கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" (தொடர்ச்சி)
***************************
இயேசு பொது வாழ்க்கையில் ஈடுபட்டு நற்செய்தியை அறிவித்த காலத்தில்
அவரை கொல்ல சதித்திட்டம் தீட்டி
கடைசியில் அதை நிறைவேற்றிய விரோதிகளை
சாகும் முன் நண்பர்களாக்கி காட்டியவர்.
சாத்தான் புகுந்ததால் யூதாஸ்
ஆண்டவரை முப்பது வெள்ளிக் காசுக்கு ஆசைப்பட்டு காட்டிக் கொடுத்தான்.
ஆனால் இயேசு அவனை 'நண்பா' என்றுதான் அழைத்தார்.
வெறும் பேச்சுக்கா அப்படி சொல்லியிருப்பார்?
அவர் நம்மைப்போலவா?
நாம் காரியம் ஆக வேண்டும் என்றால் சாத்தானையும் காலைப் பிடிப்போம்.
'நானே சத்தியம்' என்று சொன்னவர் ஆண்டவர்.
ஆகவே சத்தியமாக
யூதாசை தன் நண்பனாக சொன்னது
வெற்று வார்த்தை இல்லை
சத்தியமான வார்த்தை.
சாகும் முன் யூதாசும் ஆண்டவருடைய நண்பனாகி விடுவான் என்பதை உறுதியாக நாம் சொல்லலாம்.
ஆண்டவர் கைதாகி விட்டார் என்பதை அறிந்ததும்
அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்
எதற்காக அவரைக் காட்டிக் கொடுத்தானோ
அந்த காசை தூர எறிந்துவிட்டு மனதில் துக்கம் தாங்கமாட்டாமல்
"ஐயையோ, மாசில்லாத ரத்தத்தை காட்டிக் கொடுத்து விட்டேனே"
என்று கத்தினான்.
தற்கொலை செய்துகொள்வது பாவம்தான்.
ஆனால் பாவத்தின் கனாகனத்தை எது தீர்மானிக்கிறது?
வெறும் செயலா?
இல்லை.
செய்யும்போது செய்பவரிடம் இருக்கும் மனநிலை.
முதலில் செய்வது சாவான பாவம் என்று அவர் அறிந்திருக்க வேண்டும்.
இரண்டாவது வேண்டுமென்றே (deliberately)
செய்திருக்க வேண்டும்.
உணர்ச்சி (emotion) புத்தியை பின்னால் தள்ளி விடுகிறது.
தன்னை மீறிய உணர்ச்சிவசப்பட்டு செய்யும் எந்த காரியத்திலும் deliberation அளவு குறையும்.
அதற்குத் தகுந்த படி கனாகனமும் குறையும்.
யூதாஸ் தற்கொலை செய்யும் போது உணர்ச்சிவசப்பட்டு செய்தான்.
He was activated by intense emotions.
அவனது மனநிலை கடவுளுக்கு மட்டும்தான் தெரியும்.
நாம் செயலைப் பார்க்கிறோம், கடவுள் மனதை பார்க்கிறார்.
'நண்பா' என்று அழைத்தவர் அவனை நண்பனாக்கிக் கொள்ள
அருள் வரங்களை அவனது ஆன்மா மீது கட்டாயம் கொட்டி இருப்பார்.
நமக்குத் தெரியும்
எங்கு பாவம் இருக்கிறதோ அங்கு நோக்கி ஆண்டவரின் அருள் வெள்ளம் பாயும்,
பாவியை மனம் திருப்புவதற்காக.
அகுஸ்தீன் என்ற பாவியைப் புனிதராக மாற்றியது ஆண்டவரின் அருள் வெள்ளம்தான்.
யூதாஸ் சாகும் முன் ஆண்டவரின் அருள் வெள்ளம் அவனை மனம் திருப்பியிருக்கும் என்று நம்புவதில் என்ன தவறு?
மனம் திரும்ப ஒரு வினாடியின் சிறு துளி (a small fraction of a Second) போதுமே!
யாரையும் கெட்டவன் என்று தீர்ப்பளிக்க நமக்கு கொஞ்சம் கூட உரிமை இல்லை.
ஆனால் ஒருவரைப்பற்றி நல்லபடியாக நினைப்பது தவறு இல்லை.
இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போது
"தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை"
என்று ஜெபித்தார்.
ஆண்டவரின் ஜெபம் ஒப்புக்கு செய்யப்பட்டது அல்ல. நிஜமாகவே செய்யப்பட்டது.
இயேசு தந்தையை நோக்கி ஜெபித்தார்.
தந்தை யார்?
கடவுள்.
இயேசு யார்?
கடவுள்.
இரண்டும் வெவ்வேறு கடவுளா?
ஒரே கடவுள்.
நம்மைப் பொறுத்தமட்டில் நமது ஜெபம் ஒரு விண்ணப்பம்.
நாம் வேறு .இறைவன் வேறு.
நாம் இறைவனிடம் விண்ணப்பிக்கிறோம்.
நமது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள இறைவன் விரும்ப வேண்டும்.
தனது மரணத்திற்குக் காரணமானவர்களை மன்னிக்கும்படி இயேசு தந்தையிடம் விண்ணப்பிக்கிறார் என்றால் அதன் பொருள் என்ன?
கடவுள் தனக்குத் தானே விண்ணப்பிக்கிறார்
என்பதுதானே.
நண்பர் ஒருவர் நம்மிடம் உதவி கேட்டு வருகிறார்.
அப்போது நமக்குள் நாமே ஒரு விண்ணப்பத்தை அனுப்புகிறோம்.
அதாவது நண்பருக்கு உதவி செய்யலாம் என்று.
அதாவது நண்பருக்கு உதவி செய்ய தீர்மானிக்கிறோம்.
இதேபோல்தான் இயேசு தந்தைக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பும்போது அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள அவரே தீர்மானித்து விட்டார் என்பதுதான் பொருள்.
விண்ணப்பிப்பவரும் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்பவரும் அதே கடவுள் தான் என்பது நமது உள்ளத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.
அப்படியானால் இயேசுவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு மன்னிப்பு உறுதியாகிவிட்டது.
சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் செய்த பாவத்திற்கு வருந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.
இயேசு தீர்மானித்த பின் அவரது அருள் வெள்ளம் அவரை கொன்றவர்களை நோக்கிபாயும் என்பது உறுதி.
அவர்களும் இயேசுவின் அருளால் உந்தப்பட்டு தங்களது பாவத்திற்கு மன்னிப்பு கேட்டிருப்பார்கள் என்று நாம் உறுதியாக நம்பலாம்.
ஆக இயேசு தான் போதித்த படி தமக்குத் தீமை செய்தவர்களை மன்னித்து தனது நண்பர்களாக ஏற்றுக்கொண்டார்.
குரு எவ்வழி,
சீடனும் அவ்வழி.
நாமும் நமக்கு தீமை செய்தவர்களை மனதார மன்னித்து நமது நண்பர்களாக ஏற்றுக்
கொள்வோம்.
To err is human,
To forgive is divine.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment