ஞாயிறு16.
"இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை; "ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே."
(லூக்கா நற்செய்தி 6:20)
ஏழைகள்
இயேசுவின் நற்செய்தியை கேட்பதற்காக குழுமியிருந்த பெரும் திறளான மக்கள் கூட்டத்தை பார்த்து அவர் கூறியது
':ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே."
இதைக் கூறும்போது அவர் தன் சீடர்களைப் பார்க்கிறார்,
தான் கூறியதற்கு அவர்கள் உதாரணம் என்ற பொருளில்.
ஏழைகள் என்றால் இல்லாதவர்கள். தங்களிடம் என்ன இருந்ததோ அதை விட்டு விட்டு இயேசுவைப் பின் பற்றியவர்கள் அவர்கள் .
உதாரணத்துக்கு மீனவர்களான சீமோன், அந்திரேயா, யாக்கோபு, அருளப்பர் ஆகியோர் தங்கள் வலைகளை விட்டு விட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.
உலக ரீதியாக பொருள் உள்ளவர்களை செல்வந்தர் எனவும் பொருள் இல்லாதவர்களை ஏழைகள் எதுவும் அழைப்போம்.
ஆனால் ஆன்மீகத்தில் இல்லாதவர்கள் என்றால் பற்று இல்லாதவர்கள்.
ஒருவனிடம் பொருள் இருக்கும், ஆனால் அதன் மீது பற்று இருக்காது.
அதைப் பொருள் என்பதற்காக விரும்ப மாட்டான். கடவுள் அதை அவனுக்கு எதற்காகக் கொடுத்திருக்கிறாரோ அதற்காகப் பயன்படுத்துவான்.
இன்னொருவனிடம் பொருளும் இருக்காது பற்றும் இருக்காது.
இரு வகையினரும் ஏழைகள் தான்.
பொருள் மீது பற்று இல்லாதவர்களுக்கு மட்டும் இறைவன் மீது உண்மையான பற்று இருக்கும்.
அவர்கள் இறைவனைத் தங்கள் அரசராக ஏற்றுக் கொள்கிறார்கள்:
இதைத்தான் இயேசு,
"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே."
உலகாட்சிக்கும், இறையாட்சிக்கும் என்ன வேறுபாடு?
உலகாட்சி உலக பொருட்களை (இடம், சொத்து, பணம்) மையமாகக் கொண்டு இயங்கும்.
உலகப் பொருட்கள் முடிவுக்கு உரியவை.
இறையாட்சி இறைவனுடைய அருளை மையமாகக் கொண்டு இயங்கும்.
இறையாட்சிக்கு உட்பட்ட அன்னை மரியாளை "அருள் நிறைந்த மரியே" என்று அழைக்கிறோம்.
உலகப் பொருட்களால் ஈர்க்கப் படாமல் இறையருளால் ஈர்க்கப் பட்டு வாழ்வோர் புனிதர்கள்.
உலகப் பற்றற்றோர் பேறு பெற்றோர் என்றால், உலகப் பற்று உள்ளவர்கள் அதற்கு எதிர் மாறானவர்கள்.
உலகப் பற்றற்றோருக்கு இறையாட்சி உரியது என்றால்,
உலகப் பற்று உள்ளவர்களுக்கு இறையாட்சி உரியது அல்ல.
அதனால்தான் ஆண்டவர்,
"செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்கிறார்.
(மத்தேயு நற்செய்தி 19:24)
இவ்வசனத்தில் செல்வர் என்ற வார்த்தை செல்வத்தின் மீது பற்றுள்ளவர்களைக் குறிக்கும்.
* * * *
பட்டினியாய் இருப்போர்.
(Who are hungry)
பசியாக இருப்பவர்கள்.
எப்படி ஏழ்மை என்றால் ஆன்மீக ரீதியாக பொருட்பற்று இன்மையோ,
அதுபோல் பட்டினியாய் இருப்போர் ஆன்மீக ரீதியாக பசியாக உள்ளவர்கள்.
இயேசு சாகும் தருவாயில் இருக்கும் போது "தாகமாய் இருக்கிறது" என்றார்.
இது உடல் சார்ந்த தண்ணீர் தாகம் அல்ல, ஆன்மீக தாகம்,
மீட்கப்பட வேண்டிய ஆன்மாக்கள் மீதான தாகம்.
அவர் சிலுவையில் அறையப்பட்டது ஆன்மாக்களின் மீட்புக்காக. ஆன்மாக்கள் மீட்கப் படும்போது தான் தாகம் தணியும்.
உடல் பசி உலகைச் சார்ந்த உணவின் மீதான பசி.
ஆன்மீகப் பசி இறையருள் மீதான பசி. இறை அருளாகிய ஆன்மீக உணவினால் தான் நமது ஆன்மா வாழ்கிறது.
சோதனைகளை வெல்ல வேண்டுமானால் இறை அருள் வேண்டும்.
செய்த பாவத்துக்கு மனத்தாபப் பட இறை அருள் வேண்டும்.
ஆன்மிகத்தில் வளர இறை அருள் வேண்டும்.
இறை அருளைப் பெற்று மீட்புப் பெற நமக்கு ஆசை இருக்க வேண்டும்.
அதேபோல மற்றவர்களுடைய ஆன்மாக்களும் மீட்புப் பெற வேண்டும் என்ற ஆசை நமக்கு இருக்க வேண்டும்.
ஆசை இருந்தால் தான் அதற்காக உழைப்போம்.
புனித தோமையார், புனித சவேரியார், புனித அருளானந்தர் போன்றவர்கள் நம் நாட்டுக்கு வந்தது அவர்களிடம் இருந்த ஆன்மப் பசியின் காரணமாக.
ஆன்மீகப் பசி உள்ளவர்கள் நிறைவு பெறுவார்கள்.
உடல் பசி உள்ளவர்கள் நிறைவு பெற வேண்டும் என்றால் அவர்கள் வயிறார சாப்பிட வேண்டும்.
நிறைவு பெறுவார்கள் என்று சொன்னால் பசி தீர உணவு கிடைக்கும் என்பது பொருள்.
இயேசு பாவிகளை மீட்கவே சிலுவையில் பாடுகள் பட்டு தன் உயிரையே பலியாக்கினார்.
அவரது நோக்கத்தை நிறைவேற்ற பாவிகளின் மீட்புக்காக நாம் முழு மனதோடு உழைக்கும் போது
இயேசுவின் விருப்பத்தோடு ஒத்துழைக்கிறோம்.
ஆன்மீக ரீதியாக நாம் யாருக்காக உழைக்கிறோமோ அவர்கள் மீட்பு பெறுவார்கள். நாமும் விண்ணகத்தில் நிறைவு பெறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment