Monday, June 13, 2022

ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள்.(சங் 33:8)

ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
(சங் 33:8) 

 
"தாத்தா,  நமது மக்களில் சிலர் தங்களுக்குப் பிடியாதது எது நடந்தாலும் கடவுளின் மேல் பழியைப் போடுகிறார்களே,

அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

",என்ன நினைக்க.

கடவுளே இல்லை என்று சொல்லும் பலர் வாழும் இவ்வுலகில் 

கடவுள் இருக்கிறார் என்று நம்புவதோடு 

அவர்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்றும் நம்புவதற்கும் ஆட்கள் இருக்கிறார்களே என்று சந்தோஷப்பட வேண்டியதுதான்."

"தாத்தா, கடவுளின் மேல் பழியைப் போடுகிறார்களே என்று நான் சொன்னதற்கு 

சந்தோஷப்பட வேண்டியதுதான் என்று சொல்லுகிறீர்கள்!

நான் சொன்னதை முழுவதும் கவனிக்கவில்லையா?"

",உன்னுடைய உறவினர்களில் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியும்,

 ஒருவர் சுகம் இல்லாதிருக்கிறார் எந்த செய்தியும் 

ஒரே நேரத்தில் வந்தால்  எதை நினைத்து வருந்துவாய், எதை நினைத்து சந்தோசப் படுவாய்?"

"இறந்தவரை நினைத்து வருந்துவேன், 

சுகமில்லாமல் இருப்பவரை நினைத்து சந்தோசப்படுவேன்."

",இறந்தவரை நினைத்து வருந்துவதில் பொருள் இருக்கிறது.

ஆனால் சுகமில்லாமல் இருப்பவரை நினைத்து ஏன் சந்தோசப்படுவாய்?"

"அவரைக் குணமாக்க வாய்ப்பு இருக்கிறதே!"

", அப்படித்தான் நானும்.

கடவுளே இல்லை என்பவரிடம் கடவுளைப் பற்றியும், அவருடைய நற்செய்தியைப் பற்றியும் பேசினால் அவருக்கு ஒன்றும் புரியாது.

ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதையும்,

 அவரே எல்லாவற்றிற்கும் காரணம் என்பதையும் நம்புபவரிடம் கடவுளின் அன்பைப் பற்றி பேசலாம், அவருக்குப் புரியவும் வைக்கலாம்."

"அவர் தான் தீங்கு என்று எண்ணும்  நிகழ்வுக்கு  காரணம் கடவுளே என்கிறார்.

அவரிடம் கடவுளின் அன்பைப் பற்றி பேசினால் அவருக்குப் புரியுமா?"

", அவர் தான் தீங்கு என்று எண்ணும்  நிகழ்வுக்குக்    காரணம் கடவுளே என்பது உண்மைதானே.

தீங்கு என்று எண்ணுவதுதான் தப்பு. அதைப் புரிய வைத்து விடலாம்."

"அவர் தான் தீங்கு என்று எண்ணும்  நிகழ்வுக்குக்    காரணம் கடவுளே என்பது உண்மையா?"

", ஆமா. கடவுள்தான் எல்லாவற்றுக்கும் ஆதி  காரணர்."

"எல்லாவற்றுக்குமா? பாவத்துக்குமா?"

", ஆமா. பாவம் செய்த மனிதனை அவர்தானே படைத்தார்.

விலக்கப்பட்ட பழ மரத்தையும், மனிதனையும் படைத்திருக்கா விட்டால் பாவமே செய்யப் பட்டிருக்காதே!"

"அவர்தான் ஆதிகாரணர் என்றால் அவர் ஏன் பாவத்தை விரும்பவில்லை?"

", உன்னுடைய அம்மா ருசியான 20 வடைகளைச் சுட்டு,

"மகனே இவை நமது வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு, நீ எடுத்து சாப்பிட்டு விடாதே"

என்று கூறிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்கள்.

வீட்டில் இருந்த நீ எல்லா வடைகளையும் சாப்பிட்டு விட்டாய்.

சாப்பிட்டது தப்பு.

இந்த தப்புக்குக் காரணம் யார்?"

"என்னுடைய அம்மா முதற் காரணம், (Primary cause)

நான் இரண்டாவது காரணம்."
(Secondary cause)

", Suppose, தப்பு செய்பவருக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமென்றால் யாருக்குக் கொடுக்க வேண்டும்?"

"எனக்குதான். நான்தானே தப்புக்குப் பொறுப்பு."

", Correct. பாவமும் அப்படித்தான்.

கடவுள் உலகைப் படைத்தார்.
ஆகவே உலகில் நடப்பவை அனைத்திற்கும் அவர்தான் ஆதிகாரணர்.

நாம் படைக்கப்பட காரணம் கடவுள்.
   
ஆனால் கடவுளுக்குக் காரணர்
கிடையாது. அவர் தானாக இருப்பவர்.

காரணர் இல்லாத காரணர்.

அதனால்தான் அவரை முதல் காரணர்
 என்கிறோம்.
 
நமது ஒவ்வொரு செயலுக்கும்அவர்தான் ஆதி காரணர். 

.ஆனால்  நமது முழுமையான சுதந்திரத்தையும், படைக்கப்பட்ட பொருட்களையும் பயன்படுத்தி நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நாம்தான் பொறுப்பு.

மனிதனைத் தவிர உலகிலுள்ள எந்தப் பொருளாலும் செய்ய முடியாது.

ஏனெனில் அவற்றுக்கு பகுத்தறிவோ, சுதந்திரமோ கிடையாது.

இறைவன் வகுத்த இயற்கை விதிகளின்படி அவை இயங்குகின்றன.

புயல், மழை, வெள்ளம், நில நடுக்கம், சுனாமி போன்ற இயற்கை நிகழ்வுகள் இயற்கை விதிகளுக்குக் கட்டுப் பட்டவை.

மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட  மனித உடலும் இயற்கை விதிகளுக்குக் கட்டுப் பட்டது.

மனித ஆன்மா இறைவனின் கட்டளைகளுக்குக் கட்டுப் பட்டது.

இயற்கை பொருட்களால் இயற்கை விதிகளை மீற முடியாது.

ஆனால் மனித ஆன்மாவுக்கு கடவுள் முழு சுதந்திரம் கொடுத்திருப்பதால் 

அது கடவுளின் கட்டளைகளை அனுசரிக்கவோ, மீறவோ முடியும்.

அனுசரித்து வாழ்வது புண்ணிய வாழ்வு.

 மீறி   வாழ்வது பாவ வாழ்வு.

உலகில் புண்ணிய வாழ்வு வாழும் ஆன்மாவுக்கு இறைவன் நித்திய பேரின்பத்தை  பரிசாக அளிக்கிறார்.

பாவ வாழ்வு வாழும் ஆன்மாவுக்கு அப்பரிசு கிடைக்காது.

பாவம் மட்டும்தான் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.

இயற்கை நிகழ்வுகள் எதுவும் மனிதனுக்கு தீங்கு விளைவிக்காது."

"தாத்தா, பிரச்சனையே இங்கேதான்.

புயல், மழை, வெள்ளம், நில நடுக்கம், சுனாமி போன்ற இயற்கை  நிகழ்வுகள் மனிதனுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை என்று மனிதன் கருதுகிறான்.

சுனாமி வந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் இறந்ததை மனிதர்கள் கண்ணாலேயே பார்த்திருக்கிறார்கள்.

அதே போல் தான் மற்ற இயற்கை நிகழ்வுகளாலும் தீங்கு விளைகின்றது என்று மனிதன் கருதுகிறான்.

புயல் வந்த போது மனிதனால் பயிர் செய்யப்பட்ட வாழை,  தென்னை போன்ற  விவசாயப் பொருட்கள் அழிந்ததையும் மனிதன் பார்த்திருக்கிறான்."

",உனக்கு சுகமில்லை  என்று வைத்துக்கொள்வோம்.

டாக்டரிடம் செல்கிறாய்.

டாக்டர் உன்னைப் பரிசோதித்து பார்த்துவிட்டு உன் கையில் ஒரு ஊசி போடுகிறார்.

ஊசி போடும் போது வலிக்கும்.

அந்த வலி நன்மையா? தீங்கா?"

"நிச்சயமாக நன்மைதான். நான் சுகம் அடைவதற்கு அது இன்றியமையாதது."

", குழந்தைக்கு ஊசி போட்டால் அது என்ன செய்யும்?"

"அழும்."

", ஏன்?"

."சுகம் அடைவதற்கு அது இன்றியமையாதது  என்று குழந்தைக்கு தெரியாது. அதைப் பொறுத்த மட்டில் வலி ஒரு தீங்கு."

",அதே போல் தான் அறியாமை காரணமாகவே மனிதன் நன்மை தரும் நிகழ்வுகளை தீங்கு என்று எண்ணுகிறான்.

மரணம் நன்மையா, தீங்கா?"

"மனிதன்  அது ஒரு தீங்கு என்றுதான் எண்ணுகிறான்.

அதிலிருந்து தப்பிக்கவே கோடிக் கணக்காக செலவழிக்க தயாராக இருக்கிறான்.''

",எது ஊரில் இரண்டு நல்ல நண்பர்கள் இருந்தார்கள்.

ஒருவரையொருவர் மிக அதிகமாக நேசித்தார்கள்.

ஒரு நாள் அவர்களில் ஒருவன் மரணமடைந்து விட்டான்.

அவனுடைய உறவினர்கள் அனைவரும் அவனது உடலை பார்த்து அழுது கொண்டிருந்தார்கள்.

ஆனால் இறந்தவனுடைய நண்பன் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தான்.

திருமண வீட்டில் சுற்றி வருவது போல் துட்டி வீட்டில் மகிழ்ச்சியோடு சுற்றிக் கொண்டிருந்தான்.

இறந்தவனுடைய உறவினர் ஒருவர் அவனைப் பார்த்து,

"உனது நண்பன் மரணம் ஆகிவிட்டான். நீயோ வருத்தப்படாமல் மகிழ்ச்சியோடு இருக்கிறாய். உனக்கு  அவன் மீது உண்மையான அன்பு இல்லையா?"

"உண்மையான அன்பு இருப்பதால்தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

என் நண்பன் இப்போது இறைவனடி சேர்ந்திருப்பதால் அவன் நித்திய பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.

பேரின்பமாக இருக்கும் எனது நண்பனுக்காக நான் மகிழ்ச்சியாக இருப்பது தவறா?

நீங்க அழுவதுதான் புரியாத புதிராக இருக்கிறது."

அவனுடைய பதிலை பார்த்து நீ என்ன சொல்கிறாய்?

மரணம் நன்மையா? தீமையா?"

"ஆன்மீகப் பார்வையில் பார்க்கும்போது அது ஒரு நன்மைதான்.

ஏனென்றால் அதுதான் விண்ணகத்திற்குள்  நுழையும் வாசல்."

",அப்படியானால் விண்ணகத்தின் வாசலை திறந்துவிடும் எந்த நிகழ்வும் நன்மையா? தீமையா?"

"நன்மைதான்.''

",அப்படியானால் மனிதன் ஏன் நன்மை செய்யும் இயற்கை நிகழ்வுகளை தீங்கு என்று எண்ணுகிறான்?"

"அறியாமை காரணமாகத்தான்." 

", அறியாமையைப் போக்குவதுதான் நமது கடமை."

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment