Sunday, February 2, 2020

"என்னைப் பின்செல்பவன் இருளில் நடவான்."(அரு. 8:12)

"என்னைப் பின்செல்பவன் இருளில் நடவான்."
(அரு. 8:12)
  ********************************
      
என்னுடைய 36 ஆண்டுகால  ஆசிரியர் பணியின் போது என்னிடமிருந்து மாணவர்கள் கற்றுக்கொண்டதை விட

 அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டதுதான் அதிகம். 

ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் போதிப்பது பாடப் புத்தகங்களைப் பார்த்து.

ஆனால் மாணவர்களிடமிருந்து ஆசிரியர்கள் கற்றுக்கொள்வது வாழ்க்கை பாடம்.

ஒருநாள் நல்லொழுக்க பாடம் முடிந்தவுடன் மாணவர்களைப் பார்த்து,

"இன்றைய பாடத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக் கொள்கிறீர்கள்? தெரிந்தவர்கள் கை தூக்குங்கள்." என்றேன்.

பாடம், பெற்றோர், ஆசிரியர்கள் பிள்ளைகளை என்ன வார்த்தைகளை கூறித் திட்டக் கூடாது என்பது பற்றி.

நாம்தான் அடிக்கடி கூறுகிறோமே,

"முட்டாள், முட்டாள். நீ உருப்பட மாட்ட. நீ எதுக்குமே லாயக்கில்லை. உன் தலையில் களிமண்தான் இருக்கு. etc.etc."

நிறைய பேர் கை தூக்கினார்கள்.

ஒரு மாணவனை எழுப்பி,

 "நீ என்ன கற்றுக் கொள்கிறாய்?"

"நான்ஆசிரியரானால்  இந்த பாடத்தை எப்படி கற்றுக் கொடுப்பது என்று கற்றுக் கொள்கிறேன்."

அவன் சொல்ல வந்தது புரிகிறதா?

"யாரும் கற்றுக் கொடுப்பதை தாங்களே அனுசரிப்பது இல்லை. 

 நானும் அனுசரிக்க மாட்டேன். ஆனால் நன்கு கற்றுக் கொடுப்பேன்."  

இந்த குணம் பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் மட்டுமல்ல எல்லா மனிதர்களிடமும் இருக்கிறது.

யாரும் மற்றவர்களுக்குக் கூறும் புத்திமதியைத் தாங்கள் அனுசரிப்பது இல்லை.

ஆனால்  ஒருவர் இருக்கிறார்.
நம் ஆண்டவராகிய இயேசு.
அவர் போதித்ததை எல்லாம் சாதித்தார்.

சாதித்ததை மட்டுமே போதித்தார்.

மனிதருக்குப் போதித்ததை தானே  சாதித்துக் காட்ட வேண்டும் என்பதற்காகவே அவர் மனிதன் ஆனார்.

அவர் கடவுள்.

நாம் அவருக்கு விரோதமாகத் தான் பாவம் செய்தோம்.

நாம் செய்த பாவங்களுக்கு நாம்தான் பரிகாரம் செய்ய வேண்டும்.

கடவுளாகிய அவர் மனித உரு எடுத்து நாம் செய்த பாவங்களுக்கு அவரே பரிகாரம் செய்தார்.

அவர் செய்த பரிகாரம்தான் நமது பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்று தந்திருக்கிறது.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத்தான் சிலுவையைச் சுமந்து அதில் மரித்தார்.

நாமும் நமது பாவங்களுக்காக நமது சிலுவையைச் சுமந்து

  நாமும் பரிகாரம் செய்து மரிக்க வேண்டும்.

சிலுவையை அவர் சுமந்தது பாவப் பரிகாரமாக மட்டுமல்ல

 நமக்கு முன் மாதிரிகையாகவும் கூட.

தனக்கு வரும் சிலுவையைச் சுமக்க விருப்பம் இல்லாதவன் இயேசுவின் சீடனாக இருக்க முடியாது.


"எளிய மனத்தோர் பேறுபெற்றோர் என்று போதித்தார்."

அதாவது உலக பொருள்களின் மீது பற்று இல்லாமல் வாழ வேண்டும் என்று போதித்தார்.

நாமே உலகிலுள்ள ஒரு பொருள்தான்.

ஆனால் கடவுள் உலகில் உள்ள பொருள் அல்ல. உலகைப் படைத்தவர்.

நமக்கு நாமே சொந்தம் இல்லாமல் இருக்கும்போது உலகின் எந்த பொருளையும் சொந்தம் பாராட்ட நமக்கு உரிமை இல்லை.

சொந்தமில்லாத பொருள் மீது பற்று வைக்கவும் உரிமை இல்லை.

ஆனால் கடவுள் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் சொந்தக்காரர்.

நமக்கு பற்றின்மைக்கு பாடம் கற்பிப்பதற்காக அவர் எதுவுமே  சொந்தம் இல்லாதவர் போல ஏழையாகப் பிறந்தார்.

உலகிலுள்ள அத்தனை அரண்மனைகளும் அவருக்கே சொந்தம்.

நாசரேத்து ஊரில் சூசையப்பருக்கு   ஒரு சொந்த  வீடு இருக்கிறது.

ஆனாலும் அவர் பிறப்பதற்காகத் தேர்ந்தெடுத்தது ஒரு மாட்டுக் கொட்டகையை.

பற்று இல்லாமல் வாழ வேண்டும் என்று நமக்கு கற்பிக்கும் முன் அவரே பற்று இல்லாமல் வாழ்ந்தார்.



அவரைக் கொல்லத்   தேடிய ஏரோது மன்னனை அவர் கொல்வதற்கு எவ்வளவு நேரம் 
ஆகும்?

ஆனால் அவர் அதைச் செய்யாமல், எந்த சக்தியும் இல்லாத ஏழையை போல மறைவாக எகிப்திற்குச் சென்றார்.

யூத சட்டப்படி

தலைப்பேறான எந்த ஆணும் ஆண்டவருடைய உரிமையாகக் கருதப்படும்"



ஆகவே சூசையப்பரும், மாதாவும் குழந்தை இயேசுவை கடவுளுக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுப்பதற்காக அவரை ஜெருசலேம் ஆலயத்திற்குக் கொண்டு வருகிறார்கள்


They brought him to Jerusalem, in order to present him to the Lord,


 இயேசு எனும் பெயரை நினைக்கும் போதெல்லாம் ஒரு முக்கியமான உண்மையை மனதில் நிலையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இயேசு கடவுள்.

முழுமையான கடவுள். (fully
 God)

அதே சமயத்தில்

முழுமையான மனிதன். (fully
 Man.)

நமக்கு வாழ்வில்   முன்மாதிரிகை காண்பிப்பதற்காக அவர் நம் நடுவில் மனிதனாக வலம் வருகிறார்.

நமக்கு அவரது மனித சுபாவம் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது.

அவர் ஒரு தேவ ஆள் என்பதை மனதில் இருத்திக் கொண்டு அவரைப் பற்றி வாசித்தால்தான் 

அவர் எந்த அளவுக்கு நமக்கு மாதிரிகை காட்டினார் என்பது தெரியும்.

மாதாவும் சூசையப்பரும்
இயேசுவை கடவுளுக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுப்பதற்காக,

அதாவது கடவுளை கடவுளிடமே காணிக்கையாக ஒப்புக் கொடுப்பதற்காக,

கோவிலுக்கு வருகிறார்கள்.

இயேசு யூத குலத்தை சேர்ந்தவர்

 ஆகையால் யூத மத சட்டப்படி அவரை காணிக்கையாக ஒப்புக் கொடுப்பது அவசியமாக இருக்கலாம்.

ஆனால் இயேசுவைப் பொறுத்தமட்டில் அது அவசியம் இல்லாத ஒரு நிகழ்ச்சி.

 ஏனெனில் அவர்தான் கடவுள்.

 கடவுளை கடவுளிடமே காணிக்கையாக கொடுக்க  வேண்டிய அவசியம் இல்லை.

ஆனாலும் அவரது மனித சுபாவத்தில் நமக்கு முன்மாதிரி காண்பிப்பதற்காக

 அவர் தன்னையே தன்னிடமே காணிக்கையாக ஒப்புக்கொடுத்தார்.

முன்மாதிரிகை என்றால் என்ன?

நாம் செய்ய வேண்டியதை அவரே செய்து காண்பிப்பது முன்மாதிரிகை.

பிள்ளைகள்  நல்லவர்களாக வாழ வேண்டுமென்றால் பெற்றோர் அவர்களுக்கு முன்மாதிரியாக  வாழ்ந்து காண்பிக்க வேண்டும்.

இயேசு முன்மாதிரிகை காண்பித்து விட்டார்.

நாம்?

அவரைப் பின்பற்றி நம்மை கடவுளுக்கு முழுமையாக காணிக்கையாக ஒப்புக் கொடுத்திருக்கிறோமா?

ஒவ்வொரு நாளும் காலையில் நம்மை இயேசுவின் திரு இருதயத்திற்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும் ஜெபம் சொல்லுகிறோம்.

சொல்லுகிறோம், செய்கிறோமா?

இயேசுவுக்கு நம்மையே காணிக்கையாக ஒப்புக்கொடுத்து விட்டால் நாம் முழுக்க முழுக்க இயேசுவுக்குத்தானே சொந்தம்!

நாம் இயேசுவுக்காக மட்டும்தானே வாழவேண்டும்?

வாழ்கிறோமா?

உண்டியலில் நாம் போட்ட காணிக்கையைத்  திரும்ப  எடுக்க நமக்கு  உரிமை இல்லை.

பூசை நேரத்தில் போட்ட காணிக்கையை 

பூசை முடிந்தவுடன் சாமியாரிடம் போய்,

 "சாமி, செலவுக்குப் பணமில்லை. நான் போட்ட காணிக்கையை என்னிடமே தந்து விடுங்கள்"

 என்று சொன்னால் எப்படி  இருக்கும்?

பூசையின் போது இயேசுவோடு நம்மையும் சேர்த்து காணிக்கையாக ஒப்புக் கொடுத்துவிட்டு

 வீட்டுக்கு வந்தவுடன் இயேசுவுக்குப் பிடிக்காத காரியங்களை எல்லாம் செய்தால் எப்படி?


"அவர் செபிக்கும்படி மலைக்குச் சென்று, கடவுளை வேண்டுவதில் இரவெல்லாம் கழித்தார்." (லூக்.6:12)

இயேசு செபிப்பதற்காக மலைக்கு சென்று இரவு முழுவதும் தனிமையில் செபித்தார்.

இயேசு கடவுள். செபம் என்பதே கடவுளோடு ஐக்கியமாக இருப்பது தான்.

கடவுள் தன்னோடு ஐக்கியமாக இருப்பது எப்படி?


தனிமையில் அமைதியாக நாம் செபிப்பதைத் தியானம் என்கிறோம்.

தியானத்தின்போது நாம் கடவுளை  நினைக்கிறோம்.

கடவுளை அறிகிறோம்.

கடவுளை அறிவதற்கும்

 .
கடவுளைப் பற்றி அறிவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

கடவுளைப் பற்றி அறிவது என்றால் அவரது பண்புகளைப் பற்றி நாம் பெறும் அறிவு. (knowledge)

.கடவுளை அறிவது என்றால் கடவுளோடு உறவில் இருப்பது. (Relationship)

சாத்தானுக்கு கடவுளைப் பற்றி நன்கு தெரியும்.

 ஆனால் கடவுளைத் தெரியாது.

பைபிள் படிப்பது கடவுளைப் பற்றி அறிவதற்கு அல்ல,

 கடவுளை அறிவதற்கு.

அந்த வகையில் கடவுள் செபிக்கிறார் என்றால் அவர் தன்னை அறிகிறார்.

நமக்கு தெரியும் கடவுள் தன்னை  நித்திய காலமாக அறிகிறார் என்று.

நித்தியமாக அவர் தன்னை அறியும்போது  நித்தியமாக பிறப்பவர்தான் மகன்.

தந்தைக்கும் மகனுக்கும் உள்ள அன்புதான் பரிசுத்த ஆவி.

ஆக ஒரே கடவுள் மூன்று ஆட்களாக இருக்கிறார்.

மூன்று ஆட்களும் நித்தியமாக ஐக்கியமாக, ஒரே கடவுளாக இருக்கிறார்கள்.

இது நித்திய கால நிகழ்ச்சி.

நித்திய காலமாக இயேசு தந்தையுடனும் பரிசுத்த ஆவியுடனும்  ஒரே கடவுளாக இருக்கிறார்.

அப்படியானால் இயேசு இரவில் மட்டும் மலை ஏறி ஜெபிப்பது  ஏன்?

நமக்கு முன்மாதிரிகை காண்பிக்கத்தான்.

அதிகாலையில் எழுந்தவுடன் நாம் ஜெபிப்பது அன்றைய நாளை இறைவனுக்கு ஒப்புக் கொடுப்பதற்கு.

வேலையெல்லாம் முடிந்தவுடன் நாம் இரவில் ஜெபிப்பது  இறைவன் அன்று நமக்கு செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி செலுத்துவதற்கு.

காலையில் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட பகல் வேலைகளும் ஜெபம் ஆக மாறி விடுகின்றன.

இது தினமும் நீடித்தால் நாம் வாழ்நாள் எல்லாம் கடவுளோடு  ஐக்கியமாக இருப்போம்.

ஆக கடவுளாகிய இயேசு  செபித்ததும்  நமக்கு முன்மாதிரிகை காட்டத்தான்.


 நமது பகைவர்களை நேசிக்க வேண்டும்,

நமக்குத் தீமை செய்தவர்களுக்கு நாம் நன்மை செய்ய வேண்டும் என்று   இயேசு போதித்தார்.

நாம் செய்த பாவத்தினால் நம்மை  கடவுளின் பகைவர்களாக மாற்றிக்கொண்டோம்.

கடவுள் நம்மைப் பவைக்கவில்லை.

 நாம்தாம் அவரைப் பகைக்க ஆரம்பித்தோம்.

அவர் நம்மை எப்போதும் நேசிக்கிறார்.


நம்மை நேசிப்பதால்தான் இயேசு மனிதனாகப் பிறந்து,

 நமக்காகப் பாடுபட்டு 

நாம் செய்த பாவத்திலிருந்து நம்மை மீட்டார்.

தன்னைச் சிலுவையில் அறைய காரணமாக இருந்தவர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டினார்.

இது ஒப்புக்காக செய்த ஜெபம் அல்ல. உண்மையாகவே செய்த ஜெபம்.

இங்கும் கடவுள் தன்னை நோக்கியே வேண்டினார் என்பதை மறந்து விடக்கூடாது,

 ஏனெனில் வேண்டியவரும் கடவுள்.

வேண்டப்பட்டவரும் கடவுள்.

The Sender and the receiver are one and the Same Person, God.

தான் செய்த ஜெபத்தைத் தானே நிறைவேற்றாமல் இருப்பாரா?

நாம் விண்ணகம் செல்லும்போது நம்மை முதல்முதல் வரவேற்பவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தவர்களாகத்தான் (யூதாஸ் உட்பட) இருக்கும்.

பகைவர்களை மன்னிக்கும் இயேசுவின்  முன்மாதிரிகையை நாம் எந்த அளவு பின்பற்றுகிறோம்?

(தொடரும்.)

லூர்து செல்வம்.








No comments:

Post a Comment