வெள்ளி7. .
இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை.
(மாற்கு நற்செய்தி 6:26)
ஏரோது மன்னன், தன் சகோதரனின் மனைவி ஏரோதியாவை சட்ட விரோதமாக வைத்திருந்தான்.
அதை திருமுழுக்கு அருளப்பர் கண்டித்தார்.
அரசனுக்கு அவர் மீது மரியாதை இருந்தாலும் ஏரோதியாவைத் திருப்திப் படுத்துவதற்காக அவரைக் கைது செய்து சிறையில் வைத்திருந்தான்.
அவரைக் கொலை செய்ய ஏரோதியா சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அரசனின் பிறந்த நாளன்று
நடனமாடிய ஏரோதியாவின் மகளை மகிழ்விப்பதற்காக
அச்சிறுமியிடம், "உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்" என்றான்.
அவள் தாயின் ஆலோசனைப்படி
"திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்" என்று கேட்டாள்.
இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை.
உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி அருளப்பருடைய தலையைக் கொண்டுவருமாறு பணித்து, சிறையில் அவருடைய தலையை வெட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தான்.
ஏரோது ஒழுக்கம் கெட்டவன்.
ஆனால் கொஞ்சம் இரக்கம்
உள்ளவன்.
அவனுக்கு அருளப்பரின் தலையை வெட்ட விருப்பம் இல்லை.
ஆனால் தன் வாக்கைத் தானே மீற முடியாமல் தன் வாக்கை நிறைவேற்றினான்.
ஏரோதியாவைத் திருப்திப் படுத்துவதற்காக தவறு எனத் தெரிந்தும் அதைச் செய்கிறான்.
நாம் எப்படி?
நாம் எப்போதும் நமது மனசாட்சியின் படி செயல் படுகிறோமா? அல்லது மற்றவர்களைத் திருப்திப் படுத்து வதற்காக
மனசாட்சியை மீறி செயல்படுகிறோமா?
"திருமணத்திற்கு வந்திருப்பவர்களுக்கு ஏன் மது (drinks) வாங்கிக் கொடுத்தாய்"
"நண்பர்களைத் திருப்திப் படுத்து வதற்காக."
**
"ஏன் ஞாயிற்றுக் கிழமை பூசைக்கு வரவில்லை?"
"அந்த நேரத்தில் Friend வீட்ல திருமணம். போகாவிட்டால் தப்பாய் நினைப்பான்."
"அதாவது ஆண்டவர் என்ன நினைப்பார் என்பது முக்கியமில்லை!
நண்பன் நினைப்பதுதான் முக்கியம்!
உனக்கு நித்திய பேரின்ப வாழ்வைக் கொடுக்க வேண்டியவர் கடவுளா? நண்பனா?"
**
"ஏன் பாவ சங்கீர்த்தனமே செய்யாமல் நன்மை எடுக்கிறாய்?"
"எல்லோரும் எடுக்கிறார்கள். நானும் எடுக்கிறேன்."
**
"ஏன் பூசைக்குப் பிந்திவந்தாய்?"
" நண்பனோடு பேசிக் கொண்டிருந்தேன்."
**
" இன்று கோவிலுக்கு வர முடியாது. முக்கிய கட்சி Meeting.
போகாவிட்டால் அரசியலில் செல்வாக்குப் போய்விடும்."
ஆன்மாவை விட அரசியல்தான் முக்கியம்!?
**
அநேக சமயங்களில் "உலகத்தோடு ஒட்ட ஒழுக." என்று கூறிக் கொண்டு ஆன்மீக வாழ்வுக்கு எதிரான காரியங்களைச் செய்கிறோம்.
தீர்வை நாளில் நாம் கணக்குக் கொடுக்க வேண்டியது கடவுளிடம்,
உலகத்திடம் அல்ல.
மனிதன் உலகத்தை முழுவதும் வென்று விட்டாலும் ஆன்மீகத்தில் தோல்வி அடைந்தால் அவன் வாழ்ந்தும் பயனில்லை.
நம்மையோ, உலகத்தையோ அல்ல, நம்மைப் படைத்தவரைத் திருப்திப்படுத்தவே நாம் உலகில் வாழ வேண்டும்.
"எல்லாம் உமக்காக,
இயேசுவே,
எல்லாம் உமக்காக."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment