Wednesday, June 8, 2022

"சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்." (மத்.5:9)

"சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்." (மத்.5:9)

",, வா, கொஞ்சம் உட்கார்."

"என்னங்க விசயம்."

", உங்கிட்ட ஒண்ணு கேட்கணும்."

"கேளுங்க."

", தினமும் அதிகாலையில் எழுந்து அனைத்து வீட்டு வேலைகளையும் தனியாகச் செய்கிறாய். நான் உனக்குக் கொஞ்சம் கூட உதவி செய்வதில்லை. உனக்கு என் மேல் கோபமே வருவதில்லை. ஏன்?"

"ஏங்க, எப்போதும் புத்தகமும் கையுமாய் இருக்கீங்க, ஏதாவது எழுதிக்கிட்டு இருக்கீங்க. நான் உங்களுக்கு ஓருதவியும் செய்வதில்லை. உங்களுக்கு என் மேல் கோபமே வருவதில்லை. ஏன்?"

", ஏன்?"

"உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் செய்கிறீர்கள், எனக்குத் தெரிந்ததை நான் செய்கிறேன்.

 இதில் கோபம் வருவதற்கு என்ன இருக்கு?

குடும்ப சமாதானத்துக்கு எல்லோரும் ஒண்ணுபோல இருக்கணுங்கிற அவசியம் இல்லை.

அன்பு இருக்கணும். அன்புதான் உறவுக்கு அடிப்படை.

ஏங்க, நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.

கடவுள் துவக்கமும், முடிவும் இல்லாதவர். நாம் பிறந்து, சாகக் கூடியவர்கள்

கடவுள் சர்வ வல்லவர். நாம் சக்தி அற்றவர்கள்.

கடவுள் பரிசுத்தர். நாம் பாவிகள்.

அவர் முன்னால் நாம்
 ஒன்றுமே இல்லாதவர்கள்.

அவர் நம்மைப் பார்த்துச் சொல்கிறார்:

"என் சமாதானத்தையே உங்களுக்கு அளிக்கிறேன்." என்று.

சர்வ வல்லவராகிய கடவுள் ஒன்றுமே இல்லாத நாம்  அவரோடு சமாதானமாக   இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்,

ஏன்?"

 ",காரணம் அவரிடமுள்ள அளவு கடந்த அன்பு மட்டுமே.

 பாவம் செய்து கடவுளோடு தனக்கு இருந்த சமாதான உறவை முறித்தவன் மனிதன்.

அவன் முறித்த சமாதான உறவை மீண்டும் அவனுக்கு அளிப்பதற்காக மனித உரு எடுத்தார்  அளவு கடந்த அன்புள்ள கடவுள்.

அதற்காக அவர் எவ்வளவு பாடுபட்டார் என்பது நமக்குத் தெரியும்.

சிலுவையில் தன்னையே பலியாக்கும் அளவுக்குப் பாடுபட்டார்.

அவன் செய்த பாவத்துக்கு அவர் பரிகாரம் செய்து 

அதிலிருந்து அவனை மீட்டு,

 அவன் இழந்த சமாதானத்தை மீண்டும் கொடுத்தார். 

மனிதன் பாவ மன்னிப்பு பெற்ற வினாடியே இறைவனோடு சுமூகமான உறவை ஏற்படுத்திக் கொள்கிறான்.

இதற்கெல்லாம் காரணம் இறைவனுடைய அளவு கடந்த அன்பே.

மனிதன் பாவ நிலையை விட்டு வெளியேறும்போதுதான் அவனால் இறைவனை அன்பு செய்ய முடியும்.

இறைவன் எப்போதும் அன்பு செய்கிறார்.

 அன்போடு இருப்பவர்கள்தான் இறைவனுடைய பிள்ளைகள்.

அதனால்தான் இயேசு

"சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்." என்கிறார்."

''சமாதானம் செய்வோர் என்றால் அன்பின் மூலம் சுமூகமான உறவை ஏற்படுத்துகின்றவர்கள்.

அப்படி செய்பவர்கள் சமாதானத்தின் தேவனின் பிள்ளைகள்.

நாம் இறைவனின் பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்றால் 

நாம் சமாதானத்தோடு, அதாவது, நல்ல உறவோடு வாழவேண்டும்.

இன்று உலகில் சமாதானம் இல்லாமல் மக்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு கொண்டிருப்பதற்கு காரணம்

 அவர்களிடையே அன்பு இல்லாமைதான்.''

",சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர்,"

என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

இயேசு, இறைமகன், நமக்கும் இறை தந்தைக்கும் இடையே சமாதானம் செய்து வைத்திருக்கிறார்.

நாமும் அதேபோல யாருக்காவது சமாதானம் செய்து வைத்தால் தானே பேறுபெற்றோர்!

நாம் மட்டும் சமாதானமாக இருந்தால் போதாது,

 மற்றவர்களுக்கும் நமது சமாதானத்தை கொடுக்க வேண்டும்."

"உண்மைதான். நம்மிடம் அன்பு இருந்தாலே நம்மிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வோம்.

முதலில் நாம் சமாதானமாக இருக்க வேண்டும்.

மற்றவர்கள் நாம் சமாதானமாக இருப்பதை பார்த்து நம்மிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

நாம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நாம் சமாதானமாக வாழ்ந்தால் 

நமது முன்மாதிரிகை மூலம் மற்றவர்களுக்கு சமாதானத்தைக் கொடுக்கிறோம்.

அதோடு, நாமே நேரடியாக சென்று சமாதானமாக வாழாதவர்களிடம் 
சமாதானம் செய்து வைக்கலாம்.

Good morning, Praise the Lord என்று வாழ்த்துவது போல,

"கிறிஸ்துவின் சமாதானம் உங்களோடு இருப்பதாக"

என்று வாழ்த்துவது மற்றவர்களிடையே சமாதானத்தை ஏற்படுத்த உதவும்."


",நாடுகளுக்கிடையே போர் மூளக் காரணம் என்ன?"

"அரசியல்வாதிகளிடம் அன்பு இல்லை."

",அரசியல்வாதிகள் மக்களை நேசிப்பதாக கூறுகின்றார்களே!"

"அது மக்களின் ஓட்டுகளைப் பெறுவதற்காக அவர்கள் கூறும் பொய்.

நாட்டுத் தலைவர்கள் மக்களை உண்மையிலேயே நேசித்தால் எதற்காக அணு ஆயுத தயாரிப்பு?

Tiffin ஆக சாப்பிடவா? 

அயல் நாட்டு மக்களும் மக்கள்தான்."

", குடும்பங்களிலே சமாதானம் இல்லாமைக்குக் காரணம்?"

"எங்காக இருந்தாலும் சரி சமாதானம் இல்லாமைக்குக் காரணம் அன்பு இல்லாமைதான்."

",அன்பு எவ்வாறு சமாதானமாக வாழ உதவுகிறது?"

"இருவரிடையே சமாதானம் இல்லாமைக்குக் காரணம் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ள முடியாமை தான்.

ஏற்றுக்கொள்ள முடியாமைக்குக் காரணம் ஒருவர் மற்றவரிடம் உள்ள குறைகளைக் காண்பதுதான்.

குறைகள் இல்லாத மனிதர்களே கிடையாது.

குறைகளே இல்லாதவர்களை மட்டும் ஏற்றுக் கொள்வது என்றால் யாரையும் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அன்பு உள்ளவர்கள் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியவர்களை குறைகளோடும், நிறைகளோடும் ஏற்றுக் கொள்வார்கள்.

அன்பு ஆளைத்தான் பார்க்கும், குறை நிறைகளை அல்ல.

அன்பு தான் நேசிப்பவரை அப்படியே ஏற்றுக் கொள்ளும்.

ஏற்றுக்கொள்வது தான் சமாதானத்துக்கு அடிப்படை."

", உண்மைதான். பொதுவாக பெண்கள் தங்கள் கணவன்மார் வீட்டு வேலைகளில் தங்களுக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

நான் வீட்டு வேலை எதுவும் செய்வதில்லை.

ஆனாலும் இந்தக் குறையோடு என்னை ஏற்றுக் கொண்டிருக்கிறாய்.

இதற்குக் காரணம் என் மேல் உனக்குள்ள அன்பு.

நாம் சமாதானமாக வாழ்கிறோம்."

"நான் அதைக் குறையாகக் காணவில்லை.

உங்களுக்கு வாசிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

எனக்கு வீட்டு வேலையில் ஆர்வம் அதிகம். அவ்வளவுதான்.

ஏங்க, Driver பேருந்தை ஓட்டுகிறான். Conductor ticket கொடுக்கிறான்.

Conductor பேருந்தை ஓட்ட வேண்டுமென்று Driver எதிர்பார்க்கவா செய்கிறான்?"

", கடவுளை நேசித்தால் பாவம் செய்யாமல் அவரோடு சமாதானமாக வாழ்வோம்.

அயலானை நேசித்தால் அவனோடும் சமாதானமாக வாழ்வோம்.

இயேசு நமக்கு கொடுத்த இரண்டு கட்டளைகளையும் அனுசரித்தாலே நம்மிடையே சமாதானம் நிலவும்.

கட்டளைகளை அனுசரிப்போம்,
சமாதானமாக வாழ்வோம்.

மற்றவர்களையும் சமாதானமாக வாழவைப்போம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment