Friday, January 3, 2020

காணாமற்போகும் அறிவியலும், விசுவாசமும்.

காணாமற்போகும் அறிவியலும், விசுவாசமும்.
********    **********     *******
கடவுள் ஒன்றுமில்லாமையில் இருந்து இந்த பிரபஞ்சத்தைப் (universe) படைத்தார்.

இறைவன் கொடுத்த மாறாத  இயற்கை விதிகளின்படி (Laws of nature)
 பிரபஞ்சம் இயங்கிக்கொண்டு இருக்கிறது.

இயற்கை விதிகளைப் பற்றிய மனிதனின் ஆராய்ச்சியே அறிவியல்.

உதாரணத்திற்கு

 கல்லை மேல்நோக்கி எறிந்தால் அது பூமிக்கே  திரும்புகிறது.

 ஏன்?

இதை ஆராய்ந்த மனிதன்

 புவியீர்ப்பு விசை என்னும் இயற்கை விதியைக்  கண்டுபிடித்தான். 

Law கடவுள் கொடுத்தது.

 அதை கண்டு பிடிப்பது மட்டும் தான் மனிதன்.

மனிதரால் இயற்கை விதிகளை உருவாக்கவும் முடியாது மாற்றவும் முடியாது.

இருப்பதை கண்டுபிடிக்க மட்டும் முடியும். 

இதுதான் இயற்கை விதி என்ற முடிவுக்கு வர

 மனிதன் இரண்டு படிகள் ஏற வேண்டும்.

 முதலில் விதி பற்றிய கொள்கை (theory) ஒன்றை வகுக்க வேண்டும். 

பிறகு தங்கள் கொள்கையை நிரூபிக்க (Proof) வேண்டும்.

 நிரூபித்தால்தான் கொள்கை விதியாகும்.

நிரூபிக்கப்பட்ட விதிகளை நாம் ஏற்றுக்கொள்ளலாம்.

 நிரூபிக்கப்படாமல் கொள்கை அளவிலேயே இருப்பவற்றை

 நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

அவற்றை கொள்கை அளவிலேயே  ஏற்றுக் கொள்ளலாம்.



ஆன்மீகம்:


நாம் பேசப்போவது கத்தோலிக்க சமயத்தின் ஆன்மீகம் பற்றி.

 ஒவ்வொரு சமயத்தவரும்

 ஒவ்வொரு வகை ஆன்மீக கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள்.

 அவற்றைப் பற்றி  ஆராய்வது நமது  நோக்கமல்ல.

கத்தோலிக்கத் திருச்சபையின் ஆன்மீகத்தின் அடிப்படை விசுவாசம்.

 விசுவாசம் இல்லாவிட்டால் கத்தோலிக்க திருச்சபை இல்லை.

 நம்மிடம் விசுவாசம் இல்லாவிட்டால்

 நமது ஆன்மீக நடைமுறைகள் எல்லாம் வீண்.

விசுவாசம் இறைவன் நமக்கு அளித்திருக்கும் இலவசப்  பரிசு. 
(free gift) 

நமது ஆன்மீக வாழ்வின் உயிரே விசுவாசம் தான்.

 உயிரைக் கண்ணால் பார்க்க முடியாது.

 ஆனால் உயிர் உள்ளவன்தான் வாழ்வான். 

முதலில் இறைவனை நிபந்தனையின்றி ஏற்றுக் கொள்கிறோம்.

 அதாவது கடவுள் மேல் விசுவாசம் கொள்கிறோம்.

 அடுத்து இறைவனால் நமக்கு 
வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களை,

 'நிபந்தனை இன்றி
 ஏற்றுக் கொள்கிறோம்.

இதன் அடிப்படையில்தான் வாழ்கிறோம்.

விசுவாசத்தின் அடிப்படையில் நாம் வாழும் வாழ்வே ஆன்மீக வாழ்வு.


அறிவியல் உண்மைகளுக்கும் விசுவாச உண்மைகளுக்கும் இடையில் 

பாரதூர வித்தியாசம் உண்டு.

 அறிவியல் உண்மைகளை நிரூபித்தால்தான் ஏற்றுக் கொள்வோம்.

 ஆனால் விசுவாச உண்மைகளை அறிவியல் படி நிரூபிக்க முடியாது.

கடவுளை அறிவியல் ஆராய்ச்சிக்கூடத்திற்குள் கொண்டு வந்து நிரூபிக்க முடியாது.

இறையியல் உண்மைகளை விசுவாசத்தின் அடிப்படையில் மட்டுமே ஏற்றுக் கொள்கிறோம்.

பைபிளில் கூறப்பட்டிருக்கும் அனைத்தும் இறைவனின் வார்த்தைகள்.

 அவை நமக்கு இறைவனிடமிருந்து செய்திகளை (messages) தருகின்றன.

பைபிள் வசனங்களையும் சொற்களையும் விட அவை நமக்கு தரும் செய்திகளே முக்கியம்.

வசனங்களும் சொற்களும் செய்தியைத் தாங்கிவரும் வாகனங்களே. (Vehicles)

 நமக்கு முக்கியம் செய்தி.

 வாகனங்கள் அல்ல.

பைபிளின் ஆதியாகமம் நமக்கு தரும் செய்தி:
 
கடவுள் உலகத்தையும், மனிதனையும் படைத்தார்.

கடவுள் கொடுத்த கட்டளையை மீறியதால்

 மனிதன் பாவம் செய்தான்.

 மனிதன்  செய்த பாவத்திற்குப் பரிகாரம் செய்ய

 பாவமாசற்ற கன்னியிடமிருந்து 

 மனிதனாய்ப் பிறக்கப்போவதாக 

இறைவன் வாக்களித்தார்.

இறைவன் தந்த இந்த செய்தியை நாம்
 விசுவசிக்கிறோம்.

 உலகம் இறைவனால் படைக்கப்பட்டது என்பதை விசுவசிக்கிறோம்.

உலகம் எப்படி உண்டானது என்பது பற்றிய அறிவியலார்

  Big bang என்ற  ஒரு கொள்கை (theory) வைத்திருக்கிறார்கள். 

இதன்படி பிரபஞ்சத்தின் ஆரம்பம் 1,44, 000 கோடி ஆண்டுகளுக்கு முந்தி.

இந்த கொள்கை உண்மையா பொய்யா என்பதைப்பற்றி நமக்கு கவலை இல்லை.

 ஒன்று மட்டும் முக்கியம்.

 பிரபஞ்சம் இறைவனால் படைக்கப்பட்டது.

  உலகம் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியே.

நமது முதல் பெற்றோரைப் பற்றி அறிவியலார் ஒரு கொள்கையை வைத்திருக்கிறார்கள்.

அதுவும் theory தான்.(Not yet Proved) 

மனிதன் குரங்கிலிருந்து பரிணமித்தான் என்பது அவர்களது கொள்கை.

 அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை.

 ஆனால் மனிதனை ஆணும் பெண்ணுமாக படைத்தது இறைவன்தான் 

என்பது நமது விசுவாச உண்மை.

 இதுவே உண்மை.

1,44, 000 கோடி ஆண்டுகளுக்கு முன்பு போய் எந்த விஞ்ஞானியும் பிரபஞ்சம் உண்டானதைச் பார்க்கவில்லை.

பொருட்களை வெப்பப் படுத்தினால் விரியும் என்ற அறிவியல் விதியை 

நம்மிடம் நிரூபித்து காண்பிப்பது போல,

 உலகம் உண்டானது பற்றிய அவர்களது கொள்கையை

 நம்மிடம் நிரூபித்து காட்ட அவர்களால் முடியாது.

நிரூபிக்கப்பட முடியாததை. நம்ப வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் ஆன்மீகத்தைப் பொறுத்த மட்டில் 

நிரூபிக்க முடியாவிட்டாலும் நாம் ஏற்றுக் கொள்வதுதான் விசுவாசம்.

அறிவியலும்,  விசுவாசமும் ஒரே இறைவனிடமிருந்து வந்தவைதான்.

அறிவியல் ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல, 

ஆனால் சம்பந்தம் இல்லாதது.

அறிவியல் சடப் பொருளைப் பற்றியது.

 விசுவாசம் ஆன்மிகத்தை பற்றியது.

சடப்பொருளாகிய உலகம் அழியும் போது உலகைப் பற்றிய  அறிவியல் போய்விடும்.

 நாம் மோட்சம் 
 சென்றபின் விசுவாசம் போய்விடும்.

 ஏனெனில்  யாரைப் பார்க்காமல்  விசுவசித்தோமோ 

அவரை நேருக்கு நேர் பார்ப்போம்.

ஏனெனில்  யாரைப் பார்க்காமல்  அன்பு செய்தோமோ

 அவரை நேருக்கு நேர் பார்த்து அன்புசெய்வோம்.

மோட்சத்தில் விசுவாசம் தேவை இல்லை.

காணாததை ஏற்றுக் கொள்வதுதான் விசுவாசம்.

கண்டு ஏற்றுக்கொள்வது விசுவாசம் அல்ல.

அறிவியலும் இல்லாமல்,
விசுவாசமும் இல்லாமல் 

அன்போடு, அதாவது, கடவுளோடு, நிலைவாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.


No comments:

Post a Comment