Friday, February 7, 2025

ஞாயிறு9. சீமோன் மறுமொழியாக, "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்றார். (லூக்கா நற்செய்தி 5:5)

ஞாயிறு9.                                        .

சீமோன் மறுமொழியாக, "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 5:5)

இயேசு சீமோனை நோக்கி, "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார். 

சீமோன் மறுமொழியாக, "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்றார். 

சீமோனுடைய வார்த்தைகளைத் தியானிப்போம்.

சீமோன் ஒரு தொழில் ரீதியான மீனவர்.  (Professional Fisherman) 

அவர் இரவு முழுவதும் முயன்றும் மீன் கிடைக்கவில்லை.

ஒரு திறமை வாய்ந்த மருத்துவர் ஒரு நோயாளியைக்  கைவிட்டு விட்டால் அவனது உறவினர் நம்பிக்கையை இழந்து விடுவர்.

ஆனால் மீனவரான சீமோன் இரவு முழுவதும் முயன்றும் மீன் கிடைக்கா விட்டாலும் 

இயேசுவின் வார்த்தைகளை விசுவசித்து அவர் கூறியபடி வலைகளை வீச, ஏராளமான மீன் கிடைக்கிறது.

மீன்களைப் பிடிக்கும் சீமோனை மனிதர்களைப் பிடிப்பவராக மாற்றினார்.

இது சீமோளின்  விசுவாசத்துக்கு இயேசு அளித்த பரிசு.

இந்த நிகழ்விலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம்?

இயேசு சீமோனுடைய படகிலிருந்து தான் போதித்தார்.

ஏற்கனவே சீமோன் இயேசுவை முதன்முறைச் சந்தித்த போதே அவருக்கு இராப்பர் என்று பெயரிட்டு விட்டார்.

"பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, "நீ யோவானின் மகன் சீமோன். இனி "கேபா" எனப்படுவாய் என்றார். "கேபா" என்றால் "பாறை" என்பது பொருள்."
(அரு.1:42)

நமது திருச்சபைக்கு "இராயப்பர் படகு" என்ற ஒரு பெயர் உண்டு.

நான் சிறுவனாக இருந்த போது பள்ளியில் நாங்கள் படித்த ஞானோபதேச புத்தகத்தின் பெயர் "இராயப்பர் படகு."
(திருச்சபை சரித்திரம்)



இயேசு சீமோனை நோக்கி, "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 5:4)

இராயப்பர் படகை (திருச்சபையை)

 மீன் பிடிக்க (மனதர்களைப் பிடிக்க)

தள்ளிக் கொண்டு போக வேண்டியது (இயக்க வேண்டியது)

 இராயப்பர் தான்.


ஆகவே இராயப்பர் தான் திருச்சபையின் தலைவர் என்ற தீர்மானம் இறை மகன் மனதில் நித்திய காலமாகவே இருந்திருக்கிறது என்பது உறுதியாகிறது.

ஆகவே இராயப்பரில் தலைமையிலான கத்தோலிக்க திருச்சபை தான் இயேசுவின் திருச்சபை என்பது இயேசுவின் வார்த்தைகளே அடிப்படை ஆதாரம்.

தன்னால் இயலாதது இறைவனால் இயலும் என்று இராயப்பர் உறுதியாக விசுவசித்தார்.

இத்தகைய விசுவாசம் நமக்கும் வேண்டும் என்று அவருடைய வார்த்தைகள் நமக்குப் பாடம் கற்பிக்கின்றன.


பிடிக்கப்பட்ட பெருந்திரளான மீன்களைப் படகில் போட உதவியவர்கள் அருளப்பரும், வியாகப்பரும்.

இராயப்பர் தன்னிச்சையாகச் செயல்படுபவர் அல்ல.

இயேசுவால் . பிடிக்க அனுப்பப்பட்டவர்,
 அருளப்பர், வியாகப்பர் ஆகியோரின் உதவியுடன் செயல் படுகிறார்.

கத்தோலிக்கத் திருச்சபையின் நிர்வாகம் எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு முன் அடையாளம்.

"சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, "ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்" என்றார்."

இராயப்பரின் இந்த வார்த்தைகள் நமக்கு என்ன பாடம் கற்பிக்கின்றன?

இந்த வார்த்தைகள் நாம் திவ்ய நற்கருணை உட்கொள்ளு முன் சொல்லும, செந்தூரியனின் வார்த்தைகளை நமக்கு நினைவு படுத்துகின்றன.

"நீர இல்லத்தில் எழுந்தருளி வர நான் தகுதி அற்றவன் "
(செந்தூரியன்)

"ஆண்டவரே நான் பாவி, நீர் என்னிடம் வர தகுதி அற்றவன்."
(இராயப்பர்)

நாம் எந்த அளவுக்கு தாழ்ச்சி உள்ளவர்களாக இருக்க வேண்டும் இராயப்பரது வார்த்தைகள் கற்பிக்கின்றன.

1. இராயப்பர் தான் ஒரு பாவி என்பதை ஏற்றுக் கொள்கிறார்.
அவருடைய குறைபாடுகள் அனைத்தையும் உணர்ந்திருக்கிறார்.

ஒருவன் தன்னிடம் என்ன வியாதி உள்ளது தெரிந்தால் தான் அதை குணமாக்க மருத்துவரிடம் செல்வான்.

இருக்கிற வியாதியை உணராதவன் அதிலேயே மடிவான்.

நமது பாவ நிலையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

என்னென்ன பாவங்களில் அடிக்கடி விடுகிறோம் தெரிந்திருக்க வேண்டும்.

அப்போதுதான் அவற்றிலிருந்து விடுதலை பெற முயற்சி எடுப்போம்.

இதற்காக அடிக்கடி சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
(Self examination)

பாவங்கள் எவை என்று தெரிந்தால்தான் அவற்றுகான சந்தர்ப்பங்களைக் கண்டுபிடித்து அவற்றிலிருந்து விலகுவோம்.

2. தாழ்ச்சி.

லூசிபெர் சாத்தானாக மாறியதற்குக் காரணம் அவருடைய தற்பெருமை.

தாழ்ச்சி என்றால் நமது உண்மை நிலையை ஏற்றுக் கொள்ளுதல்.

நாம் பிறந்தவுடன் நம்மைப் பாயில் கிடத்தி விட்டு யாரும் பக்கத்தில் வரவேயில்லை என்று வைத்துக் கொள்வோம்.

நாம் என்ன ஆகியிருப்போம்?
அதுதான் நமது உண்மை நிலை,

நாம் பெற்றவை அனைத்தும் இறைவனிடமிருந்து  பெற்றவை.

முடவன் கொம்புத்  தேனுக்கு ஆசைப்படலாமா?

கடவுளைப் பற்றி நினைக்கக் கூட நாம் தகுதி அற்றவர்கள்.

கடவுள் அருள் தந்தால்தான் அவரைப் பற்றி நினைக்கவே முடியும். இதை உணர்ந்தால் தான் நமக்கு அருள் தரும்படி கடவுளிடம் வேண்டுவோம்.

கடவுளின் அருள்தான் நம்மை வாழ வைக்கும்.

இராயப்பரின் தாழ்ச்சிதான் அவரைத் திருச்சபைக்குத் தலைவராக்கியது.

தம்மைத் தாமே தாழ்த்துபவர்கள் உயர்த்தப் படுவார்கள என்பது இறைவாக்கு.

ஒரு அடிமையை பரலோக, பூலோக அரசியாக்கியது அவளுடைய தாழ்ச்சி தான்.

ஒரு மீனவரைத் திருச்சபையின் தலைவராக்கியதும் அவருடைய தாழ்ச்சி தான்.

ஒரு தச்சுத் தொழிலாளியை இயேசுவின் வளர்ப்புத் தந்தையாக்கியது அவருடைய தாழ்ச்சி தான்.

3. இராயப்பருடைய 
ஆச்சரியமும், (Astonishment)
பக்தியும்.(Love)

இயேசுவின் வல்லமையால்தான் தன்னால் அவ்வளவு மீன்களைப் பிடிக்க முடிந்தது 
என்பதை உணர்ந்த இராயப்பர்   
இயேசுவின் வல்லமையை நினைத்து ஆச்சரியப்பட்டார்.

அந்த ஆச்சர்யம் பக்தியில் முடிந்தது. பக்தி தான் இராயப்பரை இயேசுவோடு பிரிக்க முடியாத அளவுக்குக் கட்டிப் போட்டது.

நாம் நம்மையும், நாம் வாழும் உலகத்தையும் நினைத்துப் பார்த்தால் நமக்கும் ஆச்சரியமும், பக்தியும் உண்டாகும். நாம்  நினைத்துப் பார்ப்பதில்லை.

நமது தாயின் வயிற்றில் உற்பவிக்கும் முன் நாம் எங்கே இருந்தோம்?

நாமே இல்லை.

நம்மை நமது பெற்றோரா உருவாக்கினார்கள்?

பெற்றோர் தங்கள் திறமையினால் மட்டும் குழந்தைகளை உருவாக்க முடியுமென்றால் இன்று குழந்தை இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள்.

குழந்தையைப் பெறுமுன் அது ஆணா பெண்ணா என்று கூட தாய்க்குத் தெரியாது.

நம்மைப் படைத்தவர் கடவுள்,
கடவுள் மட்டுமே. 

பெற்றோர் அவருடைய கருவிகள் மட்டுமே.

நமது உடலையும், பிரபஞ்சத்தையும ஆராய்ந்து பார்த்தால் ஆச்சர்யமும், பக்தியும் உடனே வந்து சேரும்.

நாம் நமது உடலை உண்பதற்கும், உறங்குவதற்கும் மட்டுமே பயன் படுத்துகிறோம்.

நமது உடல் முழுவதும் நமக்குக் கட்டுப் பட்டது அல்ல.

உடல் உள்ளுறுப்புகள் எதுவும் நாம் சொன்னபடி இயங்காது.

.நாம் சொன்னபடி இயங்கினால் மருத்துவரே தேவையில்லையே.

அவற்றைப் படைத்தவரும் கடவுள், இயக்குபவரும் கடவுள்.  

இதை நாம் உணர்ந்தால், கடவுள் பக்தி இயல்பாகவே வந்து விடும்.

4. கடவுளின் புனிதத்தை உணர்தல்.

கடவுள் அளவற்ற பரிசுத்தர் என்பதை இராயப்பர் உணர்ந்தார்.

பரிசுத்தத்தனத்தில் தனது தகுதியையும உணர்ந்தார்.

நாமும் உணர வேண்டும் என்று இராயப்பர் தன் செயலால் சொல்கிறார்.

நாம் உணர்ந்தால் பாவ சங்கீர்த்தனம் செய்யாமல் இயேசுவை உட்கொள்ள மாட்டோம்.

பாவ சங்கீர்த்தனம்தான் நமக்குத் தகுதியைத் தரும்.

இந்த நான்கு அம்சங்களையும் நாம் நிறைவேற்றினால் மட்டுமே நம்மால்  இயேசுவின் சீடர்களாக வாழ முடியும்.

இயேசுவின் சீடர்களாக வாழ்ந்தால் நாம் விண்ணக வாழ்வுக்கு ஏற்றவர்களாக மாறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment