"ஆண்டவருக்குள் என்றும் அகமகிழுங்கள்." (பிலிப்.4:4)
**** **** .**** ****
சாதாரண மனிதன்
1. நினைக்க விரும்பாத,
2.பயப்படுகின்ற,
3.எப்போ, எங்கே, எப்படி நடக்கும் என்று தெரியாத,
4.தவிர்க்கவே முடியாத,
நிகழ்வு
அவனது மரணம்.
அதேசமயத்தில்,
தினமும் நினைத்து தியானிக்க வேண்டிய,
நினைத்து மகிழவேண்டிய,
எப்போ, எங்கே, எப்படி நடந்தாலும் தயாராக இருக்க வேண்டிய,
மகிழ்ச்சியோடு வரவேற்கப்பட. வேண்டிய
நிகழ்வும்
மரணம்தான்.
அதெப்படி ஒரே நிகழ்வு எதிர்மாறான எண்ணங்களை ஏற்படுத்தும்?
ஒரு நாட்காலையில் வகுப்புக்கு வந்தவுடன் மாணவர்களிடம்,
" English test noteஅ எடுங்க."
எடுத்தார்கள்.
"Blackboard ல எழுதப்போகிற Questionsஅ எழுதுங்க.
எழுதிவிட்டு வகுப்பில பெஞ்சுக்கு இரண்டு பேர் உட்காருங்க.
மற்றவங்க வெராண்டாவில வழக்கப்படி
கலக்க உட்காருங்க"
Blackboard ல Questionsஅ எழுத ஆரம்பித்தேன்.
ஒரு பையன் மட்டும் Questionsஅ எழுத ஆரம்பித்தான்.
மற்றவர்கள் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
ஒரு பையன் எழுந்து,
"சார்.. "
"என்னடா?"
"சார், நீங்க Test னு சொல்லவே இல்லையே?"
"சொல்லி ஒரு நிமிடம்கூட ஆகல, அதுக்குள்ள மறந்திட்டியா?"
"சார், நேற்றே சொல்லலிய."
"அதாவது படிக்கல!"
"சார்,ஆமா."
"ஒருவன் சொன்னவுடன் எழுத ஆரம்பிச்சிட்டான!"
"அவன் எப்போதும் ரெடியாய் இருப்பான், சார்.''
"எல்லோரும் எப்போதும் தயாராய் இருக்க வேண்டும்.
எதிர்பாராத நேரத்தில் தேர்வு வரும்"
ஏதோ ஒரு பையன் சொன்னான், "மரணத்தைப் போல!"
Test,
தயாராய் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி,
இல்லாதவர்களுக்கு அதிர்ச்சி
மரணத்தைப் போல.
ஏன் நினைக்க வேண்டும்?
ஒவ்வொரு நாளும் இரவில் தூங்குமுன் கட்டிலில் அமர்ந்து மரணத்தைப் பற்றி நினைத்தால்
தூங்குவது நம் கையில்,
எழுவது இறைவன் கையில் என்ற உண்மை புரியும்.
அன்று இரவு ஆண்டவரிடம் போக வேண்டியிருந்தாலும் நாம் தயாராய் இருக்க வேண்டும்.
சிறிது நேரம் ஆன்ம பரிசோதனை செய்து,
செய்த பாவங்களுக்கு மனஸ்தாபப் பட்டு,
மன்னிப்பும் பெற்று
மனதில் சமாதான உணர்வோடு படுத்தால்
என்ன நேர்ந்தாலும் இறைனோடு இருப்போம்.
இருந்தாலும் அவரோடு,
இறந்தாலும் அவரோடு.
ஏன் பயப்பட வேண்டாம்?
Switch ஐப் போட்டால் வெளிச்சம் வரும் என்று தெரியும்.
யாராவது Switchக்குப் பயப்படுவார்களா?
A. T. M cardஐச் சொறுகினால்
பணம் வரும் என்று தெரியும்.
யாராவது A. T. M cardக்குப் பயப்படுவார்களா?
மத்தியானம் 12 மணி ஆனால்
சாப்பாடு வரும் என்று தெரியும்.
யாராவது 12 மணிக்குப் பயப்படுவார்களா?
மரணம்தான் மோட்சத்திற்கு வழி என்று எல்லோருக்கும் தெரியும்.
யாராவது மரணத்துக்குப் பயப்படுவார்களா?
ஏன் எப்போ, எங்கே, எப்படி நடந்தாலும் தயாராக இருக்க வேண்டும்?
நமது எதிர்காலம் நமக்குத் தெரியாது.
நாம் எப்போது பிறந்தோம் என்பது நமக்குத் தெரியும்.
ஆனால் எப்போது இறப்போம் நமக்குத் தெரியாது, இறைவனுக்கு மட்டும்தான்
தெரியும்.
ஒரு வகையில் நமக்குத் தெரியாமலிருப்பது நல்லது.
ஆன்மீகக் கண்ணோக்கில் பார்க்கும்போது
எதிர் காலத்தில் நடக்கப்போவது எதுவும் தெரியாமல் இருந்தால்தான்
நாம் ஆரம்பத்திலிருந்தே முழுக்க முழுக்க இறைவனைச் சார்ந்தே வாழ்வோம்.
அவர் எந்த நேரத்திலும் வரலாம் என்றிருந்தால்தான் அவரை ஒவ்வொரு வினாடியும் பக்தியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்.
1938ஆம் ஆண்டு பிறந்தவன்
தான் 2019ஆம் ஆண்டுக் கடையில்தான் இறப்பான்
என்ற உண்மை அவன் பையனாக இருக்கும்போதே தெரிந்து விட்டால் அவனது ஆன்மீக வாழ்வு எப்படி இருக்கும்?
"இத்தனை ஆண்டு கழித்து இறப்பதற்கு இப்போதிருந்தே தயாரிக்க வேண்டுமா?
2019ஆம் ஆண்டு துவக்கத்திலிருந்து ஆன்மீக வாழ்க்கையை ஆரம்பித்தால் போதாதா!
அதுவரை உலகை அனுபவிப்போமே" என்றுதான் நினைக்கத் தோன்றும்.
2019 பிறந்த பின்னும், "இன்னும் 12 இருக்கிறதே! இப்போ என்ன அவசரம்?" என்று தோன்றும்.
ஆக ஆன்மீக வாழ்வு குட்டிச் சுவராகி விடும்.
மரண நேரம் தெரியாமல் இருந்தால்தான் எப்போதும் தயாராய் இருப்போம்.
எப்போதும் தயாராக இருப்பவர்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
மரணத்தை ஏன் மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும் ?
"ஆண்டவருக்குள் என்றும் அகமகிழுங்கள்." (பிலிப்.4:4)
ஒருவர் டில்லியிலிருந்து அவரது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு புகைவண்டி மூலம் பயணிக்கிறார்.
ஏறத்தாள 3000கிலோமீட்டர் தூரம்.
இரண்டு நாட்களுக்குக் குறையாமல் பிரயாணம் செய்ய வேண்டும்.
இரண்டு நாட்கள் பிரயாணம் செய்துவிட்டு இரயில் சொந்த ஊரை நெருங்கும்போது,
'இன்னும் கொஞ்ச நேரத்தில் அப்பா, அம்மா, மனைவி, மக்கள், நண்பர்களைப் பார்க்கப் போகிறோம்' என்று சந்தோசப்படுவாரா?
அல்லது
'ஐயோ!
இரயில் சொந்த ஊரை நெருங்கிவிட்டதே!
இறங்க வேண்டியிருக்குமே!
உறவினர்களைப் பார்க்க வேண்டியிருக்குமே!
என்ன செய்வேன்!
யாராவது காப்பாத்துங்களேன்!' என்று அழுது கூப்பாடு போடுவாரா?
அப்படிக் கூப்பாடு போட்டால் அவரைப் பார்ப்பவர்கள் 'ஏதோ பைத்தியம் போலிருக்கு' என்று எண்ணமாட்டார்களா?
விண்ணகம் சென்று
கடவுளையும்,
நமக்கு முன்னால் அங்கு சென்று கடவுளோடு ஐக்கியமாகிவிட்ட உறவினர்களையும்
சந்திப்பதற்காகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
இவ்வுலக வாழ்வாகிய இரயிலிலிருந்து இறங்க வேண்டிய கடைசி Station மரணம்!
அங்கு நம்மை வரவேற்கக் கடவுளும், நமது உறவினர்களும் காத்துக் கொண்டிருப்பார்கள்.
இதை நினைத்து ஆனந்தப் படாமல்,
அழுதால் நம்மை விடப் பெரிய பைத்தியம் யாராக இருக்க முடியும்?
மரணத்தால் நம்மை இறைவனோடு சேர்க்கத்தான் முடியுமேயொழிய பிரிக்க முடியாது.
"ஆண்டவருக்குள் என்றும் அகமகிழுங்கள்." என்று இறைவார்த்தை கூறுகிறது.
இவ்வுலகிலும், மறுவுலகிலும்
ஆண்டவருக்குள் வாழ படைக்கப்பட்ட எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்போம்.
லூர்துசெல்வம்.
No comments:
Post a Comment