Thursday, February 6, 2020

வாசித்தபடி நடக்கிறோமா?

வாசித்தபடி நடக்கிறோமா?
******************************

School assembly முடிந்து   மாணவர்கள் வகுப்பிற்குள் வந்துவிட்டார்கள்.

பத்து B.

 முதல் பிரிவு வேளை ஆங்கிலம்.

 பாடம் ஆரம்பித்து ஐந்தாவது நிமிடத்தில் ஒரு மாணவன் வகுப்பு வாசலில் வந்து நிற்கிறான்.

Late. எப்போதாவது பிந்திவருபவனை வகுப்பிலேயே தண்டனை,
'நஸ்காம் பழம்'
 கொடுத்து உட்கார வைத்துவிடுவேன்.

இவன் மூன்றாவது நாளாகப் பிந்திவருகிறான். 

தலைமை ஆசியரிடம்தான் அனுப்பவேண்டும்.

"போய் ஹெட்மாஸ்டரைப் பார்த்துவிட்டு வா."

போனான். ஐந்து நிமிடம் கழித்து வந்தான்.

"ஹெட்மாஸ்டரைப் பார்த்தியா?"

"பார்த்தேன், சார்."

"என்ன சொன்னாங்க?"

"ஒண்ணும் சொல்லல, சார்."

"அடி கொடுக்கலியா?"

"இல்லை, சார்."

"ஒண்ணுமே சொல்லலியா?"

"இல்லை, சார்."

"ஒண்ணுமே சொல்லாட்டா எப்படி வந்த?"

"கொஞ்ச நேரம் நின்னேன்.
'போன்'னு சொன்னாங்க. வந்துட்டேன்."

"சரி, போய் உட்கார்."

வகுப்பு முடிந்தவுடன் Headmaster ஐப் பார்க்கச் சென்றேன்.

"சார், பிந்திவந்த பையனை அனுப்பி வைத்தால், ஏதாவது தண்டனை கொடுத்து அனுப்பி இருக்க வேண்டும். 

At least advice ஆவது பண்ணியிருக்க வேண்டும்.

உங்ககிட்ட வந்தவனை ஒன்றுமே செய்யாம அப்படியே அனுப்புவச்சிட்டீங்க."

"உங்க வகுப்பில இருந்து யாருமே என்னை பார்க்க வரவில்லை, சார்"

உடனே சேர்வாடியை அனுப்பி பையனைக் கூட்டி வரச்சொன்னேன்.

வந்தான்.

"ஏல, இங்க வா. நீ எப்போ என்னைப் பார்க்க வந்த?"

"English period ல."

"நீ என் பக்கத்தில் வரவே இல்லையே!"

"வெராண்டாவில் நின்று பார்த்தேன், சார்."

"வெராண்டாவிலா?"

"ஆமா, சார்."

"ஏன் உள்ளே வரல?"

"உள்ள வேறு பையன்கிட்ட பேசிக் கொண்டு இருந்தீங்க, சார்."

"எப்போ வகுப்புக்கு போன?"

"நீங்க போன்னு சொன்னவுடனே போய்ட்டேன், சார்."

"உன்னை எப்போ போகச் சொன்னேன்?"

"அந்தப் பையனைச் சொன்னீங்க."

"பார்த்தீங்களா, சார்.

 நீங்க என்னை பார்த்துவிட்டு வரச் சொன்னீங்க. 

அவன் தந்திரமா வராண்டாவில் நின்றே பார்த்துவிட்டு போய்விட்டான்.

 உங்க சொல்லையும் மீறல, அடியும் வாங்கல!

பக்கத்ல வா. கையை நீட்டு.
இனிமே லேட்டா வந்தா அப்பாவைக் கூட்டிக் கொண்டு வர வேண்டும்."

"சரி, சார்."

"போ"

"சார், நம்மள விட பையங்களுக்கு மூளை அதிகம்."


அப்போ, நமக்கும் மூளை அதிகமோ?

இறைவன் விஷயத்தில் நாமும் அப்படித்தானே நடந்து கொள்கிறோம்.

நமது ஆன்மீக காரியங்களில் அனேக சமயங்களில் நாமும் அப்படித்தான் நடந்து கொள்கிறோம்.

கட்டளைகளைப் பின்பற்றுகிறோம்,

 ஆனால் அனுசரிப்பது இல்லை.

ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்கு வருகிறோம்.

 பூசை காண்கிறோம்.
'
 ஆனால் திவ்ய பலியில் பங்கேற்பது இல்லை.

We hear Mass without participating in it.

உடலளவில் கோவிலில் இருக்கிறோம்.

உள்ளத்தில் நம்மிடமே இருக்கிறோம்.

திரு விருந்தில் கலந்து கொள்கிறோம், 

ஆனால்  ருசித்துப் பார்ப்பது இல்லை.

We receive christ, but we don't taste Him.

ஆண்டவர் அருகில் இருக்கிறோம்,

 ஆனால் ஆண்டவரோடு இல்லை.

அவரோடு நாம் உரையாடினால் தானே அவரோடு இருப்பதாக அர்த்தம்!

ஆண்டவர் நம் உள்ளத்திற்கு வருகிறார் ஆனால் நமது உள்ளம் வேறு எங்கோ இருக்கிறது.

(ஒருவன் பெருமையாக சொன்னானாம்: 

"நேரு பேசிய கூட்டத்தில் நானும் பேசினேன்.'' 

"அப்படியா? ஆச்சர்யமாக இருக்கிறது!"

"இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

நேரு மேடையில் நின்று பேசினார். நான் கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்துகொண்டு என் நண்பனோடு பேசினேன்!)

ஞாயிற்றுக்கிழமை திருப்பலி காண வேண்டும் என்ற  கட்டளையை பெயரளவில் நிறைவேற்றுகிறோம்.

We obey the law to the letter, not to the Spirit.

ஞாயிறு திருப்பலிக்கு வராவிட்டால் பாவம்.

நாம் பாவமும் செய்வதில்லை புண்ணியமும் செய்வதில்லை.

நிலத்தை பண்படுத்துகிறோம், ஆனால் பயிரிடுவது இல்லை.


காலையில் எழுந்தவுடன் பைபிள் வாசிக்கிறோம்.

வாசிக்கிறோம், அவ்வளவுதான்.

இது பயணச்சீட்டு வாங்கிவிட்டு பயணம் செய்யாதது மாதிரி.

வாசித்தபடி நடப்பது இல்லை.

ஜெபமாலை சொல்லுகிறோம், ஆனால் தியானிப்பது இல்லை.

 ஒரு முறை ஒரு குடும்பம் முழுவதும் டிவி சீரியலில் மூழ்கி  இருக்கும்போது

 திருடர்கள் வீட்டிற்குள் புகுந்து டிவி தவிர

 மீதி எல்லா பொருட்களையும் அள்ளிக்கொண்டு போய் விட்டார்களாம்.

 மக்களுக்கு டிவியில் அவ்வளவு ஈடுபாடு!

 இந்த ஈடுபாடு நமக்கு ஞான காரியங்களில் இருக்கிறதா?

அன்பு செய்கிறோம்.

இறைவனையும் அன்பு செய்கிறோம். 

 அயலானையும் அன்பு செய்கிறோம்.

ஆனால் செயல் அளவில்?

ஆண்டவர் நம்மை அன்பு செய்கிறார்.

அவரது அன்பு வார்த்தைகளில் மட்டுமல்ல செயல்களில் வெளிப்படுகிறது.

நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக அவரே தனது உயிரை பலியாக ஒப்புக்கொடுத்தார்.

இதைவிட பெரிய அன்புச் செயல் இருக்க முடியுமா!

நாம் உயிரைக் கொடுக்காவிட்டாலும் கொஞ்ச நேரத்தையாவது கொடுக்கிறோமா?



"விண்ணக தந்தையே அன்றன்றுள்ள  அப்பத்தை எங்களுக்கு இன்று யாரும்."
(Give us our daily bread.)

"மகனே, என்னிடம் அன்றன்றுள்ள அப்பத்தை இன்று கேட்கிறாய்.

நானும் தருகிறேன்.

ஆனால் நீ வருடம் முழுதும் போதுமான அப்பத்தை வீட்டிலேயே சேமித்து வைத்திருக்கிறாயே.

அது யாருக்கு?"

அநேக சமயங்களில் நாம் எதற்காக ஜெபிக்கிறோம் என்று நமக்கே தெரிவதில்லை.

 வெறும் வார்த்தைகளைச் சொல்லுகிறோம், பொருள் தெரியாமல்.

"தந்தையே, எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் பொறுப்பது போல எங்கள் குற்றங்களைப் பொறுத்தருளும்."

"உனது தம்பியின் மேல் கோபமாக இருக்கிறாயே ஏன்?" 

"அவன் என்னை அவமானப் படுத்திவிட்டான், ஆண்டவரே "

"நீயும்தான் பாவத்தின் மூலம் என்னை அவமானப் படுத்தி விட்டாய். நான் உன் மீது கோபமாக இல்லையே!"

"ஆண்டவரே நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?"

"முதலில் உன் தம்பி மேல் உள்ள கோபத்தை விட்டு விடு.

அவன் என்ன செய்திருந்தாலும் அவனை மன்னித்துவிடு."

"ஆகட்டும் ஆண்டவரே. ''

நமது செபம் உள்ளத்தில் இருந்து வரவேண்டும், வெறுமனே உதட்டில் மட்டும் இருந்து அல்ல.

ஒருமுறை நண்பர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரத்தில் ஒருவன் வெள்ளரிக்காய் விற்றுக் கொண்டிருந்தான்.

காரை நிறுத்தி வெள்ளரிக்காய் வாங்கினார்.

வியாபாரி காசுக்காகக் கையை நீட்டினான்.

அவரும் பைக்குள் கையை விட்டு எடுத்துக் கொடுத்து விட்டார்.

வெள்ளரிக்காயை எல்லோரும் சுவைத்துச் சாப்பிட்டார்கள்.

வீட்டிற்குச் சென்று சட்டையைக் கழற்றியபோது சட்டைப் பைக்குள் வைத்திருந்த watch ஐக் காணவில்லை!

இதேபோல்தான் நாமும் ஆண்டவரிடம் எதைச் சொல்கிறோம் என்று புரியாமல் எதையாவது சொல்கிறோம்!

ஆண்டவரை நமது முழு இருதயத்தோடு அன்பு செய்வோம்.

அவருக்காக வாழ்வோம்.

அவருக்காக மட்டும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.


No comments:

Post a Comment