Sunday, February 16, 2025

செவ்வாய்18. 'மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்."(லூக்கா நற்செய்தி 6:22)

செவ்வாய்18.                                        

'மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்."
(லூக்கா நற்செய்தி 6:22)

இன்றைய காலக் கட்டத்தில் நமது நாட்டில் மணிப்பூர், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தப் படுவதைக் கண்டு மிகவும் வருந்துகிறோம்.

ஆண்டவர் சொல்கிறார்,

"மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்."

அதாவது இயேசுவின் சீடர்கள் அவர் பொருட்டு துன்புறுத்தப் படும் போது நாம் மகிழ வேண்டும்,
ஏனெனில் அவர்கள் பாக்கியவான்கள்.

துன்பப் படுத்துபவர்களை நினைத்து அல்ல,

துன்புரும் நம்மை நினைத்து

துன்புறுத்துவோருக்காக 
வேண்டிக் கொள்ள வேண்டும். நம்மை நினைத்து
மகிழ வேண்டும்.

உலகப் பார்வை வேறு, ஆன்மீகப் பார்வை வேறு.

ஐரோப்பாவில் எந்தெந்த நாடுகளில் கிறிஸ்தவர்கள் இரத்தம் சிந்தும் அளவுக்குத் துன்புறுத்தப் பட்டார்களோ

அந்த நாடுகளில் கிறித்தவம் வேகமாகப் பரவியது.

"வேத சாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் வித்து" என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்போது நம்மை திருச்சபையின் எதிரிகள் நம்மை எந்த அளவுக்கு துன்பப்படுத்துகிறார்களோ

 அந்த அளவுக்கு எதிர்காலத்தில் நாம் வேகமாக வளர்வோம்.

அன்று இயேசு பாடுகளுக்கும், சிலுவை மரணத்துக்கும் தன்னைத் தானே கையளித்தார்.

தன்னைத் தானே கையளித்திருக்காவிட்டால் அவரை எதிரிகளால் கைது செய்திருக்க முடியாது.

கையளித்தது மட்டுமல்ல, தனது சிலுவை மரணத்துக்குக் காரணமாக இருந்தவர்களை முழு மனதோடு மன்னித்தார்..

மன்னிப்பை அனுபவித்த, இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்திய செந்தூரியனும், அவனைச் சேர்ந்தவர்களும

 "இவர் உண்மையாகவே இறைமகன்" என்றார்கள். 

செந்தூரியன் மனம் திரும்பி நற்செய்தி அறிவிக்கும் பணியை ஏற்றுக் கொண்டார்.

திருச்சபையின் விரோதிகள் நன்மை துன்புறுத்தும் போது நமது எதிர் வினை (Reaction) மன்னிப்பாக இருந்தால் ஒரு நாள் அவர்கள் மனம் திரும்புவார்கள்.

தீமையை நன்மையால் வெல்லலாம்.

இன்று நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது இந்தியாவில் கிறிஸ்தவத்துக்கு எதிர் காலம் பிரகாசமாக இருக்கும் போல் தோன்றுகிறது.

முதல் நூற்றாண்டில் ரோமை மன்னர்கள்  கிறித்தவர்களைத் துன்புறுத்தினார்கள்.

இன்று ரோம் நகர்தான் திருச்சபையின் தலைநகராகத் திகழ்கிறது.

திருச்சடையே "ரோமன் கத்தோலிக்க திருச்சபை" என்று அழைக்கப் படுகிறது.

நாம் நம்மை மதத்தின் அடிப்படையில் துன்புறுத்துபவர்களுக்காக வேண்டிக் கொள்வோம்.

அவர்களும் நம்மோடு நித்திய பேரின்பத்தில் பெறுவார்கள்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment