ஏன் யோசேப்பு குழந்தை இயேசுவையும், மாதாவையும் அழைத்துக் கொண்டு எகிப்துக்குச் சென்றார்?
"தாத்தா, இறை மகனும், மனு மகனும் ஒரே ஆள் தானே?"
"ஆமா, பரிசுத்த தமதிரித்துவத்தில் இரண்டாம் ஆள்.
ஆள் ஒன்று, சுபாவம் இரண்டு.."
"' அப்படியானால் அவர் சர்வ வல்லவக் கடவுள் தானே."
"ஆமா, அதில் என்ன சந்தேகம்."
"'அவர் சர்வ வல்லவக் கடவுள் என்று அன்னை மரியாளுக்கும்,
யோசேப்புக்கும் தெரியும்தானே."
"நிச்சயமாக.
"அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.
அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" கபிரியேல் தூதர் மரியாளிடம் சொன்னார் தானே.
'ஆமா."
"'ஆக, குழந்தை இயேசு என்றென்றும் ஆட்சி செலுத்தப் போகும் கடவுள் என்று மாதாவுக்கும் தெரியும், யோசேப்புக்கும் தெரியும்.
ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, "நீர் எழுந்து
குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்,"
என்று சொன்னபோது எல்லாம் வல்ல கடவுள் ஏன் மனிதனுக்குப் பயந்து ஓட வேண்டும் என்ற கேள்வி அவர் மனதில் எழவில்லையா?
தூதர் சொன்னவுடனே இரவிலேயே யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.
கடவுளின் வல்லமை மீது மாதாவுக்கும், யோசேப்புக்கும் நிச்சயமாக விசுவாசம் இருந்திருக்கும்.
இருந்தும் ஏன் இரவோடு இரவாக எகிப்துக்குப் போனார்கள்?"
"மரியாளை மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்ட யோசேப்பு மனைவியை ஏன் ஏற்றுக்கொண்டார்?"
"'ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்."
"இதில் யோசேப்பின் என்ன பண்பு உனக்குத் தெரிகிறது?"
"'இறைவன் சித்தத்துக்குக் கீழ்ப்படியும் பண்பு."
"வெறுமனே கீழ்ப்படியும் பண்பு அல்ல, எதிர்க் கேள்வி கேட்காமல், விளக்கம் கேட்காமல் கீழ்ப்படியும் பண்பு.
துறவற சபையினர் கொடுக்கும் மூன்று வார்த்தைப் பாடுகளுள் ஒன்று கீழ்ப்படிதல்.
ஒரு முறை ஒரு சபையில் ஒரு
நவசந்நியாசியை Novice Master அழைத்து, ஒரு விறகுக் கட்டையைக் கையில் கொடுத்து,
"இதைத் தோட்டத்தில் நட்டு, தினமும் ஒரு வாளித் தண்ணீர் ஊற்றி வாருங்கள்" என்றார்.
அவரும் அவர் சொன்னபடியே செய்து வந்தார்.
ஒரு நாள் வெளியிலிருந்து வந்த நண்பர் ஒருவர்,
"ஏன் விறகுக்கட்டைக்குத் தண்ணீர் ஊற்றுகிறீர்கள்?" என்று கேட்டார்.
"Novice Masterன் உத்தரவு"
" விறகுக் கட்டை தளிர்க்குமா?"
"தளிர்க்காது."
"தளிர்க்காது என்று தெரிந்தும் ஏன் தண்ணீர் ஊற்றுகிறீர்கள்?"
"அது தளிர்ப்பதற்காக
ஊற்றவில்லை.
Superior க்குக் கீழ்ப்படிவதற்காக ஊற்றுகிறேன்.
இறைவன் சித்தத்துக்கு எதிர் கேள்வி கேட்காமல் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்கு எங்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சி இது.
Blind obedience."
"'அப்படியானால் குழந்தை இயேசுவைக் காப்பாற்றுவதற்காகக் கூட்டிக் கொண்டு போகவில்லையா?"
"நோக்கம் அதுதான். ஆனால் வழிமுறை? தனது விருப்பப்படி எல்ல, இறைவன் விருப்பப்படி.
நம்மை வழிநடத்துபவர் இறைவன் தான்.
நீ ஏன் இந்தியாவில் பிறந்தாய்?"
"'நான் பிறக்கவில்லை, படைத்தவர் என்னை இங்கே படைத்திருக்கிறார்."
"Correct. படைத்தவர் சித்தப் படி பிறந்த நீ படைத்தவர் சித்தப்படி தான் வாழ வேண்டும். யோசேப்பு அதைத்தான் செய்தார்.
எகிப்துக்கு போகச் சொன்னபோது போனார்,
வான தூதர் குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும்.
சென்றார்.
அங்கிருந்து கலிலேயாவுக்குப் போகச் சொன்னார்.
போனார்.
அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்கு குடியிருந்தார்.''
"' ஆக இறைவன் சித்தம் என்னவென்று தெரிந்தபின் அதன்படி தான் செயல்பட வேண்டும், நமது விருப்பப்படி அல்ல
ஆனால் இதுதான் இறைவன் சித்தம் என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது?"
"இயேசு மூன்று வழிகளில் நம்மோடு இருக்கிறார்.
1. இறைவன் எங்கும் இருக்கிறார், ஆகவே நம்மோடும் இருக்கிறார்.
2. திவ்ய நற்கருணையில் நம்மோடு இருக்கிறார்.
3. நமது பாவங்களை மன்னிக்கவும், நமக்கு ஆண்டவரை உணவாகத் தரவும், நமக்கு நற்செய்தியை அறிவிக்கவும் அதிகாரம் பெற்ற நமது பங்குத் தந்தை உருவிலும்
நம்மோடு இருக்கிறார்.
ஆன்மீக வாழ்வில் நமது பங்குத் தந்தைதான் நமது ஆன்மீக வழிகாட்டி.
உடல் சார்ந்த சுகமில்லாதவர்கள் எப்படி ஒரு குறிப்பிட்ட மருத்துவரிடம் தங்கள் உடலை பரிசோதித்துக் கொள்கிறார்களோ
அதேபோல நமது ஆன்மீக காரியங்கள் பற்றி அடிக்கடி பங்குத் தந்தையிடம் பேச வேண்டும்.
அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்பவர்களுக்கு இது எளிது.
அவர் காட்டும் வழி நமக்கு இறைவன் சித்தம்.
பங்குக் குருவின் ஆலோசனைப் படி ஆன்மீக வாழ்வு வாழ்பவர்களுக்கு மீட்பு உறுதி.
திருச்சபையின் போதனைப் படி பைபிள் வசனங்களை வாசித்து தியானிப்பவர்களுக்கு அந்த வசனங்கள் காட்டும் வழியே இறைவன் சித்தம்."
இரண்டு படகுகளில் கால்களை வைத்துக் கொண்டு கடலில் பயணிக்க முடியாது.
உலகப் படகை முற்றிலும் விட்டு விட்டு இராயப்பர் படகுக்குள் முற்றிலும் வந்து விட்டாலே நாம் இறைவன் சித்தப்படி தான் நடப்போம்.
"விண்ணகத் தந்தையே, விண்ணக வாசிகள் உமது
சித்தப்படி நடப்பது போல நாங்களும் நடக்க உமது அருள் வரம் தாரும்."
லூர்து செல்வம்.
Praise GOD
ReplyDelete