Friday, November 1, 2019

"எளிய மனத்தோர் பேறுபெற்றோர், (Blessed are the poor in spirit,) ஏனெனில், விண்ணரசு அவர்களதே."

 "எளிய மனத்தோர் பேறுபெற்றோர், 
(Blessed are the poor in spirit,) 

ஏனெனில், விண்ணரசு அவர்களதே." 
*****      ******      ******      *****

ஒரு நாள் எனது பொடிப் பேரனைக் கூப்பிட்டேன்.

"என்னத் தாத்தா?"

"காசு வேண்டுமா?"

"எப்படி தாத்தாஎன் மனசில் உள்ளத கரெக்டா கண்டு பிடிச்சீங்க? 

 நானே பண்டம் வாங்க காசு கேட்கணும்னு நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்களே கேட்டு விட்டீர்கள்."

"இங்கே பாரு.  என்னுடைய இரண்டு கைகளிலும் காசு வைத்திருக்கிறேன். 

இரண்டு கைகளையும் காண்பிப்பேன். 

ஏதாவது ஒரு கையில் உள்ளதை மட்டும் நீ எடுக்க வேண்டும். சரியா? "

"சரி,தாத்தா."

ஒரு கையில் இரண்டு கால் ரூபாய் நாணயங்கள். அடுத்த கையில்  ஒரு ரூபாய் நாணயம் ஒன்று. 

இரண்டு கைகளையும்  நீட்டினேன்.

பொடியன் இரண்டு கைகளையும் பார்த்து விட்டு

இரண்டு  கால் ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொண்டான்.

"ஏன் இந்தக் கையில் உள்ளதை எடுக்கல?"

"எனக்குக் கணக்குத் தெரியாதுன்னு நினைச்சீங்களா?   


அந்தக் கையில ஒரு காசுதான் இருக்கு.

எனக்கென்ன பைத்தியமா, இரண்டு காசுகளை விட்டுவிட்டு ஒரு காசை எடுக்கதுக்கு?"

அவன் சின்னப் பையன், தனக்குத் தெரிந்த கணித அறிவைப் பயன் படுத்திக் கொண்டான்.

காசுகளை எண்ணினான்,(Quantity)

அவற்றின் மதிப்பைப் (quality) பற்றி எண்ணவில்லை! 

எனக்கென்ன பைத்தியமா? என்று கேட்டான்.

ஆனால் நாம் பெரியவர்கள்.

 சில சமயங்களில்   உண்மையிலேயே பைத்தியங்களாக நடந்து கொள்கிறோம்!

ஒருவர் M. B. A படித்திருப்பதாக வைத்துக் கொள்வோம்.

ஒரு அலுவலகத்தில் Manager வேலைக்கும் Peon வேலைக்கும் ஆள் எடுக்கிறார்கள்.

நம்ம ஆள் Peon வேலைக்கு  மட்டும் விண்ணப்பிக்கிறார்.

அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


இறையுறவோடு பேரின்பம் நிறைந்த அழியாத விண்ணரசு வேண்டுமா?


அழியக்கூடிய சிற்றின்பம் உள்ள மண்ணரசு போதுமா?

 என்று நம்மிடம் கேட்டால்

Peon வேலை போதும் என்று நினைத்த M. B. A யைப் போல 

மண்ணரசு போதும் என்று சொல்ல மாட்டோம்.

நிச்சயமாக விண்ணரசு வேண்டும் என்று சொல்லுவோம்.

ஆனால் சொன்னால் மட்டும் போதுமா?

நினைப்பிலும், செயலிலும் நிரூபிக்க வேண்டாமா?



விண்ணரசை அடைய என்ன செய்யவேண்டும்? 

"எளிய மனத்தோர் பேறுபெற்றோர், 
(Blessed are the poor in spirit,) 

ஏனெனில், விண்ணரசு அவர்களதே." 

என்று நம் ஆண்டவர் கூறுகிறார்.

'எளியோர்' என்றால் ஏழைகள்.

'எளிய மனத்தோர்' என்றால் மனது அளவில் ஏழைகள்
'poor in spirit'.

அதாவது 'ஏழ்மையில் பற்று உள்ளவர்கள்'

அதாவது 'உலகைச் சார்ந்த பொருட்களில் பற்று இல்லாதவர்கள்'.

இவ்வுலகத்தின் மீது பற்று அற்றவர்கட்கு மட்டுமே

விண்ணகம் உரிமை ஆகும்.

இவ்வுலகில் வாழ்கிறோம்.
இவ்வுலகப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம்.

இவ்வுலகப் பொருட்களை 

மறு உலகை அடைவதற்குக் கருவியாக மட்டும் பயன் படுத்துபவர்களுக்கு 

அவற்றின் மீது பற்று இருக்காது.

மறு உலகத்தின்மீது மட்டுமே பற்று இருக்கும்.

அவர்கள் இவ்வுலகில் வாழ்வதே மறுவுலகிற்காகத்தான்.

அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்தாலும், இவ்வுலகைச் சார்ந்தவர்கள் அல்ல.

They may be in this world, but, not of this world.

சிலரிடம் இவ்வுலகப் பொருட்கள் இருக்காது, 

 ஆனால் இல்லாத பொருள் மீது ஆசை இருக்கும். 

அவர்கள் இவ்வுலகப் பற்று உள்ளவர்கள்.

அவர்கள் இல்லாத பொருளைத் தேடிக் கொண்டிருப்பார்களே தவிர,

மறு உலகின்மீது ஆசை வைக்கமாட்டார்கள்.

சிலரிடம் இவ்வுலக பொருட்கள் ஏராளம் இருக்கும்.

அவற்றின் மீது பற்று இருக்காது.

திடீரென்று எல்லாப் பொருட்களும் காணாமல் போய் விட்டாலும்கூட

 அதற்காக கொஞ்சங்கூட வருத்தப்பட மாட்டார்கள்.

"கடவுள் கொடுத்தார், கடவுள் எடுத்துக் கொண்டார். அவரது நாமம் போற்றப்பெருக" 

என்று கூறி எப்போதும் போல மகிழ்ச்சியாய் இருப்பார்கள்.

இறைவன் தங்களுக்குத் தந்தவை எல்லாம் தங்களுக்காக மட்டுமல்ல,

 அவரது மற்ற பிள்ளைகளுக்கும் சேர்த்துதான் என்பதை உணர்ந்து

தங்களிடம் இருப்பதை பிறர் பணி சேவைக்குப் பயன்படுத்துவார்கள்.

"எங்கள் அன்றாட உணவை இன்று தாரும்" என்றுதான் தந்தையிடம் வேண்ட இயேசு நமக்கு கற்றுத் தந்தார்.

"எங்கள் வாழ்நாள் முழுமைக்கும், எங்கள் சந்ததியாருக்கும் வேண்டியதை எல்லாம் 

இன்றே தந்துவிடும்" என்று வேண்ட கற்றுத் தரவில்லை.

நம்மிடம் 'உண்மையான' விசுவாசம் இருந்தால்  

நமது அன்றாட தேவைகட்குப் போக மீதம் இருப்பதை

 அன்றன்றைக்கு அயலானோடு பகிர்ந்து 
கொள்வோம்.

இறைவன் மீது முழு விசுவாசம் இல்லாததினால்தான்

 நாளைக்கு நமக்கு வேண்டியதை இன்றே 'பதுக்குகின்றோம்'.

உலகின் பார்வையில் இது 'சிறு சேமிப்பு'.

இயேசுவின் பார்வையில் இது விசுவாசமின்மை.

கடுகளவு  விசுவாசம் இருந்தால் ஒரு மரத்தையே வேரோடு பெயர்த்து விடலாம் என்று இயேசு  கூறியிருக்கிறார்.

நம்மிடம் உள்ள விசுவாசத்தோடு ஒரு குண்டூசியைக்கூட அசைக்க முடியவில்லை.

முதலில் நிறைந்த விசுவாசம் வேண்டி செபிப்போம்.

 விசுவாசத்தின் உதவியோடு இவ்வுலகப் பற்றை நீக்கி

 விண்ணுலகப் பற்றினை வளர்ப்போம்.


இயேசு இவ்வுலகையே படைத்தவர்.

ஆனாலும் அதைப் பயன்படுத்த நமக்குத்தானே தந்தார்.

நாமும் நமக்கு உரியவற்றை பிறரோடு பகிர்ந்து கொள்வோம்.

விண்ணரசை உரிமையாக்குவோம்.

விண்ணரசிற்குள் நுழைவதற்காக 

அதன் வாயிலில் காத்துக் கொண்டிருக்கும் 

உத்தரிக்கிற ஆன்மாக்களை

 உள்ளே விட 

விண்ணுலக அரசரிடம் வேண்டுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment