"பத்துப்பேரும் குணமடையவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?"
(லூக்.17:17)
**** **** ***** *****
இப்படி சிலர்.
"எங்கேடா போய்ட்டு வார?''
"நம்ம சார் வீட்டுக்கு."
"எதுக்கு? அடிபடவா? வகுப்பில பட்ட அடி காணாதா? நான் பட்டிருக்கிற அடி மூணு தலைமுறைக்குப் போதும்."
"ஏல, நீ பட்ட அடியத்தான் நினைக்கிற.
எதுக்காக அடிச்சார்னு நினைச்சிப் பார்க்க மாட்டியா?
நீ ஒன்பதாவது வகுப்பில சேரும்போது எப்படி இருன்தன்னு உனக்கே தெரியும்.
உன்ன மட்டும் அடிச்சி படிக்க வச்சிருக்காட்டா நீ பத்துல 400 மார்க் எடுத்திருப்பியா?
ஒன்பத விட்டு வெளியவே வந்திருக்க மாட்ட.
கொஞ்சமாவது நன்றி உணர்ச்சி இருக்கணுண்டா."
"எதுக்கு நன்றி? நான் படிச்சேன், நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணினேன்.
அதுக்கு வாத்தியாருக்கு எதுக்கு நன்றி?"
"சார் முயற்சி இல்லாட்டா நீ பாசே பண்ணியிருக்க மாட்ட."
"என்ன முயற்சி, பொல்லா முயற்சி. எதுக்காக முயற்சி எடுத்தாரு?
சும்மாவா முயற்சி எடுத்தாரு?
அவரு வாங்குற சம்பளத்துக்கு
முயற்சி எடுத்தாரு.
என்னமோ எனக்காக மட்டும் வாத்தியாரா வந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாம உழைச்சது மாதிரி பேசற!"
"உங்கிட்ட பேசிப் பயனில்லை. ஆனால் ஒண்ணுமட்டும் ஞாபகத்தில வச்சுக்க.
நன்றி உணர்ச்சி இல்லாதவன் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது."
* * * * * *
இப்படியும் சிலர்.
"நன்றிங்க!"
"நன்றியா? எனக்கா? எதுக்கு?"
"நீங்க செய்த உதவிக்கு."
"நான் செய்த உதவிக்கா?
ஹலோ! நீங்க. யாருன்னே தெரியாது.
நான் இதுவரை உங்களைப் பார்த்ததேயில்லை.
ஏதோ ஆள் மாறிச் சொல்றீங்கன்னு நினைக்கிறேன்."
"நானுங்கூட உங்களைப் பார்த்ததேயில்லை. ஆனாலும் செய்த உதவியை மறக்க முடியுமா?"
"ரொம்ப குழப்புறீங்க.
நானும் உங்களப் பார்க்கல.
நீங்களும் என்னைப் பார்க்கல.
நான் எப்படி உங்களுக்கு உதவி செய்திருக்க முடியும்?
கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்களேன்."
"உங்க பெயர் லூர்து தான?"
..."அதெப்படி உங்களுக்குத் தெரியும்?"
"உங்களத்தான் நான் பார்க்கல.
உங்க போட்டோவைப் பார்த்திருக்கேன்."
..."என் போட்டோவை எங்க பார்த்தீங்க?"
"சென்ற வாரம் ஒரு கம்பெனியில Clerk வேலைக்கு Interview க்குப் போயிருந்தேன்.
அங்க Interviewer மேசை மேல ஒரு விண்ணப்பம் இருந்தது.
அதுல உங்க போட்டோவும், பெயரும் இருந்தது."
"கதை அப்படிப் போகுதா?"
"எப்படி? '
"போனவாரம் ஏழாம்தேதி நானும் Interview க்கு Busல போய்க் கொண்டிருந்தேன்.
நான் உட்கார்ந்திருந்தேன்.
இடையில ஒரு ஸ்டாப்பில ஒரு பெரியவர் ஏறி என் பக்கத்தில நின்றார்.
வயதில் பெரியவர். ஆகையினால அவர உட்காரச் சொல்லிவிட்டு நான் நின்று கொண்டேன்.
அவர் ஒரு Thanks. சொல்லிவிட்டு உட்கார்ந்தார்.
என் மேல் இரக்கப்பட்டு என் பையை வாங்கி வைத்துக் கொண்டார்.
பைக்குள் எனது வேலைக்கான விண்ணப்பம் இருந்தது.
அப்புறம், இறங்கும்போது பையை வாங்க நானும் மமறதுவிட்டேன். தர அவரும் மறந்து விட்டார்.
அப்புறம் இது வரை அவரைப் பார்க்வில்லை.
நீங்க சொல்றதப் பார்த்தால் உங்கள் interviewer டம்தான் என் விண்ணப்பம் இருக்கிறது.
சரி, நான் உங்களுக்கு ஒரு உதவியும் செய்யவில்லையே!"
"இல்லை. உங்கள் உதவியால்தான் எனக்கு வேலை கிடைத்தது.
அந்தப் பெரியவரே சொன்னார், 'இந்தப் பையனும் இந்தக் கம்பெனிக்குத்தான் விண்ணப்பம் கொண்டு வந்திருக்கிறான்.
வரும் வழியில் என்னிடம் மாட்டியிருக்கிறது.
பார்க்க சேவை மனப்பான்மை உள்ள பையன் போல் தெரிகிறது.
இந்த வேலையை அவனுக்குக் கொடுக்கத்தான் நினைத்திருந்தேன்.
ஆனால் நான்தான் அவனைத் தேடிப்பிடிக்க வேண்டும்.
பரவாயில்லை. Manager post ஒன்று காலியாகப் போகிறது.
அதை அவனுக்குக் கொடுத்து விடுகிறேன்.
Now you are appointed for the post applied for.'
கடவுளுடைய செயலைப் பாருங்கள்.
நீங்கள் பெரியவருக்கு உட்கார இடம் கொடுத்ததற்காக
Clerk வேலைக்குப் பதிலாக Manager வேலை!
Appointment ஆகாமலே Promotion!
நீங்கள் பெரியவருக்கு உட்கார இடம் கொடுத்ததற்காக எனக்கு Clerk வேலை!
உண்மையிலேயே இது கடவுளுடைய விளையாட்டு.
நாம் இருவருமே கடவுளுக்கு நன்றி கூற வேண்டும்."
"நன்றி என்ற உடனேயே காலையில் வாசித்த இறைவார்த்தை ஞாபகத்துக்கு வருகிறது.
இயேசு பத்து தொழு நோயாளிகளைக் குணப்படுத்தினார்.
ஆனால் ஒருவன் மட்டும்தான் நன்றி சொல்ல வந்தான்."
"அதிலும் பாருங்கள்.
சுகமில்லாத பத்து பேருமே
'இயேசுவே, எங்கள்மேல் இரக்கமாயிரும்' என்று உரக்கக்கூவினர்.
இயேசு "நீங்கள் போய்க் குருக்களிடம் உங்களைக் காட்டுங்கள் " என்றார்.
அவர்கள் செல்லும்போதே அவர்கள் குணமடைந்தனர்.
குருவிடம் சென்று தெரிவித்தால்தான் மக்களோடு பழக முடியும்.
ஒன்பது பேருக்கு மக்களோடு பழகுவதுதான் முக்கியமாகத் தெரிந்தது.
ஒருவனுக்குதான் குணமாக்கியவர் முக்கியமானவராகத் தெரிந்தார்.
ஆகவே அவன் கடவுளை மகிமைப்படுத்திக்கொண்டு,
நன்றி சொல்வதற்காகத் திரும்பி வந்தான்.
இயேசுவின் காலில் முகங்குப்புற விழுந்து நன்றிசெலுத்தினான்.
இயேசு அவனைப் பார்த்து, "பத்துப்பேரும் குணமடையவில்லையா?
மற்ற ஒன்பது பேர் எங்கே? என்று கேட்டார்.
கடவுள் நம் தந்தை. நாம் நன்றியுள்ள பிள்ளைகளாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்."
..."உண்மைதான்.
கடவுள் ஒன்றும் இல்லாமையிலிருந்து நம்மைப் படைத்து,
தனது அன்பினாலும், ஞானத்தினாலும், வல்லமையாலும்
நம்மைப் பராமரித்து வருகிறார்.
அவரது பராமரிப்புக்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டியது நம் கடமை.
நமது நன்றி உணர்ச்சி நம்மை அவரோடு இறுகிப் பிணைக்கும்.
நன்றி உணர்ச்சி இல்லாவிட்டால் காலப்போக்கில் அவரை மறந்து விடுவோம்,
நன்றியுணர்வற்ற பிள்ளைகள் பெற்றோரை மறந்து விடுவதுபோல.
வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் அவருக்கு நன்றி கூறவேண்டும்.
நமது உணர்வை நமது எண்ணத்தினாலும், வார்த்தையினாலும் காட்டுவதைப் போலவே செயலிலும் காட்டவேண்டும்."
"அது எப்படி? கடவுளுக்கு நம்மால் எப்படிப் பதில் உதவி செய்ய முடியும்?"
..."கடவுளுக்கு நேரடியாக எந்ந உதவியும் செய்ய முடியாது.
யாருடைய உதவியும் அவருக்குத் தேவை இல்லை.
ஆனால் நமது அயலானுக்கு உதவும்போது கடவுளுக்கே உதவுகிறோம்.
நமது பிறர் உதவிக்குப் பதிலாக நமக்கு நித்திய பேரின்பம் காத்திருக்கிறது.
பிறர் உதவி கடவுளின் அதிமிக மகிமைக்காக இருக்க வேண்டும்."
"ஆதோ பெரியவர்."
"வணக்கம் ஐயா!"
"ஹலோ மிஸ்டர் லூர்து,"
"Sorry Sir. என் பையை உங்களைச் சுமக்க வைத்தது என் தப்பு."
"நீங்கள் சுமக்க வைக்கவில்லை. நான்தான் வாங்கிக் கொண்டேன்.
தர மறந்துவிட்டேன். அதுவும் நன்மைக்கே.
அதனால்தான் மிஸ்டர் செல்வதற்கு வேலை கிடைத்தது.
உங்களுக்கும் வேலை காத்துக் கொண்டிருக்கிறது.
நாம் கடவுளுக்குதான் நன்றி செலுத்தவேண்டும்.
நேற்றுதான் பழைய Manager retired ஆனார்.
நாளையே வந்து பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்."
"ரொம்ப நன்றி!"
கடவுளின் வழிகள் அற்புதமானவை!
லூர்துசெல்வம்.
No comments:
Post a Comment