தந்தையுடன் சில மணித்துளிகள்.
********************************
"அப்பா!"
"என்னடா?"
"உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும் போல் இருந்தது அதுதான் கூப்பிட்டேன்."
"என்ன வேண்டும். சொல்லு. "
"உங்க சப்தம் வருது. ஆளைக் காணவில்லை."
"நான் எப்பொழுதும் உன்னுடனேயே இருக்கிறேன்.
உனக்குள்ளும், புறமும், உன்னை சுற்றிலும் இருக்கிறேன்.
உண்மையில் நான் உனக்குள் இருப்பது போல, நீ எனக்குள்ளே இருக்கிறாய்."
"என்னோடு இருக்கும் உங்களை ஏன் என்னால் பார்க்க முடியவில்லை?"
"உன் உடல் சடப்பொருள் (Matter). நான் ஆவி. (Spirit)
சடப் பொருளாகிய உனது ஊனக் கண்ணினால் ஆவியாகிய என்னைப் பார்க்க முடியாது.
உன்னுடைய ஆன்மாவின் விசுவாசக் கண்ணினால்
மட்டுமே பார்க்க முடியும்."
"விசுவாசக் கண்ணினால் பார்ப்பதால்தான்
நான் உங்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன்.
ஆனால், ஆவியாகிய நீங்கள் சடப் பொருளாகிய என்னோடு எப்படி இருக்கிறீர்கள் என்பதுதான் புரியவில்லை.
ஏனெனில் நான் இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கிறேன்.
ஆவியாகிய உங்களால் இடத்தை அடைக்க (occupy) முடியாது.
அடைக்க முடியாத நீங்கள் அடைத்துக் கொண்டிருக்கும் என்னுடன் எப்படி இருக்கிறீர்கள்?"
(How can you, who cannot occupy Space, be with me who needs a space to occupy?)"
"எனது வல்லமையாலும் ஞானத்தாலும் எங்கும் இருக்கிறேன்.
எந்த வல்லமையால் பிரபஞ்சத்தை படைத்தேனோ
அதே வல்லமையால் அதை இயக்கிக் கொண்டுவருகிறேன்.
பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு வினாடியும் என்னால்தான் இயக்கப்படுகிறது.
எனது அளவற்ற ஞானத்தினால் நான் எங்கும் இருக்கிறேன்.
நான் படைத்த பொருள்கள் அனைத்தையும் அணு அணுவாக அறிவேன்.
நான் ஒரு வினாடி ஒரு பொருளை மறந்தாலும்,
அது இல்லாமல் போய்விடும்.
ஆனால், என்னால் மறக்க முடியாது.
If I forget a thing for a fraction a second, which I cannot, the thing will return to nothing.
எனது சர்வ வல்லமையால் நீ வாழும் பிரபஞ்சத்தைப். படைத்த நான்
அதே வல்லமையால் அதை ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வருகிறேன். ஒரு அணு கூட நான் இன்றி அசையாது.
உன்னோடு என்னுடைய வல்லமையாலும், ஞானத்தாலும் இருக்கிறேன்.
நீ விடும் ஒவ்வொரு மூச்சையும் என்னுடைய வல்லமையால்தான் உன்னால் விட முடிகிறது."
"அப்பா உங்களது அன்பான பராமரிப்பிற்கு என்னுடைய இதயபூர்வமான நன்றி.
அப்பா, நீங்கள் மாறாதவர் என்று எல்லோரும் கூறுகிறார்கள்.
நித்திய காலத்திலிருந்தே உங்களால் எப்படி மாறாமல் இருக்க விடுகிறது?"
"மாற்றம் எப்போது நிகழும்?"
"வளரும்போது அல்லது தளரும் போது."
"நான் எப்பொழுதும் நிறைவு உள்ளவராக இருக்கிறேன்.
| am always perfect.
என்னுடைய எல்லா பண்புகளும் அளவு இல்லாதவை.
அவைகளால் அதிகரிக்கவும், குறையவும் முடியாது.
ஆகவே என்னால் மாறவும் முடியாது."
"உம்மால் படைக்கப்பட்ட உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு அணுவையும் இயக்குபவர் நீரே.
அப்படியானால் மாற்றங்களை ஏற்படுத்தும் நீர் எப்படி மாறாமல் இருக்கிறீர்?"
"உலகில் ஏற்படும் மாற்றங்கள் எனது நித்திய கால திட்டத்தின்படியே ஏற்படுகின்றன.
2004 ல் ஏற்பட்ட சுனாமி உங்களைப் பொறுத்தமட்டில்
எதிர்பாராமல் நடந்திருக்கலாம்.
என்னை பொறுத்தமட்டில் அது எனது நித்திய கால திட்டத்தின்படி நடந்தது. "
"அழிவை ஏன் நித்திய காலமாக திட்டம் தீட்டினீர்கள்?"
"அது அழிவு அல்ல.
இயற்கை நிகழ்வு, இயற்கையில் ஏற்படும் மாற்றங்களில் ஒன்று.
நீ உண்ணும் உணவு எவ்வாறு சத்தாக உன் உடலோடு கலக்கிறது?"
"சீரணம் ஆகி, "
"நீ உண்ணும் உணவு எந்தவித மாற்றமும் அடையாமல் உன் வயிற்றில் அப்படியே இருந்தால் எப்படி சீரணம் ஆகும்?
வயிற்றில் உன் உணவு அடைவது மாற்றமா அழிவா?"
"மாற்றம்."
"இயற்கை நிகழ்வுகளும் அப்படியே."
"ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து போனார்களே!"
"இல்லை.
அதற்கு நீ வைத்திருக்கும் பெயர் இறப்பு.
என்னை பொறுத்த மட்டில் நான் உலகிற்கு அனுப்பிய மக்களை என்னிடம் அழைத்துக் கொண்டேன்.
உன்னையும் ஒரு நாள் அழைத்துக் கொள்வேன்."
"நான் ரெடி."
"எந்த நேரமும் அழைப்பு வரலாம்.
எப்பொழுதும் தயார் நிலையில் இருக்க வேண்டியது உனது பொறுப்பு."
"எல்லாம் உமது திட்டப்படியே நடந்தால் நாங்கள் ஏன் உம்மிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்க வேண்டும்?
கேளுங்கள் கொடுக்கப்படும் என்று ஏன் சொன்னீர்?
அதுமட்டுமல்ல.
நாங்கள் கேட்கும் வரை தராததை கேட்டபின் தந்தால்
நீர் மனம் மாறிவிட்டீர் என்றுதானே அருத்தம்?
தராது இருக்கும் உமது மனதை மாற்றத்தானே ஜெபிக்கிறோம்!"
"உன்னைப் பொறுத்தமட்டில் நேற்று நடந்தது ஞாபகத்தில் இருக்கும்.
இன்று நடந்து கொண்டிருப்பது தெரியும்.
ஆனால் நாளை என்ன நடக்கும் என்று உனக்குத்
தெரியாது.
உனது மொழியில் முக்காலமும் அறிந்தவன் நான்.
ஒரு ஒப்புமை கூறுகிறேன்.
ஒரு தகப்பன் தன் மகனின் எதிர்காலம் பற்றி திட்டமிடுகிறான்.
ஆனால் மகன் தந்தையின் திட்டப்படி நிச்சயமாக நடப்பான் என்று கூற முடியாது.
தந்தையின் திட்டப்படி மகன் நடக்காவிட்டால் திட்டம் தோல்வி அடைகிறது.
தோல்வியே இல்லாத திட்டத்தை வகுக்க வேண்டும் என்றால்...."
"நானே கூறிவிடுகிறேன்.
எதிர்காலத்தில் மகன் எப்படி நடந்துகொள்வான் என்று
தந்தைக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால்
தந்தை அதற்கு ஏற்றபடி திட்டம் தீட்டுவார்.
மகன் ஆசிரியர் பணியைத்தான் தேர்ந்தெடுப்பான் என்று தெரிந்திருந்தால் அதற்கான திட்டங்களைத்தான்
தீட்டுவார்."
"Correct.
நான் மனுக்குலத்தைப் படைக்க
நித்திய காலத்திலிருந்தே திட்டம் போடும்போதே
எனக்கு தெரியும்
முதல் பெற்றோர் என் கட்டளையை மீறி பாவம் செய்வார்கள் என்று.
ஆகவே மனுக்குலத்தை மீட்க
மனிதனாய்ப் பிறந்து பாடுபட்டு பாவங்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டுமென்று தித்திய காலத்திலிருந்தே திட்டம் தீட்டி விட்டேன்.
படைப்பு மீட்பு இரண்டுமே நித்திய கால திட்டங்கள்.
நீ காலத்திற்கு உட்பட்டவன்,
ஆகவே உனக்கு கடந்த காலமும், நிகழ் காலமும் மட்டும் தெரியும்.
எதிர்காலம் தெரியாது.
ஆனால் நான் காலத்திற்கு அப்பாற்பட்டவன்.
ஆகவே எனக்கு முக்கால நிகழ்ச்சிகளும் நிகழ் காலத்திலேயே தெரியும்.
சிந்திக்க, தேர்ந்தெடுக்க, செயலாக்க பரிபூரண சுதந்திரத்தோடுதான் (With full freedom of thought, Choice, and action)
மனிதனை படைக்க திட்டம்.
அனைத்து மனிதர்களும்
எப்படி சிந்திப்பார்கள், , தேர்ந்தெடுப்பார்கள் செயலாற்றுவார்கள் என்று
எனக்கு நித்திய காலத்திலிருந்தே தெரியும்.
நான் அவர்களது சுதந்திரத்தில் குறிக்கிடாது
அவர்களது சிந்தனை, தேர்வு, செயலுக்கு ஏற்ப என் திட்டத்தை அமைக்கிறேன்.
அப்படி நான் அமைக்கும் திட்டம் மக்களது மீட்பிற்கு உறு துணையாக இருக்கும்.
அடுத்த ஆண்டு கூட நீ என்ன உதவி கேட்டு என்னிடம் செபம் சொல்வாய் என்று எனக்கு நித்திய காலமாகத் தெரியும்.
ஆகவே அந்த செபத்திற்கான பதிலை நித்திய காலமாகவே தயாராகவே வைத்திருக்கிறேன்.
உரிய காலம் வரும்போது பதிலும் என்னிடமிருந்து நித்தியகால திட்டப்படி வரும்.
நான் மாறவேண்டிய அவசியம் இல்லை."
"உங்களை நோக்கி ஒரு போதும் செபிக்காதவர்கள்?"
."அவர்களும் எனது பிள்ளைகள்தானே.
அவர்களுக்கு தேவையானவற்றை கொடுத்து நானேஅவர்களை பராமரிக்கிறேன்.
அதிகமாக செபிப்பவர்களுக்கு அதிகமாக அருள் வரம் கிடைக்கும்."
"நீங்களே இல்லை என்பவர்கள்?"
"அவர்களையும் நான்தான் வாழவைத்துக் கொண்டிருக்கிறேன்."
"உங்களை அதிகமாக நேசிப்பவர்களை நீங்கள் அதிகமாக சோதிப்பதாகச் சொல்லுகிறார்களே, அது உண்மையா?''
"நீ வாத்தியார்தானே, மக்குப் பிள்ளைகளுக்கு பாஸ் பண்ணக் கூடிய பாடம் கொடுத்துவிட்டு,
நன்றாக படிக்கக் கூடியவர்களுக்கு அதிகமான பாடம் கொடுப்பதில்லை?
அது மாதிரிதான்."
"இன்னும் ஒரு கேள்வி இருக்கிறது.
பிரிந்த சகோதரர்கள் எங்களை விக்கிர ஆராதனை புரிபவர்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
அது பற்றி உங்களிடம் பேசவேண்டும்.
ஒரு சில மணித்துளிகள் கழித்து."
"சரி. ஒரு Tea குடித்துவிட்டு வா."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment