Sunday, January 5, 2020

"எங்கள் விருப்பம் மட்டும் எங்களுக்குப் போதும்"




"எங்கள் விருப்பம் மட்டும் எங்களுக்குப் போதும்"
********    **********     *******


"தாத்தா!"

"என்னடே, பேரப்பிள்ள ?"

"பைபிள்னா என்ன அருத்தம், தாத்தா?"

"இறைவனுடைய வார்த்தைன்னு அருத்தம்."

"அப்படின்னா?"

"இறைவன் நமக்குத் தரும் செய்தி. (message) "

"தாத்தா, இதை நான் தெரியாமல் கேட்கல..

தெரிந்ததினாலதான் கேட்கிறேன்."

"எதுக்கு? என்ன test பண்ணவா?"

"ஐயோ தாத்தா. நீங்க வாத்தியாரு. உங்க வேலையே teachingம் and testingம் தான்.  

சில சந்தேகங்கள நிவர்த்தி பண்ணணும், அதனாலதான் கேட்டேன்.

இப்போ, ஒரே இறைவன், ஒரே பைபிள்.

ஒரே பைபிளில் உள்ள செய்திகளுக்கு ஒரே அருத்தம்தான் இருக்க முடியும்.

1000 பேர் பைபிள் வாசித்தாலும் எல்லோருக்கும் கொடுக்கப்படுவது ஒரே செய்திதான்.

logic ஆ பார்த்தால் பைபிள் எல்லோரையும் இணைக்கணும்.

ஆனால் கிறிஸ்தவத்தில 38000 பிரிவினை சபைகள் இருப்பதாகச் சொல்லுகிறார்கள்.

சிலர் 40000 என்று கூட சொல்லுகிறார்கள்.

எல்லோருமே பைபிள் மட்டும் போதும் என்கிறார்கள்.

அது எப்படி ஒரே பைபிளுக்கு 38000 அருத்தம் இருக்க முடியும்? அதுதான் விளங்கல."

"உனக்கு கதைன்னா  
பிடிக்குமே. ஒரு குட்டிக்கதை சொல்லட்டுமா?"

"சொல்லுங்க."

"ஒரு ஊர்ல ஒரு வாத்யார் இருந்தாரு.

அவர்ட்ட 10 பையங்க படிச்சாங்க. 

ஒரு நாளு அந்த வாத்யாரு பையங்களுக்கு ஒரு கணக்கு போட்டாரு.

சின்னக் கணக்கு தான்.

பையங்க கணக்க செஞ்சி முடித்தவுடனே சிலேட்டுகள மேஜை மேல வச்சாங்க.

வாத்யாரு ஒவ்வொரு சிலேட்டா எடுத்துப் பார்த்தாரு.

10 பேருக்கும் 10 விடை வந்திருந்தது.

இரண்டு பேருக்குக் கூட ஒரே விடை வரல.

எல்லாரையும் வாய்பாட்டை எடுக்கச் சொன்னாரு.

பையங்களும் எடுத்தாங்க.

வாய்பாட்டை வாங்கிப் பார்த்தாரு.

10 வாய்ப்பாடும் 10 விதமா இருந்தது.

அவர்ட்ட இருந்த வாய்பாடு மாதிரி ஒரு வாய்பாடும் இல்ல!

பிறகு எப்படி அவர் எதிர் பார்த்த விடை வரும்?

இது குட்டிக் கதை இல்ல.

ரொம்ப பெரிய கதை!"

"கதை நல்லா இருக்கு.  ஆனால் அருத்தம் புரியலிய."


"அந்தக் கதைக்கு 38000 வாய்பாடுகள்னு பேர் வச்சா. புரியுமே!"

"இப்போ புரியுது. ஆனால் ஒரே பைபிள்தானே! 

38000 பைபிள்னு சொல்ல முடியாதே?"

"பையங்க வச்சிருந்த எல்லா புத்தகங்களுக்கும் வாய்பாடுன்னுதான் பேரு!

பேருதான் வாய்பாடு!

இப்போ புரியுதா?"

". அதாவது 38000 சபைகள் வைத்திருப்பதும் original Bible இல்லைன்னு சொல்றீங்களா?"

"சந்தேகம் இல்லாமல்.

original Bible ளில் மொத்தம் 73 புத்தகங்கள்.

பழைய ஏற்பாடு: 46
புதிய ஏற்பாடு:     27

ஆனால் கத்தோலிக்க 
 சபையை விட்டுப் பிரிந்து போனவர்கள்

  பழைய ஏற்பாட்டின் 7 
புத்தகங்களை விட்டு விட்டு 

(39 +27) புத்தகங்களை மட்டும் எடுத்துச் சென்றார்கள்.

ஒரு ஆளைக் கூட்டிக் கொண்டு போகும்போது கைகளையோ, கால்களையோ, தலையையோ வெட்டிப் போட்டு விட்டு கூட்டிச் சென்றால் எப்படி இருக்கும்?"

"ஏன் 7 புத்தகங்களை விட்டுச் சென்றார்கள்?"

"அவர்களது கொள்கைகளுக்கு ஒத்துவராத புத்தகங்களை விட்டுச் சென்றார்கள்."

"அதாவது இறைவார்த்தை அவர்களுக்கு ஏற்றதாய் இருந்தால் மட்டும்  ஏற்றுக்கொள்வார்கள். அப்படித்தானே?"

"ஆமா.


அதுமட்டுமல்ல,


எடுத்துச் சென்ற புத்தகங்களை மொழிபெயர்ப்பு  செய்யும் போது

அவர்களது கொள்கைக்கு ஏற்ப ஆங்காங்கே மாற்றங்களைச் செய்து கொண்டார்கள்.

வெளிப்பார்வைக்கு ஒன்றுபோல்தான் தெரியும்.

உள்ளே நுழைந்து பார்த்தால்தான் வித்தியாசங்கள் புரியும்.


கத்தோலிக்கத் திருச்சபையிடம் இருப்பது மட்டுமே original.

நாம் வைத்திருப்பதுதான்  பைபிள். 

அவரவர் கொள்கைக்கு அவரவர் Bible விருந்து மேற்கோள் காட்டுவார்கள்."

"ஒரு எடுத்துக்காட்டு?"

"ஒரு நண்பன் ஒரு Link கொடுத்து."போய்ப் பாருங்க" 
 என்றான்.

நானும் போனேன்.


போன இடத்தில் இருந்ததைப் பார்த்தேன்.

"The Bible’s answer

God selects a limited number of faithful Christians who, after their death, will be resurrected to life in heaven. (1 Peter 1:​3, 4) 

Once they have been chosen, they must continue to maintain a Christian standard of faith and conduct in order not to be disqualified from receiving their heavenly inheritance.​—Ephesians 5:5;Philippians 3:​12-​14. "

1 Peter 1:​3, 4 நமது பைபிளில் போய்  குறிப்பிடப்பட்ட வசனங்களைப் பார்த்தேன்.

"நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! இறந்தோரினின்று எழுந்த இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால், இறைவன் தம் இரக்கப் பெருக்கத்திற்கேற்ப நமக்கு வற்றாத நம்பிக்கையைத் தரும் புதுப்பிறப்பை அளித்தார்.

4 இதனால் நமக்குக் கிடைக்கும் உரிமைப் பேறு அழியாதது. மாசுற முடியாதது, வாடாதது." (1 இராய. |:3,4)

நமது பைபிள் வசனங்களுக்கு 

"God selects a limited number of faithful Christians who, after their death, will be resurrected to life in heaven.(1 Peter 1:​3, 4 ) 

என்பதா பொருள்?

அது அவர்களுடைய பைபிளில்!

அதே Link ல் உள்ள மற்றொரு பதிவு:


What will those who go to heaven do there?

They will serve alongside Jesus as kings and priests for 1,000 years. (Revelation 5:​9, ) 

நமது பைபிளுக்குச் சென்று

Revelation 5:​9, ஐப் பார்த்தேன்

"அவர்கள் புதியதொரு பாடலைப் பாடினர்: "சுருளை எடுக்கவும் அதன் முத்திரைகளை உடைக்கவும் தகுதியுள்ளவர் நீரே: ஏனெனில், நீர் பலியாக்கப்பட்டு உமது இரத்தத்தால் எல்லாக் குலத்தையும் மொழியையும் இனத்தையும் நாட்டையும் சார்ந்த மக்களைக் கடவுளுக்காக மீட்டீர்."
(திருவெளி. 5:9)

அவர்களுடைய பதிவிற்கும் நம்முடைய பைபிள் வசனங்களுக்கும்  ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

போதுமா? இன்னும் வேணுமா?"

"போதும், போதும்.

இதுக்கு மேல் சாப்பிட்டால் உடலுக்கு ஒத்துவராது."



கத்தோலிக்க திருச்சபைதான் எந்த எந்த புத்தகங்கள் பைபிளுக்குள் அடங்கும் என்பதை வரையறுத்தது. 

வரையறுத்து ஏற்றுக்கொண்ட
எல்லா புத்தகங்களும் சேர்ந்துதான் இறைவார்த்தை.


 அதாவது இறைவன் நமக்கு தந்த வார்த்தை.

 அதன் ஒரு பகுதியை நீக்கிவிட்டால்,

 இறைவனை நோக்கி,

 "கடவுளே, நீர் சொல்வதை முழுவதும் என்னால் ஏற்க முடியாது.

 எனக்கு பிடித்ததை மட்டும் ஏற்பேன்.

 மீதியை விட்டுவிடுவேன்" என்று சொல்வதற்குச் சமம்.

இறைவன் சொல்வதை

 இறைவன் சொல்வதற்காகவே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 நமக்கு விருப்பமானதை மட்டும் ஏற்றுக் கொண்டால்

 நாம் ஏற்றுக்கொண்டது இறைவனின் விருப்பம் அல்ல,

 நமது விருப்பம்.

 அதாவது,  நமது விருப்பத்தை நாம் நிறைவேற்றுகிறோம்.

இறைவனின் விருப்பத்தைக் கைவிட்டுவிட்டு

 நமது விருப்பத்தை மட்டும் நிறைவேற்றினால்

நமக்கு  இறைவனின் சன்மானம் எப்படி கிடைக்கும்?

பிரிவினை சபையினர் "பைபிள் மட்டும்" மட்டும் போதும் என்று சொல்வதற்கு 

"எங்கள் விருப்பம் மட்டும் எங்களுக்குப் போதும்"

என்று தான் அருத்தம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment