Friday, June 24, 2022

"நல்ல மரமெல்லாம் நல்ல பழம் கொடுக்கும்: தீய மரமோ தீய பழம் கொடுக்கும்:" (மத். 7:17)

"நல்ல மரமெல்லாம் நல்ல பழம் கொடுக்கும்: தீய மரமோ தீய பழம் கொடுக்கும்:" (மத். 7:17)

", பேரப்புள்ள, உனது சிந்தனைக்கு ஒரு கேள்வி.

ஆன்மீகம் பற்றி மட்டுமே பேசும் ஆண்டவர், மரங்களைப் பற்றியும், பழங்களைப் பற்றி பேசக் காரணம் என்ன?

அவை ஆன்மீகப் பொருட்களா?"

"தாத்தா, நமக்கு தெரியாத விஷயங்களை புரிய வைப்பதற்காக தெரிந்த விஷயங்களை ஒப்புமையாக கூறுவது ஆண்டவரது வழக்கம்.

"போலித் தீர்க்கதரிசிகள்மட்டில் எச்சரிக்கையாயிருங்கள் என்று கூறிய ஆண்டவர்

போதிக்க வருபவர்கள் நல்லவர்களா, போலிகளா என்று எப்படிக் கண்டுபிடிப்பது என்பதை விளங்க வைக்க இந்த. ஒப்புமையைக் கூறுகிறார்.

ஒரு மரம் நல்லதா, மோசமானதா என்பதை அது தரும் பழங்களிலிருந்து கண்டு பிடிக்க முடியும்.


அதே போதிப்பவர்களின் போதனையிலிருந்தும், சாதனையிலிருக்கும் அவர்கள் அசலா, போலியா என்பதைக் கண்டு கொள்ளலாம்.

ஆண்டவர் போலிப் போதகர்களை
ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு நம்மிடம் வரும் ஓநாய்களுக்கு ஒப்பிடுகிறார்.

இயேசுவின் தோலைப் போர்த்திக்
கொண்டு வருபவர்கள் எல்லாம் உண்மையான இயேசுவைத் தருபவர்கள் அல்ல. 

இயேசுவை இயேசுவாக ஏற்றுக் கொண்டு வாழ்பவர்கள் தான் உண்மையான இயேசுவை நமக்கு தர முடியும்.   

அவர்கள் (போலி போதகர்கள்) வைத்திருப்பது பைபிளே அல்ல. பைபிள் என்ற பெயரில் வைத்திருக்கும் ஒரு புத்தகம்.

கத்தோலிக்க திருச்சபையிடம் இருப்பது தான் உண்மையான பைபிள்"

",இயேசுவின் தோலைப் போர்த்திக்
கொண்டு வருபவர்கள் என்று சொன்னாயே. அதை விளக்க முடியுமா?"

"அதை நீங்கள் நீங்கள்தான் விளக்க வேண்டும்."

", மனுவுரு எடுத்த இறைமகன் இயேசு

மனுக்குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்து, மன்னிப்பதற்காக தன்னையே சிலுவையில் பலியாக்கினார்.

பலிப் பொருளாகிய தன்னை மனிதர்களுக்கு உணவாகத் தருவதற்காக திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

அப்பத்தையும், இரசத்தையும் தனது உடலாகவும், இரத்தமாகவும் மாற்றி உலகம் முடியும் மட்டும் வாழும் மக்களுக்கு உணவாக அளிப்பதற்காக குருத்துவத்தை ஏற்படுத்தினார்.

இதைத்தான் நமது குருக்கள் தினமும் திருப்பலியின்போது செய்து வருகிறார்கள்.

 திவ்விய நற்கருணை மூலமாக இயேசு நம்மோடு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இயேசு குருக்களுக்கு மக்களின் பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தைக் கொடுத்தார்.

(பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

23 எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்:)

பகிர ஆசித்த தன்னுடைய  அதிகாரங்களைப் பதிர்ந்து கொண்ட மறு இயேசுகளாகிய அப்போஸ்தலர்களைத்தான் இயேசு தனது நற்செயதியைப் போதிக்க உலகெங்கும் அனுப்பினார்

"விண்ணிலும் மண்ணிலும் எல்லா அதிகாரமும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

19 நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து,

20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள். இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."

அவர்களுடைய வாரிசுகள் தான் நமது குருக்கள், மறு இயேசுகள்.

கத்தோலிக்க திருச்சபையின் குருக்கள் மட்டும்தான் ஆண்டவரின் அதிகாரப் பூர்வமான நற்செய்தி அறிவிப்பாளர்கள்.

கத்தோலிக்க திருச்சபைக்கு வெளியே உள்ள, பைபிள் என்ற பெயரில் ஒரு புத்தகத்துடன் உள்ள போதகர்கள்

உண்மையான கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர்கள்.

அவர்களிடம் திவ்ய நற்கருணையோ, குருத்துவமோ, பாவங்களை மன்னிக்கும் அதிகாரமோ இல்லை.

அவர்களிடம் உண்மையான கிறிஸ்து இல்லை.

ஆகவே கிறிஸ்துவின் தோல் மட்டும் போர்த்தியவர்கள்.

ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய்கள்.

போலித் தீர்க்கதரிசிகள்.

அவர்களுடைய போதனையில் திவ்ய நற்கருணையில் வாழும் இயேசு இல்லாததிலிருந்தே இதை நாம் அறிந்து கொள்ளலாம்."

"தாத்தா, அவர்களும் இயேசுவின் பெயரால் தானே வேண்டுகிறார்கள்.''


", அவர்கள் வேண்டும் இயேசு திவ்ய நற்கருணையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இயேசு அல்ல.

தனது குருக்கள் மூலம் மக்களின் பாவங்களை மன்னித்துக் கொண்டிருக்கும் இயேசு அல்ல."

"அவர்கள் பயன்படுத்துவது பைபிள் என்னும் பெயரில் ஒரு புத்தகம் என்று ஏன் சொன்னீர்கள்?"

", இறைவன் தந்திருப்பது ஒரு பைபிள்தான். கத்தோலிக்க திருச்சபைதான் பைபிளை உலகுக்குக் கொடுத்தது.

ஆனால் பிரிவினை சகோதரர்களிடம் இருப்பது அந்த பைபிள் அல்ல.

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

பிரிவினை சகோதரர்கள் நடத்தும் நற்செய்திக் கூட்டங்களுக்குச் சென்று, தங்களது உண்மையான விசுவாசத்தை இழந்து விடக் கூடாது.

நமது குருக்களுக்கு மட்டும்தான்

 பாவமன்னிப்பு அளிக்கவும்,

 திருப்பலி நிறைவேற்றவும்,

 திவ்ய நற்கருணையை நமக்கு ஆன்மீக உணவாக அளிக்கவும்  

அதிகாரம் உண்டு என்பதை மறந்து விடக்கூடாது."

போலித் தீர்க்கத்தரிசிகள் பற்றிக் கூறும்போது ஆண்டவர் சொல்கிறார்:

"இவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடம் வருகிறார்கள்: 

உள்ளுக்கோ பறித்துச் செல்லும் ஓநாய்கள்."

எதற்காக ஆட்டுத் தோலை போர்த்திக் கொண்டு வருகிறார்கள்?

நம்மிடமுள்ள ஆடுகளை களவு செய்துகொண்டு போவதற்காக.

நமது ஜெப கூட்டங்களுக்கு வரும் விசுவாசிகள்

போலித் தீர்க்கத்தரிசிகளின் கவர்ச்சிகரமான அழைப்புகளால் ஈர்க்கப்பட்டு அவர்களுடைய நற்செய்தி கூட்டங்களுக்கும் சென்று 

நமது கத்தோலிக்க விசுவாசத்திற்கு பங்கம் விளைவித்து கொண்டிருக்கிறார்களே!

ஏன் போகின்றீர்கள்?  என்று கேட்டால் அங்கேயும் இயேசுதானே இருக்கிறார் என்று பதில் சொல்லி விடுகிறார்கள்.

 பாவசங்கீர்த்தனம் இல்லாத,

திருப்பலி இல்லாத

திவ்ய நற்கருணை ஆண்டவர் இல்லாத
இடத்தில் நமக்கு என்ன வேலை?

அவர்களுடைய கவர்ச்சியான வார்த்தைகளில் மயங்கி அங்கு சென்று தங்கள்  கத்தோலிக்க விசுவாசத்தை இழந்து விடாதபடி  நம்மவர்களைக் காப்பது நமது கடமை."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment