வும் மட்டுமே அதற்குரிய சன்மானம்.

நமக்காக செபிப்பதற்காக நமது இல்லம் தேடி வருபவர்களுக்கு நாம் ஏதாவது காணிக்கை கொடுக்கலாமா?

காணிக்கை கடவுளுக்கு கொடுக்கப்படுவது.

கடவுளுடைய பெயரால் தேவையில் உள்ளோர் யாருக்குக் கொடுத்தாலும் அது காணிக்கைதான்.

கடவுளுடைய பெயரால் கொடுக்கும் போது நமது நோக்கத்தில் தவறு இருக்காது.

நமது நோக்கம்தான் (intention) நமது செயலின் தன்மையைத் தீர்மானிக்கிறது.

செபிக்கிறவர்களும் இறையன்புடன் கூடிய பிறரன்பின் அடிப்படையில் செபிக்க வேண்டும்.

கொடுப்பதும், பெறுவதும் இறைவனுக்கு ஏற்றது, உண்மையான அன்பின் அடிப்படையில் நடைபெறும்போது.

ஆன்மீக நோக்கம் இன்றி பணத்தற்காக மட்டும் இறைவனை அடுத்த காரியங்களைச் செய்வது தவறு.

உண்மையான அன்பின் அடிப்படையில் நாம் செய்யும் எதிலும் தவறு இருக்க முடியாது.

அன்பே உருவான இறைவன் நமக்கு இலவசமாய்த் தந்தவற்றை உண்மையான அன்பின் அடிப்படையில் இலவசமாகவே பகிர்ந்து கொள்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment